தினசரி செய்திகள்

Sunday, September 15, 2013

நிம்மதியாக இருக்க முடியலே என்ன காரணம்? Nimmathiya irukka

நிம்மதியாக இருக்க முடியலே என்ன காரணம்?

ஒரு பெரிய பணக்காரர் ஒரு துறவியிடம் போனார்.
சுவாமி… என்கிட்டே ஏராளமா பணம் இருக்கு
இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியலே… என்ன காரணம்?
என்று கேட்டார்.

அந்தத் துறவி இதற்கு நேரடியாக பதில் சொல்லவில்லை.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு குழந்தையைக் கூப்பிட்டார்.
அது ஓடிவந்தது.ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்து அந்தக்
குழந்தையின் கையில் கொடுத்தார் துறவி.அதை வாங்கிக்
கொண்டு குழந்தை சிரித்தது.இன்னொரு பழத்தை எடுத்துக்
கொடுத்தார்.அதை இன்னொரு கையில் வாங்கிக் கொண்டு
குழந்தை சிரித்தது.

மூன்றாவது ஆப்பிளை எடுத்துக் கொடுத்தார்.
ரெண்டு பழத்தையும் நெஞ்சிலே அணைத்துக் கொண்டு
மூன்றாவது பழத்தையும் வாங்க முயன்றது. ஆனால்
அது நழுவிக் கீழே விழ…

ஏற்கனவே இருந்த இரண்டு பழங்களும் தரையில் விழுந்து
உருண்டன.இப்போது அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது.

துறவி அந்தப் பணக்காரரிடம் சொன்னார்:

குழந்தையை கவனிச்சியா? இரண்டு ஆப்பிள் போதும்ன்னு
அது நினைச்சிருந்தா இப்போ அது அழவேண்டிய அவசியம்
வந்திருக்குமா? பணக்காரர் புரிந்து கொண்டார்.
எதுவுமே அளவுக்குமிஞ்சினா துன்பம்தான்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts