தினசரி செய்திகள்

Saturday, October 26, 2013

மகனை பிரதமராக்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவே ஆந்திராவை பிரிக்கும் முடிவை சோனியா எடுத்தார்: சந்திரபாபு நாயுடு chandrababu naidu says sonia bifurcated andhra to make rahul pm

மகனை பிரதமராக்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவே ஆந்திராவை பிரிக்கும் முடிவை சோனியா எடுத்தார்: சந்திரபாபு நாயுடு chandrababu naidu says sonia bifurcated andhra to make rahul pm

ஐதராபாத், அக். 27-

பயலின் புயலின் எதிரொலியாக ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கு சென்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களின் நல்வாழ்வு, மேம்பாடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.

ஆந்திராவை ஆளும் கிரண் குமார் ரெட்டி சோனியா காந்தியின் கை பொம்மையாக இருந்துக் கொண்டு அவரது பாட்டுக்கேற்றபடி நாட்டியமாடி வருகிறார். இதனால் கடந்த ஒருவருட காலமாக மாநில அரசின் இயக்கமே நின்று போய் உள்ளது.

ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பது போன்ற முக்கியமான விவகாரங்களில் அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசித்து அறிவிப்பு வெளியிடுவதை விடுத்து தன்னந்தனியாக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது.

ஆந்திரவை இரண்டாக பிரிக்கும் முடிவு அரசியல் நோக்கம் கொண்டதாகும். இம்மாநில மக்களின் மனநிலையை அறிந்து எடுக்கப்பட்ட முடிவல்ல இது. தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்கி பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஆந்திராவை இரண்டாக பிரிக்கும் கொடூரமான முடிவை சோனியா காந்தி எடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

பாசனத்துக்காக ஆழியாறு அணை 28–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Aliyaru Dam Opening on 28 for Irrigation Jayalalitha announced

பாசனத்துக்காக ஆழியாறு அணை 28–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Aliyaru Dam Opening on 28 for Irrigation Jayalalitha announced

சென்னை, அக்.26–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியார் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து ஐந்து பழைய வாய்க்கால்கள் மூலமாக இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் 28.10.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் நிறைவு செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

shared via

Friday, October 25, 2013

பயலின் புயல் எதிரொலி: ஒடிசா, ஆந்திராவில் பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு death toll in odisha andhra floods rises to 64

பயலின் புயல் எதிரொலி: ஒடிசா, ஆந்திராவில் பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு death toll in odisha andhra floods rises to 64

புதுடெல்லி, அக். 26-

பயலின் புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பல கிராமங்களை சேர்ந்த 2 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். பலர் வீட்டின் கூரைகளின் மீது ஏறி நின்று மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளனர். ஹெலிகாப்டர்களின் மூலம் ஒடிசாவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒடிசாவின் 17 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 1 1/4 கோடி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் வெள்ள நீரின் அரிப்பினால் வீடு இடிந்து விழுந்ததில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதனால் ஒடிசா மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்தது. மேலும் 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், ராயலசீமா மற்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. 1.31 லட்சம் ஹெக்டேர் பருத்தி பயிர்கள் 1.07 லட்சம் ஹெக்டேர் நெல் பயிர்கள் என சுமார் 2 1/2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி நாசமடைந்தன.

ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டம், பிரகாசம், குண்டூர், கிருஷ்ணா, நல்கொண்டா, மஹபூப் நகர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தினால் சேதமடைந்தன. 7 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 135 நிவாரண முகாம்களில் சுமார் 67 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுளளனர்.

ஐதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஒங்கோல் மற்றும் ஏலுரு ஆகிய நகரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நேற்று மட்டும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி 5 பேர் பலியானார்கள். இதனால் அம்மாநிலத்தில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இதனால், ஒடிசா மற்றும் ஆந்திராவில் பயலின் புயல் எதிரொலியாக ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.

