தினசரி செய்திகள்

Tuesday, December 31, 2013

நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்கோள் China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite

China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்கோள் China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite

வாஷிங்டன், டிச. 31-

சீனா தனது விண்வெளித் திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக அனுப்பியது. 150 சென்டி மீட்டர் அகலமுடைய சக்கரங்களை கொண்ட இந்த ஜேட் ராபிட் கருவியானது, நிலவில் இறங்கி மேற்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை பற்றி ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி நிலவின் மேற்பரப்பபில் மழைக்கடல் என்றழைக்கப்படும் மெரெ இம்ப்ரியம் பகுதி அருகே இந்த ரோவர் கருவியும் அதன் துணை கருவியும் ஆராய்ந்துக்கொண்டிருக்கும் காட்சிகளை நிலவை பற்றி ஆராயும் நாசாவின் செயற்கைக்கோள் (எல்.ஆர்.ஓ.) படம்பிடித்து வெளியிட்டுள்ளது.

சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு கலன்களும், நிலவின் இருண்ட மேற்பரப்பில் வெள்ளையாக தெரிவதையும், அதன் நிழல் மிக நீளமாக தெரியும் காட்சிகளையும் நாசாவின் புகைப்படம் காட்டுகிறது. 

இந்த ஜேட் ராபிட் திட்டத்தையடுத்து, ரோபாவை நிலவில் இறக்கி ஆராய சீனா திட்டமிட்டுள்ளது. 
...

Tuesday, December 24, 2013

அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார் New Indian envoy arrives in US amid diplomatic row

Img அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார் New Indian envoy arrives in US amid diplomatic row

வாஷிங்டன், டிச. 24-

தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் இன்று வாஷிங்டன் சென்றடைந்தார்.

விசா மோசடி குற்றச்சாட்டில் கோப்ரகடே கைது செய்யப்பட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட விரிசலை முடிவுக்கு கொண்டு வந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படவேண்டிய நிலையில், அவர் தூதராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சீனாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வந்த அவர் நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பின் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து, தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றுகளை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய பங்காற்றிய அவருக்கு, தற்போது தேவயானி மீது போடப்பட்ட வழக்கால் இரு நாட்டு உறவுகளிலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதே முக்கிய கடமையாக இருக்கும் என கருதப்படுகிறது.

முன்னதாக அவர் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தில் முதல் இந்திய செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

...

Friday, December 20, 2013

Lalu Prasad Yadav admitted to AIIMS hospital

Lalu Prasad Yadav admitted to AIIMS hospital லாலு பிரசாத்துக்கு உடல்நலக்குறைவு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி Lalu Prasad Yadav admitted to AIIMS hospital

புதுடெல்லி, டிச. 20-

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறைச்சாலையில் இருந்து விடுதலையான லாலு பிரசாத், பாராளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிக்க வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கப் போவதாக அறிவித்தார்.

இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராகி வந்த நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

...

Tuesday, December 10, 2013

தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம் : ஞானதேசிகன் பேட்டி congress new plan to won gnadesigan

congress new plan to won gnadesigan

சென்னை, டிச. 10–

மூதறிஞர் ராஜாஜியின் 135–வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது.

மாநில தலைவர் ஞானதேசிகன் தலைமையில் காங்கிரசார் ராஜாஜி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஞானதேசிகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் ஞானதேசிகன் கூறியதாவது:–

12 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்கிறது.

அடுத்த மாதம் முதல் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான புதிய வியூகங்கள் வகுக்கப்படும். குறிப்பாக வட்டாரம், நகரங்களில் காலியாக உள்ள நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி பற்றி கண்டறிய இருக்கிறோம்.

வடமாநில தேர்தல் முடிவால் காங்கிரசுக்கு பின்னடவு இல்லை. இந்த 4 மாநிலத்தில் மட்டும்தான் பாரதீய ஜனதாவுக்கு மூச்சுகாற்று உள்ளது. இந்த வெற்றி என்பது மாநில பிரச்சினைகளை உள்ளடக்கியது.

இவை பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக கருத முடியாது.

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு தி.மு.க. சார்பில் எழுதப்பட்ட கடிதத்தை நான் கட்சி மேலிடத்துக்கு அனுப்பிவிட்டேன். இந்த பிரச்சினையால் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். எங்களை பொருத்தவரை எந்த கட்சியுடனும் இடைவெளி வைக்கமாட்டோம்.

பாரதீய ஜனதாவில் வெற்றி பெற்றவர்களை சோனியாகாந்தி வாழ்த்தியுள்ளார். அதேபோல் சோனியா பிறந்த நாளுக்கு நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பொருளாளர் கோவை தங்கம், விடியல் சேகர், சைதை ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...

Monday, December 2, 2013

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரம்: தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் வானிலை மையம் Tamil Nadu rain will continue weather center announced

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரம்: தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்   வானிலை மையம்      Tamil Nadu rain will continue weather center announced

Sunday, December 1, 2013

காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்: ஜம்மு பிரச்சாரத்தில் மோடி பேச்சு Modi seeks discussion on Article 370

காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்: ஜம்மு பிரச்சாரத்தில் மோடி பேச்சு      Modi seeks discussion on Article 370

Friday, November 29, 2013

Perarivalan petitions 10th judgment on court order

பேரறிவாளன் மனு மீது 10 ந் தேதி தீர்ப்பு: தடா கோர்ட்டு உத்தரவு      perarivalan petitions 10th judgment on court order

Thursday, November 28, 2013

Dubai chosen to host 2020 World Expo trade

2020 ம் ஆண்டின் உலக வர்த்தக கண்காட்சி நடத்த துபாய் தேர்வு      Dubai chosen to host 2020 World Expo trade

Wednesday, November 27, 2013

Junior World Cup hockey

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத்சிங் கேப்டன்      Junior World Cup hockey

Tuesday, November 26, 2013

Country bomb blast near kudankulam 3 dies

கூடங்குளம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 3 பேர் பலி      Country bomb blast near kudankulam 3 dies

Mumbai attacks a grim reminder of security threat to India Modi

மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாதது மிகப்பெரிய ஏமாற்றமே: மோடி      Mumbai attacks a grim reminder of security threat to India Modi

BJP leader murder case police bakrudeen malik police investigation

BJP leader murder case police bakrudeen malik police investigation பரமக்குடி பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கு: போலீஸ் பக்ருதீன்–பிலால் மாலிக்கிடம் மதுரையில் தீவிர விசாரணை      BJP leader murder case police bakrudeen malik police investigation

Monday, November 25, 2013

Mylapore private company woman worker committed suicide

மயிலாப்பூர் தனியார் நிறுவனத்தில் 8–வது மாடியில் இருந்து குதித்து பெண் ஊழியர் தற்கொலை      Mylapore private company woman worker committed suicide

Saturday, November 23, 2013

Helen storms attacked 15 lakh acres paddy crop was submerged in floods in Andhrapradesh

ஹெலன் புயல் தாக்குதல்: ஆந்திராவில் 15 லட்சம் ஏக்கர் நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியது      Helen storms attacked 15 lakh acres paddy crop was submerged in floods in Andhrapradesh

Fire accident in Plastic bag company near Solavaram

சோழவரம் அருகே பிளாஸ்டிக் பை கம்பெனியில் தீ விபத்து: 20 எந்திரங்கள் எரிந்து நாசம்      Fire accident in Plastic bag company near Solavaram

Johnpandi says Please vote for People development work party

மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடும் அரசியல்வாதிக்கு ஓட்டு போடுங்கள்: ஜான்பாண்டியன்      Johnpandi says Please vote for People development work party

Friday, November 22, 2013

Nagercoil collision Vijayakanth to cancel the court case filed in Madurai

நாகர்கோவிலில் மோதல்: வழக்கை ரத்து செய்ய விஜயகாந்த் மதுரை கோர்ட்டில் மனு Nagercoil collision Vijayakanth to cancel the court case filed in Madurai

Monday, November 4, 2013

சென்னையிலும் ரெட் லைட் ஏரியா வேண்டும்! பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை! Need red light area in chennai

Need red light area in chennai

சென்னையிலும் ரெட் லைட் ஏரியா வேண்டும்! பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை!

மும்பையில் இருப்பது போலவே சென்னையிலும் விபச்சாரத் தொழிலாளர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு செக்ஸ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வருக்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளனர்.

