தினசரி செய்திகள்

Thursday, August 15, 2013

அடுத்தவர் மனைவியிடம் கள்ளத்தொடர்பு

அடுத்தவர் மனைவியிடம் கள்ளத்தொடர்பு: தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க பொதுச் செயலாளர் சுவெலின்சிமா வாவி சஸ்பெண்ட் cosatu general secretary suspended on illicit affair 

 

தென் ஆப்பிரிக்காவின் ஆளுங்கட்சியான தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுவெலின்சிமா வாவி.

18 லட்சம் தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த இயக்கம் அந்நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமாக கருதப்படுகிறது.

இந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் சுவெலின்சிமா வாவிக்கு திருமணமான இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனை அவர் மறுத்து வந்தபோதும், தென் ஆப்பிரிக்க தொழிற்சங்கத்தின் மத்திய செயற்குழு அவரை அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்தது.

கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து, சுவெலின்சிமா வாவியை தென் ஆப்பிரிக்க தொழிற்சங்க பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இடைக்கால நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து தொழிற்சங்கத்தின் தேசிய தலைவர் சிடுமோ ட்லாமினி நேற்று உத்தரவிட்டார்.

அடுத்த தென் ஆப்பிரிக்கா அதிபர் தேர்தலில் சுவெலின்சிமா வாவி போட்டியிடுவதர்கான வாய்ப்புகள் அதிகம் இருந்ததாக தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறினார்.

Monday, August 12, 2013

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு பிறந்த நாள் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வரர் Indian millionaire to host Charles Birthday

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு பிறந்த
நாள் விருந்தளிக்க லண்டனில் வசிக்கும்
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர தம்பதியர்
முடிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு வரும்
நவம்பர் மாதம் 14ம் தேதி பிறந்த நாள்
வருகிறது. இதனையொட்டி, நவம்பர் 21ம்
தேதி லண்டன் பக்கிங்காம் அரண்மனையில்
பலகோடி ரூபாய் செலவில்
அவருக்கு பிரமாண்ட விருந்தளிக்க லண்டனில்
வசிக்கும் கோடீஸ்வரர்களான
இந்தியாவை சேர்ந்த சைரஸ் வண்ட்ரேவலா -
பிரியா வண்ட்ரேவலா தம்பதியர்
முடிவு செய்துள்ளனர்.
லண்டனில் பிரபலமான இசைக்குழுவான
பில்ஹார்மோனியா குழுவினரின்
இசை நிகழ்ச்சி, மது விருந்து, கேளிக்கை,
உற்சாகம், உல்லாசம் என விருந்தை பல
கோடி பவுண்ட் செலவில் தடபுடலாக நடத்த
சைரஸ்
வண்ட்ரேவலா ஏற்பாடு செய்து வருகிறார்.
இங்கிலாந்தின் அரச
குடும்பத்துக்கு நெருக்கமானவராக
கருதப்படும் சைரஸ் பங்கு பரிமாற்ற தொழில்
செய்து வருகிறார்.
அவரது மனைவி பிரியா இந்தியாவின் பிரபல
ரியல் எஸ்டேட் நிறுவனமான
ஹிர்கோ குழுமத்தின் தலைவராக உள்ளார்.
இந்த தம்பதியர் அறக்கட்டளையின் மூலம் பல
தர்ம காரியங்களையும் செய்து வருகின்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்காக பக்கிங்காம்
அரண்மனையை பயன்படுத்திக்கொள்ள
இங்கிலாந்து ராணி எலிசபெத்
அனுமதி தந்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும்
பிரபல இந்தியர்கள் உள்பட சுமார் 250 பேர்
மட்டும் இந்த விருந்தில் பங்கேற்பார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி எலிசபெத் இந்த விருந்தில் பங்கேற்பாரா?
என்பது தொடர்பான அதிகாரபூர்வ
அறிவிப்பு ஏதும் பக்கிங்காம்
அரண்மனை வட்டாரங்களில் இருந்து இன்னும்
வெளியாகவில்லை.