...

shared via

ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: முஸ்லிம் தலைவர்கள் விமர்சனம் Muslim leaders say Rahul Gandhis statement most unfortunate

ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: முஸ்லிம் தலைவர்கள் விமர்சனம் Muslim leaders say Rahul Gandhis statement most unfortunate

லக்னோ, அக். 25-

மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, முசாபர் நகர் கலவரத்திற்கு பா.ஜனதா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும், முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பல இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களை ஆசை வார்த்தைகள் கூறி தீவிரவாத செயலில் ஈடுபட வைக்க முயன்றதாகவும் ராகுல் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று முஸ்லிம் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவு மதகுருவான மவுலானா சாயிப் அப்பாஸ் நக்வி கூறுகையில், "இதுபோன்ற கருத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தைப்பற்றி தவறாக சித்தரிப்பது மட்டுமல்லாமல், வகுப்புவாத சக்திகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்துவிடும். வகுப்புவாத கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்களின் வலியை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர்களை வைத்து அரசியல் செய்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.

ஷாகர் காஜி என்ற தலைவர் கூறுகையில், "முஸ்லிம்களுக்கு எதிராக இத்தகைய மலிவான புண்படுத்தும் வகையில் பேசுவதற்கு காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சி தலைவர்களுக்கு தகுதி இல்லை. நாங்கள் நாட்டுப்பற்றுடன் இருக்கிறோம். இந்தியாவுக்காக எதையும் செய்வோம். ராகுல் காந்தி பேசியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"சிறுபான்மை சமுதாயத்தினரின் ஒருமைப்பாடு மற்றும் விசுவாசம் மீது அவதூறு பரப்புவோர் நாட்டிற்கு பெரும் கெடுதி விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய துணைத்தலைவர் மவுலானா சாதிக் தெரிவித்தார்.

...

shared via

யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது: இலங்கை தூதர் பேச்சுக்கு பாரதீய ஜனதா கண்டனம் pon radhakrishnan condemned Sri lanka common wealth issue

யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது: இலங்கை தூதர் பேச்சுக்கு பாரதீய ஜனதா கண்டனம் pon radhakrishnan condemned Sri lanka common wealth issue

சென்னை, அக். 25–

தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்பட கூடாது. மீறி நடத்தப்பட்டால் இலங்கையின் தலைமை ஏற்று 2 ஆண்டுகள் செயல்பட வேண்டி வரும். எனவே இந்தியா இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தீர்மானம் நிறைவேற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் இருந்து இலங்கை தூதர் கரியவாசம் வெளியிட்டுள்ள கருத்து கண்டனத்துக்குரியது. எல்லா முனையிலும் தோற்றுப் போன மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில்தான் அவர் பேசி இருக்கிறார்.

எந்த விசயத்திலும் யாராலும் இந்தியாவை தனிமைப்படுத்த முடியாது. பொருளாதாரம், மனித வளம், அறிவியல் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் நம்மை சுற்றியே மற்ற நாடுகள் உள்ளன.

சீனா, பாகிஸ்தானை நினைத்து மத்திய அரசு பயப்படுகிறது. இதனால் இலங்கை சீனாவின் தளமாக மாறி வருவதை மத்திய அரசு உணர வேண்டும். வெளிநாட்டு கொள்கையில் துணிச்சலும், சாதுர்யமும் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

Thursday, October 24, 2013

பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம் Indian woman teasing in Pakistan

பாகிஸ்தானில் இந்திய பெண் மானபங்கம் Indian woman teasing in Pakistan

இஸ்லாமாபாத், அக்.25-

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிஹோர் நகருக்கு அருகேயுள்ள கிராமத்தில் 30 வயது இந்திய பெண் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

பிறகு தாய்-மகள் இருவரும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்த போது இவர்களை ஒரு ஆசாமி பின்தொடர்ந்தான். அவன் திடீரென்று இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி சட்டையையும் கிழித்தான். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரின் பிடியில் இருந்து, இளம்பெண்ணை மீட்டார்கள். ஆனாலும் மிரட்டி விட்டு அவன் தப்பி ஓடி விட்டான்.

இதுபற்றி தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

...

shared via

மூணாறு பகுதியில் வனத்துறை ஜீப்பை அடித்து நொறுக்கிய காட்டு யானை Wild Elephant crushed forest office Jeep in Moonaru area

மூணாறு பகுதியில் வனத்துறை ஜீப்பை அடித்து நொறுக்கிய காட்டு யானை Wild Elephant crushed forest office Jeep in Moonaru area

மூணாறு, அக்.25-

கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள மாட்டுப்பட்டி பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. சில யானைகள் கூட்டமாகவும், சில யானைகள் தனியாகவும் இந்த பகுதியில் உலா வருகின்றன. மாட்டுப்பட்டி பகுதி சுற்றுலா தலமாக விளங்கி வருவதால் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