போலீஸ் தொல்லை அதிகரிப்பதாலும், பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகளைத் தடுக்க சிவப்பு விளக்குப் பகுதி உதவும் என்பதாலும், தங்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து தப்புவதற்கு வசதியாகவும், மும்பையைப் போல சென்னையிலும் விபச்சாரத்திற்காக பிரத்யேகமாக ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இதுகுறித்து இந்திரா மகளிர் கூட்டுறவு அமைப்பு என்ற பெயரிலான செக்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கலைவாணி கூறுகையில், சென்னையில் மட்டும் 3000 செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்தியாவின் பெருநகரங்களில் சென்னை, பெங்களூரில் மட்டும்தான் தனியாக சிவப்பு விளக்குப் பகுதி இல்லை.

இதன் காரணமாக சென்னையில் செக்ஸ் தொழிலில் ஈடுபடும் பெண்கள் போலீஸ் தொல்லை, வன்முறைக் கூட்டங்களிடம் சிக்கிக் கொள்வது, மோசடிக்குள்ளாவது என அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் விபச்சாரம் சட்டத்துக்குட்பட்டதுதான். இருப்பினும் பொது இடங்களில் நின்று கொண்டு ஆண்களை அழைப்பது, விபச்சார விடுதி நடத்துவது, புரோக்கர்களை வைத்துக் கொண்டு ஆட்களைப் பிடிப்பது ஆகியவை குற்றச் செயல்களாக பார்க்கப்படுகின்றன.

விபச்சாரப் பெண்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அமைதியான முறையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் காத்திருந்தால் கூட கைது செய்கிறார்கள்.

எனவே இதுபோன்ற சிக்கல்களை விளக்கி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளோம். அதில், மும்பையில் உள்ளது போல சென்னையிலும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள், பாதுகாப்பான முறையில் தங்களது தொழிலை செய்து கொள்ள வசதியாக தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

தனியாக பகுதியை ஒதுக்கினால் பல நன்மைகள் உண்டாகும். பாதுகாப்பான செக்ஸ் உறவுக்கு வழி பிறக்கிறது. எய்ட்ஸ், எச்ஐவி போன்றவற்றை அடியோடு குறைக்கலாம். விஷமிகளின் சேஷ்டைகள் குறையும். உடல் ரீதியான, தொழில் ரீதியான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சமூகத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார் அவர்.

டெல்லியைப் பொறுத்தவரை கிராண்ட் பேஸன் சாலை, மும்பையில் காமத்திபுரா, கொல்கத்தாவில் சோனாகச்சி ஆகியவை சிவப்பு விளக்குப் பகுதிகளாகும். ஆனால் சென்னையில் அப்படி ஒரு பகுதி இதுவரை இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 90,000 செக்ஸ் தொழிலாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது. சென்னையில் மட்டும் 14,000 பேர் இருக்கிறார்களாம். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமான செக்ஸ் தொழிலாளர்கள் சென்னையில் இருக்கலாம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

shared via

Sunday, November 3, 2013

இந்தோனேசியாவில் களைப்பை போக்கி களிப்பை ஏற்படுத்தும் மலைக்க வைக்கும் மலைப்பாம்பு மசாஜ் Indonesian SPA treats with Python massage

இந்தோனேசியாவில் களைப்பை போக்கி களிப்பை ஏற்படுத்தும் மலைக்க வைக்கும் மலைப்பாம்பு மசாஜ் Indonesian SPA treats with Python massage

ஜகர்தா, நவ.4-

மனச் சோர்வா? உடல் களைப்பா? உடனடி நிவாரணம் பெற இளம் பெண்களிடம் மசாஜ் செய்து புத்துணர்வு பெறுங்கள் என்ற கவர்ச்சி வாசகங்களுடன் ஒரு கைபேசி எண்ணும் செய்தி தாள்களில் விளம்பரப் படுத்துவதுண்டு.

இத்தகைய விளம்பரங்களை காணும் சில சபலிஸ்ட் களின் லப்-டப் ஏக்கத்துக்கு எகிறி எகத்தாளம் போட தொடங்கிவிடும்.

மைதா மாவு நிறத்தில் தங்கச் சிலை போன்ற உடல்வாகு கொண்ட இளம் பெண்கள், வாழைத் தண்டு கால்களால் தங்களது முதுகில் ஊர்ந்து செல்வதை போலவும், வெண்டை விரல்களால் பிடரி பகுதியை நீவி விடுவதை போலவும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கற்பனை செய்ய தொடங்கும் அவர்கள் உமிழ்நீர் சொட்டுவதை கூட மறந்துபோய் பகல் கனவில் மிதக்க தொங்கி விடுவார்கள்.

ஆனால், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் ஒரு புதிய மசாஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விளம்பரங்களை பார்ப்பவர்கள் செய்தி தாளை தூக்கி எறிந்து விட்டு தலை தெறிக்க ஓட வேண்டிய நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் முதுகில் மலைப்பாம்புகளை ஊர்ந்து செல்ல வைத்து சிலிர்ப்பூட்டும் புதிய வகை மசாஜை இந்த ஸ்பா அறிமுகப்படுத்தியுள்ளது.

பாம்புகள் தங்களின் உடலின் மீது நெளிவதால் உண்டாகும் பயத்தின் விளைவாக மசாஜ் செய்து கொள்பவரின் உடலில் அட்ரனலைன் எனப்படும் ஒருவித ஹார்மோன் சுரக்கிறது.

மேலும், பாம்பின் கதகதப்பான தோல் மனித சருமத்தில் படுவதன் மூலமாக ஏற்படும் புதிய உணர்வின் பயனாக நமது ரத்த சுழற்சியில் புதிய வேகம் பிறக்கிறது.

மேற்கண்ட பலன்களுக்காக இந்த மலைப்பாம்பு மசாஜ் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் இந்த மசாஜ் பார்லரில் விஷத் தன்மையற்ற மலைப்பாம்புகளே பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்களிடம் பாம்புகள் எல்லை மீறாமல் இருக்க தேர்ச்சி பெற்ற உதவியாளர்கள் உடன் இருந்து கண்காணிப்பார்கள்.

சாதாராண மசாஜ் பார்லரில் செய்வது போல் மசாஜ் செய்யும் நபரிடம் வாடிக்கையாளர்கள் சில்மிஷம் செய்ய நினைத்தால்... மலைப்பாம்புக்கு குர்குர்ரே ஆகி மண்டையைப் போட வேண்டியது தான்.

...

shared via

சார்ஜா: பழுது பார்க்கும் போது லிப்ட் மேலே விழுந்து இந்தியர் பரிதாப பலி Indian killed in Sharjah lift accident

சார்ஜா: பழுது பார்க்கும் போது லிப்ட் மேலே விழுந்து இந்தியர் பரிதாப பலி Indian killed in Sharjah lift accident

சார்ஜா, நவ.4-

இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷைஜோ. சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூன்றாவது மாடியில் லிப்ட்டை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேகமாக இறங்கி வந்த லிப்ட் அவர் மீது மோதியது.

உடல் நசுங்கிய நிலையில் லிப்ட்டின் அடியில் சிக்கிக்கொண்ட ஷைஜோவை காப்பாற்ற சக ஊழியர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனையடுத்து, அவர்கள் போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த மீட்பு படையினர் ஷைஜோவை வெளியே எடுத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிர் பிரிந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.

விபத்து நடந்த உடனேயே தகவல் அளிக்காமல் சகபணியாளர்கள் தாமதம் செய்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என அல்ஹீரா போலீஸ் நிலைய மேஜர் அல் நக்பி என்பவர் கூறினார்.

...

shared via

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம் today kanda sasti festival start in tiruchendur

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம் today kanda sasti festival start in tiruchendur

திருச்செந்தூர், நவ. 3–

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

இன்று முதல் 5–ம் திருநாள் வரை மாலை 4.30 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

6–ம் திருநாளான 8–ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

பின்னர் வேள்விசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணி அளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

சூரசம்ஹாரத்திற்கு பின் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.

7–ம் திருநாளான 9–ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தபசு காட்சிக்கு புறப்படுகிறார்.

மாலை 5 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சியருளி, தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர், அலுவலக கண்காணிப்பாளர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

...

shared via

Saturday, November 2, 2013

பாகிஸ்தான்: கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிருடன் வந்தார் 13 year old molestation victim surface after buried alive

பாகிஸ்தான்: கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிருடன் வந்தார் 13 year old molestation victim surface after buried alive

இஸ்லாமாபாத், நவ. 2-

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தோபா தேக் சிங் என்ற இடத்தில் கடந்த வாரம் தனியாக சென்ற 13 வயது சிறுமியை வழிமறித்த 2 பேர் அவரை கதறக் கதற கற்பழித்தனர்.

அந்த சிறுமியை உயிருடன் விட்டால் விஷயம் வெளியே தெரிந்து ஆபத்தாகி விடும் என நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு குழியை தோண்டி மயங்கிய நிலையில் இருந்த அவளை உயிருடன் புதைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

மயக்கம் தெளிந்த சிறுமி, தான் மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை அறிந்து, முட்டி மோதி மண்ணை தள்ளி புதைகுழியில் இருந்து மீண்டு வந்தாள்.

அவ்வழியாக வந்த சிலர் அவளது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

இந்த கொடிய சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரை ஏற்றுக் கொள்ள போலீசார் மறுத்து விட்டனர்.

இதனையடுத்து, லாகூர் ஐகோர்ட் உயர் நீதிபதியின் தனிப்பிரிவில் அவர் புகார் அளித்தார். அதன் பின்னர், நீதிபதியின் உத்தரவையடுத்து அந்த சிறுமியை கற்பழித்து உயிருடன் புதைத்த 2 குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

...

shared via

Thursday, October 31, 2013

அஞ்சலி – செருப்பால் அடிப்போம்! இயக்குனர் கொதிப்பு! actress anjali and kalanjiyam latest news

அஞ்சலி – செருப்பால் அடிப்போம்! இயக்குனர் கொதிப்பு!

திடீரென்று காணாமல் போய்விட்டதால் தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி, தற்போது தெலுங்கில் நடித்து வந்த திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிம்மதியாக வலம் வருகிறார் . ஆனால் தமிழில் அஞ்சலியை வைத்து 'ஊர் சுற்றி புராணம்' படம் எடுத்த இயக்குனர் களஞ்சியமோ பிரச்சனைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறார்.

நேற்று(30.10.13) நடந்த 'வலியுடன் ஒரு காதல்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய களஞ்சியம் " சிறு பட தயாரிப்பாளர்களுக்கு திரையுலகில் சரியான ஆதரவு இல்லை. தயாரிப்பாளர்களுக்கென சங்கம் இருந்தும் நான் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறேன். சிறு பட தயாரிப்பாளர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையில் முதலீடு செய்து படம் எடுக்கிறோம். ஆனால் அந்த கஷ்டம் தெரியாமல் அஞ்சலி போன்ற நடிகைகள் ஓடி ஒளிந்துகொண்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி ஹைதராபாத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அஞ்சலி இப்போது எங்கே இருக்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை" என மிகவும் வருதி பேசினார்.

இயக்குனர் மு.களஞ்சியத்தை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ஜாக்குவார் தங்கம் "ஒரு கலைஞன் இந்த அளவுக்கு வேதனையாக பேசுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. கலைஞர்களின் கஷ்டம் புரியாமல் ஓடி ஒளியும் நடிகைகளை செருப்பால் அடிக்கவேண்டும். அஞ்சலி எங்கு ஓடிப்போய் ஒளிந்திருந்தாலும் பிடித்து வந்து களஞ்சியம் படத்தில் நடிக்கவைக்கவேண்டும். அப்போது தான் இனி வரும் நடிகைகள் ஒழுங்காக இருப்பார்கள். அஞ்சலி இங்கு வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்திற்கு இதுவரை ஆன செலவை கொடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்று கூறினார்.

shared via

என்னை மிருகத்தனமாக தாக்கிய கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்: நீதிபதி முன் பெண் கதறல் Allow me to kick off the torture criminal Judge prior girl Tears

என்னை மிருகத்தனமாக தாக்கிய கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்: நீதிபதி முன் பெண் கதறல் Allow me to kick off the torture criminal Judge prior girl Tears

மும்பை, அக். 31–

மும்பை சக்தி மில்ஸ் காம்பவுண்டில் சில மாதங்களுக்கு முன்பு பெண் போட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் போட்டோகிராபரை கொடூரமாக கற்பழித்தது.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது போல் மும்பையில் பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மும்பை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்த போது திடீர் என்று 18 வயது இளம் பெண் வந்து நீதிபதியிடம் தானும் இந்த 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டேன் என்று பரபரப்பு புகார் கூறினார்.

தான் டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை பார்ப்பதாகவும், கடந்த ஜூலை 31–ந் தேதி சக்தி மில்ஸ் காம்பவுண்டு பகுதிக்கு தனது நண்பருடன் சென்ற போது 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப்போட்டு தன்னை கற்பழித்ததாக கூறினார்.

அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அந்தப் பெண் அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார்.

திடீர் என்று என்னை கற்பழித்த போது நான் அவர்களுடன் போராடினேன். கயவர்கள் என்னை மிருகத்தனமாக தாக்கினார்கள். அவர்களை இப்போது அடித்து உதைக்க அனுமதி தாருங்கள். (இவ்வாறு கூறிய அந்த பெண் நீதிபதியைப் பார்த்து கதறி அழுதார்)

பின்னர் கற்பழிப்பு குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியுமா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு அந்த பெண் எனக்கு அவர்கள் அருகில் செல்லவே பயமான இருக்கிறது என்றார்.

உடனே நீதிபதி அந்தப் பெண்ணை குற்றவாளிகளிடம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறினார். இதையடுத்து 5 பேரில் 4 பேர்தான் தன்னை கற்பழித்தவர்கள் என்று அடையாளம் காட்டினார். சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் இதர பொருட்களையும் அந்தப் பெண் அடையாளம் காட்டினார்.

இது பற்றி வக்கீல் உஜ்வல் நிகாம் கூறுகையில், ''18 வயது பெண் திடீர் என்று கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் கதறி தனக்கு நேர்ந்த கொடுமையை சொன்னார். அவரது வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளியை அடிக்க அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டு அனுமதிக்க வில்லை'' என்£றர்.

...

shared via

Wednesday, October 30, 2013

அரியானாவில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது Call centre employee gang raped in Gurgaon 3 arrested

அரியானாவில் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது Call centre employee gang raped in Gurgaon 3 arrested

குர்கான், அக். 30-

டெல்லியில் ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் நிறைய பேர் அருகிலுள்ள அரியானா மாநிலம் குர்கானில் தங்கியுள்ளனர். நேற்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் இரவு நிகழ்ச்சியில் பல கால் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரவு நிகழ்ச்சி முடிந்ததும் விடியற்காலை 19 வயதான இளம் பெண் ஒருவர் கால்நடையாக வீடு நோக்கி சென்றார்.

அப்போது அவருக்கு தெரிந்த தினேஷ் என்ற நண்பர், அந்த இளம் பெண்ணிடம் மோட்டர் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவதாக கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண், மோட்டர் சைக்கிளில் அவருடன் சென்றுள்ளார்.

வீடு சென்றபோது தினேஷின் இரு நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். பிறகு அவர்கள் அனைவரும் அங்கு குளிர்பானம் அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அந்த இளம்பெண்ணிடம் கொடுத்துள்ளனர். இதில் மயங்கிய அந்த இளம்பெண்ணை மூவரும் கெடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிறகு நடந்த விபரம் குறித்து போலீசாரிடம் அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையிலும் அந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குற்றத்தில் ஈடுபட்ட தினேஷ், நவீன் மற்றும் சத்யதேவ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சத்யதேவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

...

shared via

Tuesday, October 29, 2013

டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை: நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் director kalanchiyam defamation case arrest warrant to actress anjali

டைரக்டர் களஞ்சியம் அவதூறு வழக்கில் ஆஜராகவில்லை: நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் director kalanchiyam defamation case arrest warrant to actress anjali

நடிகை அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சென்னையில் உள்ள வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி பாரதிதேவியும், சினிமா டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக அப்போது பரபரப்பு பேட்டி அளித்தார்.

ஐதராபாத் போலீசில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார். தற்போது ஆந்திராவிலேயே தங்கி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அஞ்சலியை கொடுமை படுத்தவில்லை என்றும், தன்னை இழிவு படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார் என்றும் டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல தடவை விசாரணைக்கு வந்தும் அஞ்சலி ஆஜராகவில்லை. கடந்த 12–ந் தேதி அஞ்சலிக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இன்று (29–ந்தேதி) ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று அஞ்சலி சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.

பத்திரிகை போட்டோ கிராபர்களும், டி.வி.கேமராமேன்களும் அங்கு திரண்டு நின்றனர். சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன்னிலையில் அஞ்சலி வழக்கு விசாரணைக்கு வந்தது. டைரக்டர் களஞ்சியம் கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் அஞ்சலி வரவில்லை. அஞ்சலி தரப்பில் வக்கீல் மேகநாதன் ஆஜராகி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அஞ்சலியால் வர இயலவில்லை என்றார்.

இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 22–ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். களஞ்சியம் தரப்பில் வக்கீல்கள் ஜெயப்பிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் ஆஜரானார்கள். அஞ்சலியை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் பட உலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அஞ்சலி விரைவில் சரண் அடைந்து பிடிவாரண்டை ரத்து செய்ய கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

கற்பழிப்பு குற்றவாளிகளின் அந்தரங்க உறுப்பை வெட்டவேண்டும்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஜித் பவார் Ajit Pawar stokes row with his remarks on rapists

கற்பழிப்பு குற்றவாளிகளின் அந்தரங்க உறுப்பை வெட்டவேண்டும்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஜித் பவார் Ajit Pawar stokes row with his remarks on rapists

மும்பை, அக். 29-

மகராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஜல்னா மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களின் அந்தரங்க உறுப்பை வெட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர்கள் மீது கருணை காட்டக்கூடாது, உடனே அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு எதிர்க் கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலம் கோரே கூறியதாவது:-

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் இயலாமையை மறைக்கும் நோக்கில், அஜித் பவார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பெண்களின் வாக்குகளை பெறவே அவர் இதுபோன்று கீழ்த்தரமாக அறிக்கைகளை வெளியிடுகிறார்.

முன்னர் மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக அவர் கூறிய கருத்துகளும் விவசாயிகளின் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அஜித் பவாரின் இந்த அறிக்கைகள் வெறும் கண் துடைப்பு வேலை.

இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடுவதை கைவிட்டு ஏழைகளின் உண்மையான பிரச்சினைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்தப்படாமல் உள்ள சட்டங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

...

shared via

Monday, October 28, 2013

உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு 4 thousand crore gold platinum invention at ground in UP

உ.பி.யில் பூமியில் புதைந்து கிடக்கும் 4 ஆயிரம் கோடி தங்கம் பிளாட்டினம் கண்டுபிடிப்பு 4 thousand crore gold platinum invention at ground in UP

லக்னோ, அக். 28–

உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கு இடையே பந்தெல்கன்ட் பகுதி உள்ளது. இப்பகுதியை 16–ம் நூற்றாண்டில் ராஜபுத்திர மன்னர்கள் ஆட்சி செய்தனர். தற்போது இப்பகுதியில் ஜான்சி, பாண்டா, சித்ரகூட், தாடியா, திகம்ப்ரரி ரத், லலித்பூர், அலகாபாத், கஷஷாமபி, சாகர், தமோ, ஒரை, பின்னா, ஹமித்ரா, நர்சிங்பூர், மொகடா, பன்டா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

தங்க புதையல் பந்தெல் கன்ட் பகுதியில் தொல் பொருள் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் தாவுன்டியா ஹேடர் கிராமத்தில் பூமியை தோண்டி அகழ்வாராய்ச்சி செய்தனர். அதில், அங்கு தங்க படிவங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் பந்தெல்கன்ட் பகுதியில் உள்ள ஜான்சி, ஜலாவுன், மசோபா, ஹமிபூர், பாண்டா, சித்ரகூட் மற்றும் லலித்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அங்கு தங்கம் தவிர பிளாட்டினம், சிலிகான் ஆஸ்பெஸ்டாஸ் பொட்டாஷ் உள்ளிட்ட தாது கனிமங்களும் புதைத்துகிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை தவிர கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியிலும் பூமியில் தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை மண்ணியல் மற்றும் சுரங்கங்களின் துறை இயக்குனர் பிங்கா உபாத்யாய் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் நிபுணர்களின் ஆய்வுப் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டன.

அதை வைத்து பார்க்கும் போது பந்தெல்கன்ட், சோன்பாத்ரா பகுதிகளில் தங்கப்படிவங்கள் கொட்டிக்கிடப்பது உறுதியாகி விட்டது. அனேகமாக இங்குள்ள தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட தாது படிவங்களின் மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொல்பொருள் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின் லலித்பூரல் உள்ள கிடார்டோரி மற்றும் குந்த் காவான் பகுதிகளில் தங்க படிவங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் நீளத்துக்கு பரந்து வியாபித்து கிடக்கிறது.

தற்போதைய மதிப்பு படி இங்கு 140 கிலோ தங்கம் உள்ளது. அதன் மதிப்பு ரூ.43 கோடியாகும். லலித்பூரில் உள்ள பீர்வாரில் 87.5 கிலோ தங்கம் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.26.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சோன், பாத்ராவில் உள்ள ஹார்டி மற்றும் பாகிசோடி பகுதிகளில் கிடைத்த மண் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கும் 1200 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் தங்க படிவங்கள் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் மட்டும் 25 கிலோ தங்கம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.7.5 கோடியாகும். அதே நேரத்தில் ஜான்சி மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் இங்கு மிகவும் பணம் கொழிக்கும் கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கு 4.5 கோடி டன் சிலிகா தாது உள்ளது. இதன் மதிப்பு ரூ.890 கோடி, இதை இப்பகுதியில் உள்ள இரும்பு, ஸ்டீல், செராமிக்ஸ் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடியும். அதை தவிர ஜான்சியின் பதாகான் – மவுரானிபூர் பகுதியில் 1.3 கி.மீட்டர் நீளத்துக்கு ஆஸ்பெஸ்டாஸ் தாது உள்ளது. அதன் மதிப்பு ரூ.1200 கோடி, லலித்பூரியிலும் சிலிகா தாது படிவங்கள் உள்ளன. இங்கு 1.2 கோடி டன் சிலிகா படிவங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 237 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இகானா – டாங்கிலி பகுதியில் பிளாட்டினம் இனத்தை சேர்ந்த கனிமங்கள் உள்ளன. இவை 3.5 கி.மீட்டர் தூரத்துக்கு விரிந்து கிடக்கிறது.

இது தமிழ்நாடு, கோவா, நாகாலாந்து மாநிலங்களில் இருப்பதை விட அதிகமாகும். சித்ரகூட் மாவட்டத்தில் செம்ரி மற்றும் ரேவா பகுதியில் உள்ள பாறைகளில் பொட்டாஷ் கனிமம் உள்ளது. மகோபாவில் 1 கோடி டன் சிலிகா உள்ளது. அதன் மதிப்பு ரூ.198 கோடி.

இந்தியாவை பொறுத்தவரை உத்தரபிரதேச மாநிலத்தில் தான் கனிமவளங்கள் மிக குறைவாக கிடைத்து வந்தன. அதுவும் இங்கு டோலமைட், சுண்ணாம்புக்கல், மேக்னசைட், பாஸ்போரைட் போன்ற சாதாரண கனிமங்கள் தான் கிடைத்தன.

தற்போது, இங்கு முதன் முறையாக தங்கம், பிளாட்டினம், சிலிகா, இஸ்பெஸ்டாஸ் போன்ற உயர்ரக கனிம வளங்கள் புதைந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே வளமான மாநிலமாக உத்தரபிரதேசம் திகழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

...

shared via

மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Teacher suspended gets foot massage from students in Maharashtra

மகாராஷ்டிராவில் மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை சஸ்பெண்ட் Teacher suspended gets foot massage from students in Maharashtra

மும்பை, அக்.28-

மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்களை கால்பிடித்து விடச் செய்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். அதன்படி ஒரு மாணவர், மேஜைக்கு அடியில் உட்கார்ந்து ஆசிரியையின் காலை பிடித்து மசாஜ் செய்யத் தொடங்கினான்.

இந்த காட்சியை ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து, பரவ விட்டதால் ஆசிரியையின் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த வீடியோ பதிவை ஆய்வு செய்த கல்வித்துறை, சம்பந்தப்பட்ட ஆசிரியையை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

...

shared via

இவர்கள் வருங்காலத் தூண்கள் !!! Varungala thoonkal

இவர்கள் வருங்காலத் தூண்கள் !!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் தெருவில் கிடக்கும் வேதனை காட்சி! போட்டோ நன்றி:-இளையராஜா டென்டிஸ்ட்

இதோ இது!!! இன்று திடீரென நடக்கவில்லை,இன்று நிறைய நடக்கிறது, மாணவர்களுக்கு போதையும் [டாஸ்மாக்] காமமும் [மொபைல் போன்-மெமெரி கார்டு]கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. குடியும் ஒரு மோசமான நோய் தான்.குடிகாரனிடம் தைரியமும் கட்டற்ற காமமும் அதீதம் இருக்கும்,அது கொண்டு சமூகத்தில் வெட்கப்படாமல் எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

பணம் வருகிறது என்று மாணவர்கள் எனத் தெரிந்தும் டாஸ்மாக்கில் மதுபானம் விற்கின்றனர்,மாணவர்கள் அங்கேயே குடிக்கின்றனர், இப்படி தெருவில் விழுந்து புரள்கின்றனர்.தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை விடாது.[ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்] மாணவர்களுக்கு சிகரெட்,பான்பராக்,மானிக்சந்த்,ஹான்ஸ்,சாந்தி பாக்கு, ஃபவிகுவிக்,டைப்பிங் ஒயிட்னர் விற்கும் கடைக்காரர்கள் கூட மனசாட்சி இல்லாதவரே,இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பரத்தையரை கூட்டிக்கொடுத்து பிழைக்கலாம்.அவர்கள் வருங்கால தூண்களின் அஸ்திவாரத்தையே சிதைப்பவர்கள்.