கோமாவில் இருந்த ஹாலந்து இளவரசர் ஜோகன் பிரிசோ மரணம் Dutch Prince Friso dies after year in coma

கோமாவில் இருந்த ஹாலந்து இளவரசர்
ஜோகன் பிரிசோ மரணம் Dutch Prince Friso
dies after year in coma

ஹாலந்து இளவரசர் ஜோகன் பிரிசோ(44)
கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
ஆஸ்திரியா சென்றிருந்தார். அங்கு லெச் என்ற
இடத்தில் அவர் பனிச்சறுக்கு விளையாட்டில்
ஈடுபட்டிருந்தபோது திடீரெனத் தோன்றிய
பனிச்சரிவினுள் புதைந்துள்ளார்.
அதிலிருந்து அவரை மீட்பதற்கு 15
நிமிடங்களுக்கு மேல் ஆகியுள்ளது.
அதன்பின்னர், அவர் லண்டனில் உள்ள ராயல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சென்ற மாதம்தான் இளவரசரை ஹாலந்திற்குத்
திரும்ப அழைத்து வந்துள்ளனர். ஆயினும்,
அவர் உடல் நலக் குறைவோடுதான்
இருந்துள்ளார். ஓராண்டுக்கும் மேலாக
சுயநினைவிழந்து கோமாவில் இருந்த அவர்,
தி ஹேக்கில் உள்ள அரண்மனையில்
இன்று மரணம் அடைந்தார்.
பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட
விபத்தில் அவரது மூளைக்குச் செல்லும்
ஆக்சிஜன் தடைப்பட்டது. இதனால் ஏற்பட்ட
உடல்நலக்குறைவால் இளவரசர் ஜோகன்
பிரிசோ இறந்துவிட்டார் என்று அரண்மனைத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறைக்காக கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்த
ஹாலந்து அரசர் வில்லியம் அலெக்சாண்டரும்
அரசி மக்சிமாவும், இளவரசர் இறந்த
செய்தி அறிந்து உடனடியாக
ஹாலந்திற்கு திரும்புகின்றனர்.

Sunday, August 11, 2013

இங்கிலாந்து: லாரி ஓட்டும் உரிமம் பெற்ற முதல் இளம்வயது பெண் Teenage girl youngest to get truck driving license

இங்கிலாந்து நாட்டின் மிக குறைந்த வயதில்
லாரி ஓட்டும் உரிமையை 18
வயது இளம்பெண்ணான ஜெஸ் ஸ்டப்ஸ்
பெற்றுள்ளார். இவரது சகோதரியான 24
வயது லூசியும் லாரி டிரைவர்
என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இளம் வயது பெண் லாரி டிரைவர்
ஆனது குறித்து கருத்து கூறிய ஜெஸ்
ஸ்டப்ஸ், எனது அப்பா, மாமாக்கள்,
சகோதரர்கள்,
சகோதரி எல்லோருமே லாரி டிரைவர்கள் தான்.
ஓட்ட பழகி விட்டால் பிறகு இந்த
தொழிலை விட்டு விலக மனம் வராது.
என்னைப் பொருத்தவரை பல்கலைக்கழகம்
சென்று படிக்க வேண்டும் என்பதை விட
மனதுக்கு பிடித்ததை செய்வதில் தான் ஆர்வம்
அதிகம்.
லாரி துறையை பொருத்தவரை அனேகமாக
எல்லா டிரைவர்களுமே ஆண்களாகவே உள்ளனர்.
தற்போது, பெண்களும் இந்த துறையில்
டிரைவர்களாக கால் பதிக்க
தொடங்கியுள்ளனர்.
இந்த தொழிலில் பிடித்த விஷயம்
என்னவென்றால், அடுத்த லோடு எங்கே போக
வேண்டும்
என்பது தெரியாமலே இருப்பதுதான். நாட்டின்
எந்த மூலைக்கு வேண்டும் என்றாலும் போக
வேண்டிய சூழ்நிலை வரும்.
ஒரு நாள், கண்ணைக் கவரும் ரம்மியமான
காட்சிகள் நிறைந்த ஸ்காட்லாந்து வழியாக
போக வேண்டியிருக்கும். மற்றொரு நாள்,
தெற்கு கடற்கரை சாலையோரமாக செல்ல
வேண்டி வரும். இந்த
சவால்களுக்காகவே லாரி டிரைவர்
தொழிலை நான் தேர்வு செய்தேன்
என்று கூறுகிறார், ஜெஸ் ஸ்டப்ஸ்.