நேற்று மாலையில் மாட்டுப்பட்டி பகுதியில் ஒரு யானை நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் உற்சாகம் அடைந்த சுற்றுலா பயணிகள் கூச்சல் போட்டுள்ளனர். சிலர் யானை மீது கற்களை எடுத்து எறிந்துள்ளனர். இதனால் யானைக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

உடனே சுற்றுலா பயணிகளை நோக்கி யானை ஓடிவரத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் ஒரு ஜீப்பில் வந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது காட்டு யானை வனத்துறையினரின் ஜீப்பை அடித்து சேதப்படுத்தியது. இதில் ஜீப்பின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஜீப்பில் வனத்துறையினர் யாரும் இல்லை.

இதைப் பார்த்ததும் வனத்துறை அதிகாரிகளும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கினார்கள். மேலும் கோபம் தனியாத காட்டுயானை மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் உள்ள படகு சவாரி செய்யும் இடத்துக்கு வந்தது. இதைப்பார்த்ததும் அந்த பகுதிக்குள் யாரும் சென்று விடாமல் போலீசார் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டனர். படகு குழாமில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

பின்னர் படகு சவாரியையும் நிறுத்தி விட்டனர். அதேபகுதியில் காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானை கோபத்தில் இருந்ததால் அதை காட்டுக்குள் விரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள். இதனால் மாட்டுப்பட்டி அணைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

...

shared via

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் மிரட்டல் India will be isolated if PM skips Commonwealth meet Sri Lanka envoy

காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் மிரட்டல் India will be isolated if PM skips Commonwealth meet Sri Lanka envoy

புதுடெல்லி, அக். 24-

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம், காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள்ளார்.

'பிரதமர் போகவில்லை என்றால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நாம் யோசிக்க வேண்டும். யார் தனிமைப்படுத்தப்படுவார்கள்? கனடா தவிர மற்ற ஒவ்வொரு நாடும் பங்கேற்கிறது. அதனால், பங்கேற்காத நாடு தனிமைப்படுத்தப்படும். தமிழர்களின் நிலை பற்றி தமிழக சட்டமன்றத்திற்கு தெரியவில்லை. பிரதமர் மன்மேகன் சிங்கின் பயணம் குறித்து இந்திய அரசு மட்டுமே முடிவு செய்ய உரிமை உள்ளது' என்று கரியவாசம் தெரிவித்தார்.

...

shared via

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: கிறிஸ்தவ பாதிரியார் புகார் Kilinochchi district Tamil women in Sri Lanka forced sterilization

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: கிறிஸ்தவ பாதிரியார் புகார் Kilinochchi district Tamil women in Sri Lanka forced sterilization

கொழும்பூ, அக்.24–

இலங்கை கிளிநொச்சி நகரம் முன்பு விடுதலை புலிகளின் தலைநகரமாக இருந்தது. விடுதலை புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அங்கு தற்போது இலங்கை ராணுவம் முகாமிட்டுள்ளது. அவர்கள் கிளிநொச்சி மாவட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து கெடுபிடிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு வேரவில், சிரஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிறிஸ்தவ பாதிரியார் மங்களராசா கத்தோலிக்க மத தலைமை இடமான வாடிகனுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ் பெண்களை கட்டாய படுத்தி அரசு கருத்தடை செய்து வருகிறது. இதை தடுக்க கத்தோலிக்க சபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக மாவட்ட சுகாதார அதிகாரி ரவீந்திரனிடம் கேட்டபோது, இந்த புகார் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

...

shared via

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது: மத்திய அரசு டெண்டர் விட்டது world country from onion come Central Government Tender

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது: மத்திய அரசு டெண்டர் விட்டது world country from onion come Central Government Tender

புதுடெல்லி, அக். 24–

நாடெங்கும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில இடங்களில் ரூ. 120 ஆக விலை உயர்ந்தது.

சென்னையிலும் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்று மத்திய மந்திரி சரத்பவார் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிக அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும். அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வெங்காய அளவு கணிசமாக குறைந்து வருகிறது.

எனவே வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

மேலும் வெங்காய ஏற்று மதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வந்ததும் தட்டுப்பாடு நீங்கும். உடனடி தேவைக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு பாகிஸ்தான், ஈரான், எகிப்து, சீனா ஆகிய 4 நாடுகளில் இருந்து வெங்காயத்தை பெற திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த 4 நாடுகளிலும் ஒருகிலோ வெங்காயம் ரூ. 5 முதல் ரூ. 20–க்குள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி இந்தியாவில் முக்கியமான 57 நகரங்களில் வெங்காயம் விலை சராசரியாக ஒரு கிலோ ரூ. 70–க்கு விற்பனை ஆனது. டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் வெங்காயத்துக்கு உச்சக்கட்ட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த 3 நகரங்களிலும் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100–க்கும் அதிகமாக விற்கப்பட்டது.

ஜெய்ப்பூர், சண்டிகாரில் வெங்காய விலை ரூ. 90 ஆக உள்ளது. மும்பை, போபால், லக்னோ, சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80–க்கு விற்பனை ஆகிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

...

shared via

Wednesday, October 23, 2013

அமெரிக்க தேசிய அகாடமியின் உயர் பதவிக்கு தமிழர் சுப்ரா சுரேஷ் தேர்வு Subra suresh elected as top US national academy

அமெரிக்க தேசிய அகாடமியின் உயர் பதவிக்கு தமிழர் சுப்ரா சுரேஷ் தேர்வு Subra suresh elected as top US national academy

வாஷிங்டன், அக். 23-

அமெரிக்கவாழ் இந்தியரான சுப்ரா சுரேஷ், கார்னெஜி மெல்லான் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். சென்னையில் பிறந்த சுப்ரா சுரேஷ், சென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார்.

தற்போது அவர் அமெரிக்காவின் மிக உயரிய தேசிய மருத்துவக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். புற்றுநோய், இரத்த நோய்கள் மற்றும் மலேரியா செல்களின் இயக்கமுறைகள் பற்றிய சுப்ரா சுரேஷின் ஆராய்ச்சிக்காக தேசிய மருத்துவக் கல்வி நிறுவனம் அவருக்கு இந்த இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது.

சுரேஷ் இதற்கு முன்பு தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனராகவும், தேசிய பொறியியல் அகாடமியின் பொறுப்பிலும் இருந்துள்ளார். சுப்ரா சுரேஷ் ஒருவர் மட்டுமே, இந்த 3 தேசிய கல்வி நிறுவனங்களின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முக்கிய மூலப்பொருட்கள் பற்றிய ஆராய்ச்சி சங்கங்களின் கவுரவ உறுப்பினராகவும் சுப்ரா சுரேஷ் இருந்து வருகிறார். இதைத்தவிர, இந்தியா, பிரிட்டன், சுவீடன், ஸ்பெயின், ஜெர்மன் மற்றும் உலக கல்வி நிறுவனங்களிலும் சுப்ரா சுரேஷ் பொறுப்புகள் வகித்துள்ளார்.

அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றி வரும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தேசியக்கல்வி கழகங்களின் பொறுப்புகளுக்காக ஒருவரை தேர்வு செய்கிறார்கள்.

...

shared via

Tuesday, October 22, 2013

இணையதளங்களின் மூலமாக விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள் கண்டுபிடிப்பு Bacteria found in breast milk sold through Internet

இணையதளங்களின் மூலமாக விற்கப்படும் தாய்ப்பாலில் நோய் கிருமிகள் கண்டுபிடிப்பு Bacteria found in breast milk sold through Internet

நியூயார்க், அக்.23-

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் தங்களின் முன்னழகை பாதுகாக்க விரும்பும் பணக்கார பெண்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைப் பெண்களை வேலைக்கு அமர்த்தி தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டி வளர்க்க வைத்தனர்.

நாகரிக மாற்றத்திற்கேற்ப அனைத்தும் மாறிப்போன தற்காலத்தில் தாய்ப்பால் வங்கிகளும், மார்பகங்களில் இருந்து பாலை கறந்து பாட்டில்களில் அடைத்து பதப்படுத்தி விற்பனை செய்யும் ஆன்லைன் தாய்ப்பால் வியாபாரமும் பெருகிவிட்டன.