நேற்று ஒரு 10ஆம் வகுப்பு மாணவன்,ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்கவில்லை என ஒரு 7ஆம் வகுப்பு மாணவனை செப்டிக் டான்கில் தள்ளி மூழ்கடித்து கொன்றுள்ளான்,தன் அப்பா,நெருங்கிய உறவுகள் சிகரட் குடித்தாலோ,மது குடித்தாலோ அவன் அதை தவறென கருதுவது இல்லை,வீட்டில் ஒழுக்கம் இருந்தால் வெளியிலும் ஒழுக்கமாக இருப்பான்,இன்றைய பெற்றோர் ஒருவர் மாற்றி ஒருவர் நேரம் செலவிட்டு கண்காணிக்க வேண்டியது அவசியம்.

போதை போதாமல் போகையில் நிறைய குடிக்க தோன்றும்,நிறைய குடிக்க நிறைய செலவு ஆகையில் மாணவர்கள் அப்பா வாங்கித் தந்த பைக்கில் இருவராகவோ,மூவராகவோ சென்று தாலிச்சங்கிலி அறுக்கின்றனர்.குடி போதையில் அம்மாவின் தாலிச்சங்கிலியையே தெருவில் வைத்து அறுத்தான் ஒரு மாணவன் எனப் படிக்கும் காலம் தொலைவில் இல்லை.ஒரு நாள் போலீஸ் நம் வீட்டுக்கு தேடி வரும் முன்னர் சுதாரித்துக் கொள்வோம்.பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவோம்.அவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம்.கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் நடத்தினால்,இது தான் நடக்கும்...நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கல்லூரி மாணவர்கள் குடி போதையில் தெருவில் கிடக்கும் வேதனை காட்சி!

shared via

ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது Spectrum case interrogation has started Dayalu Ammal

ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது Spectrum case interrogation has started Dayalu Ammal

சென்னை, அக். 28–

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

ஆனால் தயாளு அம்மாள் உடல் நிலை சீராக இல்லாததால் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டில் தயாளு அம்மாள் மகள் செல்வி மனு தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம் தயாளு அம்மாளின் உடல் நிலையை பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ குழுவை நியமித்து அனுப்பியது.

அவர்கள் தயாளு அம்மாளை பரிசோதித்து டெல்லிக்கு பயணம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை தகுதியாக இல்லை என்று கோர்ட்டில் அறிக்கை அளித்தது.

இதை தொடர்ந்து தயாளு அம்மாளின் சாட்சியத்தை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று பதிவு செய்யும்படி சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலனிடம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி கேட்டுக் கொண்டார்.

அதன்படி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்த கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு நீதிபதி கோபாலன் இன்று காலை 9.50 மணிக்கு சென்றார். அங்கு தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தினார். அவர் கூறிய தகவல்களை சாட்சியமாக பதிவு செய்தனர்.

கோர்ட்டு உத்தரவுபடி இன்றைய விசாரணையின் போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி எம்.பி, முன்னாள் மத்திய மந்திரி ராசா சார்பில் அவரது வக்கீல், கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரும் ஆஜரானார்கள். சரத்குமார் தரப்பில் ஆஜராக அவரது வக்கீல் சுசில்குமார் வீல் சேரில் வந்தார்.

தாயாளு அம்மாளிடம் விசாரணை நடந்ததை தொடர்ந்து கருணாநிதி வீட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

...

shared via

Sunday, October 27, 2013

இறந்த மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற மறுமணம் செய்து கொண்ட 90 வயது சவுதி இளைஞர் 90 year old man remarries to keepup deceased wifes wish

இறந்த மனைவியின் இறுதி ஆசையை நிறைவேற்ற மறுமணம் செய்து கொண்ட 90 வயது சவுதி இளைஞர் 90 year old man remarries to keepup deceased wifes wish

ரியாத், அக். 28-

சவுதி அரேபியாவில் உள்ள தயிப் நகரை சேர்ந்தவர் ஃபட்டீஸ் அல் தகாவி (90). இவருடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து 7 மகன்கள், 5 மகள்கள் என ஒரு டஜன் குழந்தைகளை பெற்றெடுத்த இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.

மரணப்படுக்கையில் கிடந்த அவர், என் மூச்சுக்கு பிறகு நிங்கள் யாரையாவது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாக்குறுதி வாங்கி கொண்டார்.

தாய்க்கு அளித்த வாக்குறுதியை தந்தை காப்பற்ற வேண்டுமே.. என்ற எண்ணத்தில் ஃபட்டீஸ் அல் தகாபியின் பிள்ளைகள் பெண் தேடும் படலத்தில் இறங்கினர்.

இளம் வயது பெண்களை நிராகரித்த மகள்கள் 53 வயதான குழந்தை பாக்கியமில்லாத விதவையை தேர்வு செய்தனர். அந்த பெண்ணுடன் 90 வயது இளைஞர் ஃபட்டீஸ் அல் தகாபிக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது.

...

shared via

பாட்னா – டெல்லியில் பொதுக்கூட்டம்: நரேந்திரமோடி–ராகுல் இன்று பிரசாரம் Patna delhi meeting modi rahul propaganda

பாட்னா – டெல்லியில் பொதுக்கூட்டம்: நரேந்திரமோடி–ராகுல் இன்று பிரசாரம் Patna delhi meeting modi rahul propaganda

புதுடெல்லி, 27–

இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும், ராகுல்காந்தி முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறார்.

நரேந்திரமோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கு போட்டியாக ராகுல்காந்தியும் பிரசார களத்தில் குதித்துள்ளார்.

பொதுக்கூட்டங்களில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்கள். நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசின் ஊழல்களையும், விலைவாசி உயர்வு, குடும்ப அரசியல், எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல், வெங்காயம் விலை உயர்வு போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி வருகிறார்.

இதற்கு ராகுல்காந்தியும் பதிலடி கொடுத்து வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், முசாபர் நகரில் பாரதீய ஜனதா தான் கலவரத்தை தூண்டியது என்றும், கலவரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு கொண்டு நாசவேலைகளை அரங்கேற்றியதாக கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி பேச்சு குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பாரதீய ஜனதா நாளை புகார் செய்ய உள்ளது. இந்தூர் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இன்று நரேந்திரமோடி பீகார் மாநிலம் பாட்னாவில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும், ராகுல்காந்தி டெல்லியில் நடைபெறும் கூட்டத்திலும் பேசுகிறார்கள்.

பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி முறிந்த நிலையில் அங்கு முதல் முறையாக இன்று பிரசார கூட்டத்தில் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

பாரதீய ஜனதாவின் எதிரியான முதல்–மந்திரி நிதிஷ்குமாருக்கு தனது பலத்தை காட்டுவதற்காக கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் கலந்து கொள்ள 14 சிறப்பு ரெயில்களும், 3 ஆயிரம் பஸ்களும் இயக்கப்பட்டன. அவர்கள் இன்று காலையே பாட்னா வந்து குவிந்துள்ளனர்.

இது பாரதீய ஜனதாவின் கவுரவ பிரச்சினை என்றும், பாட்னாவில் கூட்டம் நடை பெறும் காந்தி மைதானத்தில் 5 லட்சம் தொண்டர்கள் கூடுவார்கள் என்றும் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். பாட்னாவில் எங்கு பார்த்தாலும் தொண்டர்கள் கூட்டம் காணப்பட்டது.

கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகையில், பீகார் மாநில வளர்ச்சிக்காக அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவார், ஏற்கனவே இதே கோரிக்கையை முதல்–மந்திரி நிதிஷ்குமாரும் வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவில் நரேந்திர மோடி பேசும் அதே வேளையில் டெல்லியில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.