காங்கிரஸ் இல்லா ஆட்சி அமைய ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடுக்கு மோடி அழைப்பு Congress non power Jayalalitha Chandrababu nayudu calls Modi

பாரதீய ஜனதா தேர்தல்
பிரச்சாரக்குழு தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முதல்
மந்திரி நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்
தலைநகர் ஐதராபாத் லால்பகதூர்
மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது நாட்டின்
பொருளாதாரத்தை சுட்டிக்காட்டி அவர்
பேசியதாவது:-
நான் ஆந்திர பிரதேச காங்கிரஸ்
தலைவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள
விரும்புகிறேன். குஜராத்தின்
வளர்ச்சியை உங்களால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லையானால், எங்களை கருத்தில்
கொள்ள வேண்டாம். பக்கத்து மாநிலமான தமிழ்
நாட்டின் முதல் அமைச்சர் ஜெயலலிதா,
அம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக
எடுத்துவரும் திறமையான
நடவடிக்கைகளை கவனியுங்கள் என
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாஜ்பாய் அரசில் முன்பு அங்கம் வகித்த
அ.இ.அ.தி.மு.க. கட்சியின்
பொதுச்செயலாளரும் தமிழக முதல்
அமைச்சருமான ஜெ.ஜெயலலிதா,
மோடி ஒரு சிறந்த நண்பர்
என்று கூறியிருக்கிறார். தற்போதைய பாரதீய
ஜனதாவின் நடவடிக்கைகள் வரும் பாராளுமன்ற
தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன்
கூட்டணி வைக்கும் என்றே தெரிகிறது.
காங்கிரஸ் அரசை வெளியேற்றிய மறைந்த
முன்னாள் முதல்வர்
என்.டி.ராமாராவை நினைவுகூர்ந்த மோடி,
அவரது கனவு நிறைவேற தேவையான
நடவடிக்கைகளை எடுக்க தெலுங்கு தேச
கட்சியின் தலைவரும் என்.டி.ராமாராவின்
மருமகனுமான
சந்திரபாபு நாயுடுவை கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நரேந்திர
மோடி ஜெயலலிதா மற்றும்
சந்திரபாபு நாயுடு குறித்து பேசியுள்ளது வரும்
தேர்தலுக்கு மறைமுகமாக
அழைப்பு விடுத்துள்ளதையே காட்டுகிறது.

கிரிக்கெட் என்னை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கியிருக்கிறது: டிராவிட் Dravid Cricket made me a better man

கோவாவில் உள்ள பிர்லா (பிலானி)
கல்வி நிறுவனத்தில் நடந்த
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு முன்னாள் கிரிக்கெட் கேப்டன்
ராகுல் டிராவிட் பேசினார்.
அப்போது மாணவர்களிடையே ராகுல் டிராவிட்
பேசியதாவது:-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற
ஒன்றரை வருடங்களுக்கு பிறகு, கிரிக்கெட்
என்னை ஒரு சிறந்த மனிதனாக
உருவாக்கியிருக்கிறது என்பதை நான்
உணர்ந்து இருக்கிறேன். நான் கிரிக்கெட்
விளையாடியபோது பல
வெற்றிகளையும், தோல்விகளையும்
சந்தித்தேன். இது வாழ்க்கையை பற்றி நிறைய
கற்றுக்கொடுத்தது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு,
இனி கிரிக்கெட் அடுத்த தலைமுறைக்கான
விளையாட்டு என்பதை உணர்ந்தேன்.
இப்பொழுது, நான் எனது தந்தையின்
ஸ்டூடியோவில்
அமர்ந்து கொண்டு ஒரு குழந்தையைப்போல்
கிரிக்கெட்
அறிவிப்புகளை கவனித்து வருகிறேன்.
வாழ்க்கையில் வெற்றிபெற பல
லட்சக்கணக்கான வழிகள் இருக்கின்றன.
உலகத்தில் முதல் நபராக நீங்கள்,
இருக்கவேண்டியதில்லை. ஆனால், உங்கள்
குறிக்கோளை அடைய, நீங்கள் கடுமையாக
உழைக்க வேண்டும்.
இவ்வாறு ராகுல் டிராவிட் பேசினார்.
ராகுல் டிராவிட்டின் பேச்சை கேட்ட
மாணவர்கள், அப்போது உற்சாகமாக
கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

My Blog List

Popular Posts

Popular Posts