இவ்வகையில், இணைய தளங்களின் மூலம் வாங்கப்பட்ட தாய்ப்பால் புகட்டப்பட்ட பல குழந்தைகளை நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் தாய்ப்பாலுக்கு நல்ல விலை கிடைப்பதால் பல பெண்கள் இதை தொழிலாகவே செய்து வருகின்றனர். அதிலும் தலைப்பிரசவமான குழந்தைக்கு தாயாக உள்ள பெண்களுக்கு அங்கு கடும் கிராக்கி உள்ளது. உதாரணத்துக்கு தலைப்பிரசவமாகி தனது 7 மாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டி வரும் ஒரு பெண், உபரியாக சுரக்கும் தாய்ப்பாலை ஃப்ரீசரில் சேமித்து வைத்து வாரம் ஒரு லிட்டர் பாலை விலையாக்கி விடுகிறார்.

இவ்வகையில் தாய்ப்பாலை விற்பவர்களை முறையான வகையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தாத ஆன்லைன் தரகர்கள் கொடிய நோய்களின் தாக்கம் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திற்கு உள்ளான பெண்களிடம் இருந்தும் தாய்ப்பாலை வாங்கி அதிக விலைக்கு விற்று விடுகின்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ரஷ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆன்லைன் தாய்ப்பால் வங்கியில் இருந்து 101 பெண்களிடம் இருந்து பாலை வாங்கி பரிசோதனை செய்ததில் அதில் 75 மாதிரிகளில் குழந்தைகளுக்கு தீவிர நோய்களை ஏற்படுத்தும் பாக்டிரியாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

...

shared via

Monday, October 21, 2013

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு public sector workers 20 percentage bonus Jayalalitha announced

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்: ஜெயலலிதா அறிவிப்பு public sector workers 20 percentage bonus Jayalalitha announced

சென்னை, அக்.22-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்களுக்கு இன்றியமையா சேவைகளை வழங்குவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியபங்கு வகிப்பவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2012-2013-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்குவது குறித்து நேற்று சென்னை கோட்டையில் எனது தலைமையில் ஓர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் இரா.வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலுக்கு பிறகு, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்பதற்கேற்ப உழைக்கும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களிடையே உற்சாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2012-2013-ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக்கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரசு ரப்பர் கார்ப்பரேஷன், தமிழ்நாடு வனத் தோட்டக்கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை, அதாவது 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையும், லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 விழுக்காடும் வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 1,200 ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கப்படும்.

மொத்தத்தில், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.

...

shared via

ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படும்: பா.ஜ.க. அறிவிப்பு BJP to file case against Rahul under prevention of atrocities act

ராகுல் காந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இன்று வழக்கு தொடுக்கப்படும்: பா.ஜ.க. அறிவிப்பு BJP to file case against Rahul under prevention of atrocities act

போபால், அக்.22-

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோலில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டத்தில் கடந்த 17ம் தேதி ராகுல் காந்தி பேசினார்.

பெருகிவரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளித்த அவர், மேடையின் எதிரே அமர்ந்திருந்த பழங்குடியின பெண்களை நோக்கி, மத்தியபிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த பா.ஜ.க. ஆட்சியின் போது உங்களில் யாரும் கற்பழிக்கப்பட்டதே கிடையாதா? என்று பகிரங்கமாக கேட்டார்.

பொது இடத்தில் பெண்களை பார்த்து இதைப்போன்ற கேள்வியை கேட்பது விஷமத்தனமானது - ஆட்சேபனைக்குரியது என்பதால் ராகுல் காந்தி மீது இன்று போபால் கோர்ட்டில் 2 வழக்குகள் தொடுக்கப்படும் என பா.ஜ.க. துணை தலைவர் பிரபாத் ஜா கூறியுள்ளார்.

பழங்குடியின பெண்களின் கற்பழிப்பு தொடர்பாக ராகுர் காந்தி வேண்டுமென்றே மரியாதை குறைவாக பேசியுள்ளார். இதற்காக அவர் மீது மானநஷ்ட வழக்கும், வன்கொடுமை(தடுப்பு) சட்டத்தின் கீழ் இன்னொரு வழக்கும் இன்று போபால் கோர்ட்டில் பா.ஜ.க. சார்பில் தொடரப்படும்.

இதேபோல், நர்மதா நதியை மத்திய பிரதேச மாநிலம் கற்பழித்து விட்டதாக சமீபத்தில் மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.