டெல்லி மங்கோள்புரி பகுதியில் ராகுல்காந்தி பேசுவதற்காக பிரமாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நரேந்திரமோடிக்கு தொண்டர்கள் கூட்டம் வருவது போல் ராகுல்கூட்டத்திலும் தொண்டர்கள் கூட்டத்தை காட்ட காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

டெல்லி சட்ட சபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் காந்தி இன்று முதல் முறையாக பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் வெங்காயம் விலை உயர்வு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதை கையில் எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்வதால் ராகுல் காந்தியும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

...

shared via

டெல்லியில் நள்ளிரவில் ராகுல்காந்தி, காரில் தனியாக நாய்களுடன் உலா வந்தார் Rahul Gandhi in Delhi midnight the dogs alone in the car came with a tour

டெல்லியில் நள்ளிரவில் ராகுல்காந்தி, காரில் தனியாக நாய்களுடன் உலா வந்தார் Rahul Gandhi in Delhi midnight the dogs alone in the car came with a tour

புதுடெல்லி, அக். 27–

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை வீரர்களும் உடன் சென்று அவரை சூழ்ந்து நின்று பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

ஆனால் நேற்று இரவு ராகுல் காந்தி டெல்லியில் தனது வீடு அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் பாதுகாப்பு அதிகாரிகளோ டிரைவரோ இல்லாமல் தனியாக காரில் சென்ற தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் நாய்களுடன் உலா வந்தார். ரேஸ் கோர்ஸ் சாலை சிக்னலில் வந்தபோது அங்கு ஒரு கார் நின்றிருந்தது. காரை ஓட்டி வந்தவர் திடீர் என்று கார் கண்ணாடியை இறக்கி விட்டு பெண்ணிடம் அவரது நாய்க்குட்டி பற்றி பேசினார்.

என்ன உணவு கொடுக்கிறீர்கள்? எப்படி அதன் உடல் நலத்தை பேணுகிறீர்கள்? என்று பெண்ணிடம் விசாரித்தார். அவரைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்கு ஆச்சரியம். காரணம் காரில் இருந்தவர் ராகுல் காந்தி. டிரைவர் இருக்கையில் அமர்ந்து அவரே காரை ஓட்டிவந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. காரில் அவருடன் விலை உயர்ந்த பிரவுனி ரக நாய்கள் இருந்தன. ராகுல்காந்தியும் தனது பிரவுனி பற்றி அந்தப் பெண்ணிடம் விவரித்தார்.

பாதுகாப்பு வளையத்தை மீறி ராகுல்காந்தி நள்ளிரவில் காரில் தனியாக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்த பெண் தனது பெயர் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இதுபற்றி இணைய தள பேஸ் புக்கில் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் பார்த்தது ராகுல்காந்தியைப் போன்ற ஒருவராக இருக்கலாம் என்று ஒருவர் கிண்டல் அடித்துள்ளார்.

...

shared via

மின்கடத்தில் நிறுவன இணையதளத்தில் குறிப்படவில்லை: கூடங்குளம் மின்சாரம் எங்கே போனது? உதயகுமார் கேள்வி electric company did not electric smuggling website states Kudankulam power where udayakumar question

மின்கடத்தில் நிறுவன இணையதளத்தில் குறிப்படவில்லை: கூடங்குளம் மின்சாரம் எங்கே போனது? உதயகுமார் கேள்வி electric company did not electric smuggling website states Kudankulam power where udayakumar question

ராதாபுரம், அக்.27-

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 

2011 டிசம்பர் மற்றும் 2012 மார்ச் என இருமுறை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், தற்போது ரஷ்யாவுக்கு போயிருந்தபோது, கூடங்குளம் வெற்றி செய்தியை புதினுக்கு அளித்து, 3-4 உலைகளுக்கான ஒப்பந்தத்தையும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார்.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி எனும் நாடகம் அரங்கேற தொடங்கியது. மன்மோகன் சிங் ரஷ்யாவுக்கு சென்ற கடந்த 20-ந்தேதி நள்ளிரவு 12.16மணிக்கு மின் உற்பத்தி செய்ய முயற்சி செய்து தோற்றுப்போன விபரம், தென் பிராந்திய மின் விநியோக மைய இணையதளத்தில் பதிவாகியிருக்கிறது.

கூடங்குளத்தில் வாழ்வா, சாவா என போராடிக்கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி துறை, இந்திய அணுமின் கழகம், பிரதமர் அலுவலகம், மத்தியஅரசு, காங்கிரஸ் கட்சி என அனைவரும் ஒன்றாக சேர்ந்து, பிரதமர் ரஷ்யாவை விட்டு வெளியேறும் நேரத்தில் அக்டோபர் 22-ந்தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் மின்சாரத்தை மின்தொகுப்போடு இணைத்துவிட்டோம் என்று அறிவித்தனர். இரண்டாம் நிலை கோளாறுகளால் அந்த முயற்சியும் அன்றுகாலை 4.34மணிக்கு தோல்வியில் முடிந்தது.

நாட்டுமக்களின், ஊடகங்களின், சர்வதேச சக்திகளின் எதிர்பார்ப்பு ஏறிக் கொண்டிருந்த நிலையில், கூடங்குளம் நிர்வாகத்தினர் நேற்று முன்தினம் (25-ந்தேதி) இரவு 9.43மணிக்கு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி விட்டதாக அறிவித்தார்கள். ஆனால் தமிழ்நாடு மின்கடத்தல் நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று(26-ந்தேதி) காலை 7.50மணிக்கு கூடங்குளம் மின்சாரம் குறிப்பிடப்படவே இல்லை.

மத்திய உற்பத்தி நிலையங்கள் வரிசையில் கல்பாக்கம்,  காக்ரப்பார் அணுமின் நிலையங்களிலிருந்து வரும் தமிழகத்தின் பங்கான 331, 227 மெகாவாட் மின்சாரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படியானால் கூடங்குளம் மின்சாரம் எங்கே போயிற்று? இப்படி ஓர் அரசு தன் மக்களை ஏமாற்றுமா? என்று பலரும் கேட்கிறார்கள்.

இந்த அரசின் பிரதமர் ஓரிரு வாரங்களில் மின்சாரம் வரும் என்று 2வருடங்களுக்கு முன்பே சொல்லவில்லையா? இவரின் அமைச்சர்தானே 89 முறை இன்னும் 15 நாளில் மின்சாரம் வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த அரசுதானே 275 முக்கியமான நிலக்கரி கோப்புக்களை காணவில்லை என்று சொல்கிறது. இந்த அரசுதானே 2ஜி ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகள் பற்றி மக்களிடம் பொய்யும், புரட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால், இந்திய அணுசக்தித் துறை எந்த நேரத்திலும் யாரிடமும் எந்த உண்மையையும் சொன்னதாக வரலாறே கிடையாது.

கூடங்குளத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான பூதங்கள் கிளம்பும். ஆக மொத்தத்தில் கூடங்குளத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது பரிசோதனைகள்தானே தவிர, முழு அளவிலான வணிக உற்பத்தி அல்ல. அது நடக்குமா, எப்போது நடக்கும் என்பவையெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். எனவே தான் கடந்த 25-ந்தேதி தமிழகத்தின் மின்சார நிலைமை பற்றி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், கூடங்குளம் மின்சாரத்தை பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நிகழ்ந்த பிழையோ, விடுபடவோ இல்லை. முதல்வருக்கு நன்றாகத் தெரியும். கூடங்குளத்தில் நடப்பது ஒரு நாடகமென்று. இந்த நிலையிலாவது தமிழக முதல்வர் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.     

...

shared via

Saturday, October 26, 2013

மகனை பிரதமராக்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவே ஆந்திராவை பிரிக்கும் முடிவை சோனியா எடுத்தார்: சந்திரபாபு நாயுடு chandrababu naidu says sonia bifurcated andhra to make rahul pm

மகனை பிரதமராக்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவே ஆந்திராவை பிரிக்கும் முடிவை சோனியா எடுத்தார்: சந்திரபாபு நாயுடு chandrababu naidu says sonia bifurcated andhra to make rahul pm

ஐதராபாத், அக். 27-

பயலின் புயலின் எதிரொலியாக ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களின் நல்வாழ்வு, மேம்பாடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

ஆந்திராவை ஆளும் கிரண் குமார் ரெட்டி சோனியா காந்தியின் கை பொம்மையாக இருந்துக் கொண்டு அவரது பாட்டுக்கேற்றபடி நாட்டியமாடி வருகிறார். இதனால் கடந்த ஒருவருட காலமாக மாநில அரசின் இயக்கமே நின்று போய் உள்ளது.

ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பது போன்ற முக்கியமான விவகாரங்களில் அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடுவதை விடுத்து தன்னந்தனியாக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

ஆந்திரவை இரண்டாக பிரிக்கும் முடிவு அரசியல் நோக்கம் கொண்டதாகும். இம்மாநில மக்களின் மனநிலையை அறிந்து எடுக்கப்பட்ட முடிவல்ல இது. தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்கி பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஆந்திராவை இரண்டாக பிரிக்கும் கொடூரமான முடிவை சோனியா காந்தி எடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

பாசனத்துக்காக ஆழியாறு அணை 28–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Aliyaru Dam Opening on 28 for Irrigation Jayalalitha announced

பாசனத்துக்காக ஆழியாறு அணை 28–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Aliyaru Dam Opening on 28 for Irrigation Jayalalitha announced

சென்னை, அக்.26–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியார் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து ஐந்து பழைய வாய்க்கால்கள் மூலமாக இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் 28.10.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் நிறைவு செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

shared via

Friday, October 25, 2013

பயலின் புயல் எதிரொலி: ஒடிசா, ஆந்திராவில் பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு death toll in odisha andhra floods rises to 64

பயலின் புயல் எதிரொலி: ஒடிசா, ஆந்திராவில் பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு death toll in odisha andhra floods rises to 64

புதுடெல்லி, அக். 26-

பயலின் புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பல கிராமங்களை சேர்ந்த 2 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். பலர் வீட்டின் கூரைகளின் மீது ஏறி நின்று மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் மூலம் ஒடிசாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒடிசாவின் 17 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 1 1/4 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் வெள்ள நீரின் அரிப்பினால் வீடு இடிந்து விழுந்ததில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. 1.31 லட்சம் ஹெக்டேர் பருத்தி பயிர்கள் 1.07 லட்சம் ஹெக்டேர் நெல் பயிர்கள் என சுமார் 2 1/2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமடைந்தன.

ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டம், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, நல்கொண்டா, மஹபூப் நகர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்தன. 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 135 நிவாரண முகாம்களில் சுமார் 67 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுளளனர்.

ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஒங்கோல் மற்றும் ஏலுரு ஆகிய நகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நேற்று மட்டும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி 5 பேர் பலியானார்கள். இதனால் அம்மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இதனால், ஒடிசா மற்றும் ஆந்திராவில் பயலின் புயல் எதிரொலியாக ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

...

shared via

ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: முஸ்லிம் தலைவர்கள் விமர்சனம் Muslim leaders say Rahul Gandhis statement most unfortunate

ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: முஸ்லிம் தலைவர்கள் விமர்சனம் Muslim leaders say Rahul Gandhis statement most unfortunate

லக்னோ, அக். 25-

மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, முசாபர் நகர் கலவரத்திற்கு பா.ஜனதா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களை ஆசை வார்த்தைகள் கூறி தீவிரவாத செயலில் ஈடுபட வைக்க முயன்றதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று முஸ்லிம் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவு மதகுருவான மவுலானா சாயிப் அப்பாஸ் நக்வி கூறுகையில், "இதுபோன்ற கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தைப்பற்றி தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், வகுப்புவாத சக்திகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்துவிடும். வகுப்புவாத கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்களின் வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.

ஷாகர் காஜி என்ற தலைவர் கூறுகையில், "முஸ்லிம்களுக்கு எதிராக இத்தகைய மலிவான புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை. நாங்கள் நாட்டுப்பற்றுடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எதையும் செய்வோம். ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"சிறுபான்மை சமுதாயத்தினரின் ஒருமைப்பாடு மற்றும் விசுவாசம் மீது அவதூறு பரப்புவோர் நாட்டிற்கு பெரும் கெடுதி விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய துணைத்தலைவர் மவுலானா சாதிக் தெரிவித்தார்.

...

shared via

யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது: இலங்கை தூதர் பேச்சுக்கு பாரதீய ஜனதா கண்டனம் pon radhakrishnan condemned Sri lanka common wealth issue

யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது: இலங்கை தூதர் பேச்சுக்கு பாரதீய ஜனதா கண்டனம் pon radhakrishnan condemned Sri lanka common wealth issue

சென்னை, அக். 25–

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து இலங்கை தூதர் கரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக்குரியது. எல்லா முனையிலும் தோற்றுப் போன மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசி இருக்கிறார்.

எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன.

சீனா, பாகிஸ்தானை நினைத்து மத்திய அரசு பயப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறி வருவதை மத்திய அரசு உணர வேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Thursday, October 24, 2013

பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம் Indian woman teasing in Pakistan

பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம் Indian woman teasing in Pakistan

இஸ்லாமாபாத், அக்.25-

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிஹோர் நகருக்கு அருகேயுள்ள கிராமத்தில் 30 வயது இந்திய பெண் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

பிறகு தாய்-மகள் இருவரும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு ஆசாமி பின்தொடர்ந்தான். அவன் திடீரென்று இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி சட்டையையும் கிழித்தான். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரின் பிடியில் இருந்து, இளம்பெண்ணை மீட்டார்கள். ஆனாலும் மிரட்டி விட்டு அவன் தப்பி ஓடி விட்டான்.

இதுபற்றி தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

...

shared via

மூணாறு பகுதியில் வனத்துறை ஜீப்பை அடித்து நொறுக்கிய காட்டு யானை Wild Elephant crushed forest office Jeep in Moonaru area

மூணாறு பகுதியில் வனத்துறை ஜீப்பை அடித்து நொறுக்கிய காட்டு யானை Wild Elephant crushed forest office Jeep in Moonaru area

மூணாறு, அக்.25-

கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. சில யானைகள் கூட்டமாகவும், சில யானைகள் தனியாகவும் இந்த பகுதியில் உலா வருகின்றன. மாட்டுப்பட்டி பகுதி சுற்றுலா தலமாக விளங்கி வருவதால் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று மாலையில் மாட்டுப்பட்டி பகுதியில் ஒரு யானை நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் கூச்சல் போட்டுள்ளனர். சிலர் யானை மீது கற்களை எடுத்து எறிந்துள்ளனர். இதனால் யானைக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

உடனே சுற்றுலா பயணிகளை நோக்கி யானை ஓடிவரத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஒரு ஜீப்பில் வந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது காட்டு யானை வனத்துறையினரின் ஜீப்பை அடித்து சேதப்படுத்தியது. இதில் ஜீப்பின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஜீப்பில் வனத்துறையினர் யாரும் இல்லை.

இதைப் பார்த்ததும் வனத்துறை அதிகாரிகளும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள். மேலும் கோபம் தனியாத காட்டுயானை மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் உள்ள படகு சவாரி செய்யும் இடத்துக்கு வந்தது. இதைப்பார்த்ததும் அந்த பகுதிக்குள் யாரும் சென்று விடாமல் போலீசார் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டனர். படகு குழாமில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

பின்னர் படகு சவாரியையும் நிறுத்தி விட்டனர். அதேபகுதியில் காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானை கோபத்தில் இருந்ததால் அதை காட்டுக்குள் விரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதனால் மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

...

shared via

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் மிரட்டல் India will be isolated if PM skips Commonwealth meet Sri Lanka envoy

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் மிரட்டல் India will be isolated if PM skips Commonwealth meet Sri Lanka envoy

புதுடெல்லி, அக். 24-

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம், காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.

'பிரதமர் போகவில்லை என்றால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். யார் தனிமைப்படுத்தப்படுவார்கள்? கனடா தவிர மற்ற ஒவ்வொரு நாடும் பங்கேற்கிறது. அதனால், பங்கேற்காத நாடு தனிமைப்படுத்தப்படும். தமிழர்களின் நிலை பற்றி தமிழக சட்டமன்றத்திற்கு தெரியவில்லை. பிரதமர் மன்மேகன் சிங்கின் பயணம் குறித்து இந்திய அரசு மட்டுமே முடிவு செய்ய உரிமை உள்ளது' என்று கரியவாசம் தெரிவித்தார்.

...

shared via

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: கிறிஸ்தவ பாதிரியார் புகார் Kilinochchi district Tamil women in Sri Lanka forced sterilization

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: கிறிஸ்தவ பாதிரியார் புகார் Kilinochchi district Tamil women in Sri Lanka forced sterilization

கொழும்பூ, அக்.24–

இலங்கை கிளிநொச்சி நகரம் முன்பு விடுதலை புலிகளின் தலைநகரமாக இருந்தது. விடுதலை புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அங்கு தற்போது இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது. அவர்கள் கிளிநொச்சி மாவட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து கெடுபிடிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு வேரவில், சிரஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் மங்களராசா கத்தோலிக்க மத தலைமை இடமான வாடிகனுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ் பெண்களை கட்டாய படுத்தி அரசு கருத்தடை செய்து வருகிறது. இதை தடுக்க கத்தோலிக்க சபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக மாவட்ட சுகாதார அதிகாரி ரவீந்திரனிடம் கேட்டபோது, இந்த புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

...

shared via

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது: மத்திய அரசு டெண்டர் விட்டது world country from onion come Central Government Tender

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது: மத்திய அரசு டெண்டர் விட்டது world country from onion come Central Government Tender

புதுடெல்லி, அக். 24–

நாடெங்கும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில இடங்களில் ரூ. 120 ஆக விலை உயர்ந்தது.

சென்னையிலும் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்று மத்திய மந்திரி சரத்பவார் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிக அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும். அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வெங்காய அளவு கணிசமாக குறைந்து வருகிறது.

எனவே வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

மேலும் வெங்காய ஏற்று மதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வந்ததும் தட்டுப்பாடு நீங்கும். உடனடி தேவைக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு பாகிஸ்தான், ஈரான், எகிப்து, சீனா ஆகிய 4 நாடுகளில் இருந்து வெங்காயத்தை பெற திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த 4 நாடுகளிலும் ஒருகிலோ வெங்காயம் ரூ. 5 முதல் ரூ. 20–க்குள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி இந்தியாவில் முக்கியமான 57 நகரங்களில் வெங்காயம் விலை சராசரியாக ஒரு கிலோ ரூ. 70–க்கு விற்பனை ஆனது. டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் வெங்காயத்துக்கு உச்சக்கட்ட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த 3 நகரங்களிலும் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100–க்கும் அதிகமாக விற்கப்பட்டது.

ஜெய்ப்பூர், சண்டிகாரில் வெங்காய விலை ரூ. 90 ஆக உள்ளது. மும்பை, போபால், லக்னோ, சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80–க்கு விற்பனை ஆகிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

...

shared via

Wednesday, October 23, 2013

அமெரிக்க தேசிய அகாடமியின் உயர் பதவிக்கு தமிழர் சுப்ரா சுரேஷ் தேர்வு Subra suresh elected as top US national academy

அமெரிக்க தேசிய அகாடமியின் உயர் பதவிக்கு தமிழர் சுப்ரா சுரேஷ் தேர்வு Subra suresh elected as top US national academy

வாஷிங்டன், அக். 23-

அமெரிக்கவாழ் இந்தியரான சுப்ரா சுரேஷ், கார்னெஜி மெல்லான் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். சென்னையில் பிறந்த சுப்ரா சுரேஷ், சென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார்.

தற்போது அவர் அமெரிக்காவின் மிக உயரிய தேசிய மருத்துவக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். புற்றுநோய், இரத்த நோய்கள் மற்றும் மலேரியா செல்களின் இயக்கமுறைகள் பற்றிய சுப்ரா சுரேஷின் ஆராய்ச்சிக்காக தேசிய மருத்துவக் கல்வி நிறுவனம் அவருக்கு இந்த இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது.

சுரேஷ் இதற்கு முன்பு தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனராகவும், தேசிய பொறியியல் அகாடமியின் பொறுப்பிலும் இருந்துள்ளார். சுப்ரா சுரேஷ் ஒருவர் மட்டுமே, இந்த 3 தேசிய கல்வி நிறுவனங்களின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முக்கிய மூலப்பொருட்கள் பற்றிய ஆராய்ச்சி சங்கங்களின் கவுரவ உறுப்பினராகவும் சுப்ரா சுரேஷ் இருந்து வருகிறார். இதைத்தவிர, இந்தியா, பிரிட்டன், சுவீடன், ஸ்பெயின், ஜெர்மன் மற்றும் உலக கல்வி நிறுவனங்களிலும் சுப்ரா சுரேஷ் பொறுப்புகள் வகித்துள்ளார்.

அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றி வரும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தேசியக்கல்வி கழகங்களின் பொறுப்புகளுக்காக ஒருவரை தேர்வு செய்கிறார்கள்.

...

shared via

Tuesday, October 22, 2013

இணையதளங்களின் மூலமாக விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள் கண்டுபிடிப்பு Bacteria found in breast milk sold through Internet

இணையதளங்களின் மூலமாக விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள் கண்டுபிடிப்பு Bacteria found in breast milk sold through Internet

நியூயார்க், அக்.23-

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தங்களின் முன்னழகை பாதுகாக்க விரும்பும் பணக்கார பெண்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டி வளர்க்க வைத்தனர்.

நாகரிக மாற்றத்திற்கேற்ப அனைத்தும் மாறிப்போன தற்காலத்தில் தாய்ப்பால் வங்கிகளும், மார்பகங்களில் இருந்து பாலை கறந்து பாட்டில்களில் அடைத்து பதப்படுத்தி விற்பனை செய்யும் ஆன்லைன் தாய்ப்பால் வியாபாரமும் பெருகிவிட்டன.

இவ்வகையில், இணைய தளங்களின் மூலம் வாங்கப்பட்ட தாய்ப்பால் புகட்டப்பட்ட பல குழந்தைகளை நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் தாய்ப்பாலுக்கு நல்ல விலை கிடைப்பதால் பல பெண்கள் இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். அதிலும் தலைப்பிரசவமான குழந்தைக்கு தாயாக உள்ள பெண்களுக்கு அங்கு கடும் கிராக்கி உள்ளது. உதாரணத்துக்கு தலைப்பிரசவமாகி தனது 7 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரும் ஒரு பெண், உபரியாக சுரக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் சேமித்து வைத்து வாரம் ஒரு லிட்டர் பாலை விலையாக்கி விடுகிறார்.

இவ்வகையில் தாய்ப்பாலை விற்பவர்களை முறையான வகையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாத ஆன்லைன் தரகர்கள் கொடிய நோய்களின் தாக்கம் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திற்கு உள்ளான பெண்களிடம் இருந்தும் தாய்ப்பாலை வாங்கி அதிக விலைக்கு விற்று விடுகின்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ரஷ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆன்லைன் தாய்ப்பால் வங்கியில் இருந்து 101 பெண்களிடம் இருந்து பாலை வாங்கி பரிசோதனை செய்ததில் அதில் 75 மாதிரிகளில் குழந்தைகளுக்கு தீவிர நோய்களை ஏற்படுத்தும் பாக்டிரியாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

...

shared via

Monday, October 21, 2013

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு public sector workers 20 percentage bonus Jayalalitha announced

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு public sector workers 20 percentage bonus Jayalalitha announced

சென்னை, அக்.22-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியபங்கு வகிப்பவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவது குறித்து நேற்று சென்னை கோட்டையில் எனது தலைமையில் ஓர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் இரா.வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்கு பிறகு, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக்கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படும்: பா.ஜ.க. அறிவிப்பு BJP to file case against Rahul under prevention of atrocities act

ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படும்: பா.ஜ.க. அறிவிப்பு BJP to file case against Rahul under prevention of atrocities act

போபால், அக்.22-

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல் காந்தி பேசினார்.

பெருகிவரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியின பெண்களை நோக்கி, மத்தியபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது உங்களில் யாரும் கற்பழிக்கப்பட்டதே கிடையாதா? என்று பகிரங்கமாக கேட்டார்.

பொது இடத்தில் பெண்களை பார்த்து இதைப்போன்ற கேள்வியை கேட்பது விஷமத்தனமானது - ஆட்சேபனைக்குரியது என்பதால் ராகுல் காந்தி மீது இன்று போபால் கோர்ட்டில் 2 வழக்குகள் தொடுக்கப்படும் என பா.ஜ.க. துணை தலைவர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.

பழங்குடியின பெண்களின் கற்பழிப்பு தொடர்பாக ராகுர் காந்தி வேண்டுமென்றே மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கும், வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தின் கீழ் இன்னொரு வழக்கும் இன்று போபால் கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தொடரப்படும்.

இதேபோல், நர்மதா நதியை மத்திய பிரதேச மாநிலம் கற்பழித்து விட்டதாக சமீபத்தில் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

அவரது பேச்சு நர்மதா நதியை தங்களின் தாயாக நினைத்து வழிபடும் மத்திய பிரதேச மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டது. அவர் மீதும் பா.ஜ.க. சார்பில் தனி வழக்கு தொடுக்கப்படும் என பிரபாத் ஜா கூறினார்.

...

shared via

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Chennai heavy rain fishermen do not go to sea

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Chennai heavy rain fishermen do not go to sea

ராயபுரம், அக். 21–

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடல் பகுதியில் காற்றும் பலமாக வீசுகின்றன.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரம் பைபர் படகுகள், 2 ஆயிரம் விசை படகுகள் கரை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பெரிய விசை படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று உள்ளனர். பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதால் மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதியிலும் வேகமாக காற்று வீசி வருவதால் கட்டுமரம், பைபர் படகில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. சுமார் 500–க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

...

shared via

My Blog List

Popular Posts

Popular Posts