அவரது பேச்சு நர்மதா நதியை தங்களின் தாயாக நினைத்து வழிபடும் மத்திய பிரதேச மாநில மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டது. அவர் மீதும் பா.ஜ.க. சார்பில் தனி வழக்கு தொடுக்கப்படும் என பிரபாத் ஜா கூறினார்.

...

shared via

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Chennai heavy rain fishermen do not go to sea

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை Chennai heavy rain fishermen do not go to sea

ராயபுரம், அக். 21–

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடல் பகுதியில் காற்றும் பலமாக வீசுகின்றன.

இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் இன்று காலை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரம் பைபர் படகுகள், 2 ஆயிரம் விசை படகுகள் கரை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பெரிய விசை படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் சென்று உள்ளனர். பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருவதால் மீனவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவொற்றியூர், எண்ணூர் கடல் பகுதியிலும் வேகமாக காற்று வீசி வருவதால் கட்டுமரம், பைபர் படகில் செல்லும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. சுமார் 500–க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

...

shared via

Sunday, October 20, 2013

இணையதளம் மூலம் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் குழந்தை மருத்துவர்கள் Paediatricians online take queries from young moms

இணையதளம் மூலம் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் குழந்தை மருத்துவர்கள் Paediatricians online take queries from young moms

சென்னை, அக். 21-

இணையதளப் பயன்பாடுகளில் தற்போது குழந்தை மருத்துவம் உட்பட பெற்றோர்களிடத்தில் தோன்றும் உடல்நலன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு எல்லாம் மருத்துவர்கள் பதில் அளிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

குழந்தை பிறப்பை எதிர்நோக்கும் இளம் தாய்மார்களும் இதன்மூலம் பலன் பெறமுடியும். இதில் வரக்கூடிய சில கேள்விகளுக்கு பதில் அளிக்க நிறைய நேரமும், பொறுமையும் தேவைப்படுகின்றது. ஆயினும், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் பெற்றோர்களின் தெளிவற்ற நிலையை சீராக்கவும் தான் விரும்புவதாக டாக்டர் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

மருத்துவர்கள் நடத்தும் வலைத்தளத்தில் பெற்றோர்கள் தங்களின் அனுபவங்களையோ அல்லது தங்களின் கேள்விகளையோ மின்னஞ்சல் மூலம் அனுப்ப இயலும். மேலும் பாதுகாப்பு குறித்த வீடியோக்களும் இவர்களால் வெளியிடப்பட்டு உள்ளன. முதலுதவி அடிப்படைகள் தெரியாத பெற்றோர்களுக்கு இந்த வீடியோக்களும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

பெற்றோர்களிடமிருந்து தனியே வாழும் தம்பதியருக்கும் இந்த வலைத்தளங்கள் உதவிகரமாக இருக்கும். ஆலோசனை சொல்ல ஒரு வயதான நபர் இல்லாதபோது தங்களுக்குத் தோன்றும் அடிப்படை சந்தேகங்களுக்காக இவர்கள் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்று பெங்களூருவைச் சேர்ந்த டாக்டர் கிஷோர்குமார் தெரிவிக்கின்றார். இவர் மருத்துவர் குழு ஒன்று நடத்தும் வலைத்தளத்தின் ஆசிரியராகவும் இருக்கின்றார்.

இவர்களது குழு பெற்றோர்களின் பகுதி தவிர குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் பற்றிய தகவல்களையும் தருகின்றது. மருத்துவர்களிடம் நேரடியாக கேட்க தயங்கும் பல கேள்விகளுக்கும் பெண்கள் இணையதளம் மூலம் விடை பெறுவது எளிதாக இருக்கும் என்று கூறும் டாக்டர் தீபா ஹரிஹரன் தலைமையிலும் ஒரு வலைத்தளம் செயல்படுகின்றது.

இந்தியாவில் இன்னமும் ஆரம்ப கட்டத்திலேயே இருக்கும் இதுபோன்ற தகவல் பக்கங்களை பெற்றோர்களிடத்தில் பிரபலப்படுத்துவதற்கு அதிக முயற்சி தேவைப்படும்.

ஆயினும், நம்பகத்தன்மையைத் தரும் இது போன்ற தகவல் பக்கங்கள் மூலம் மக்கள் இவற்றின் பின்னணியையும் தெரிந்து கொள்ளமுடியும் என்று டாக்டர் பிரியா சந்திரசேகரன் கருதுகின்றார்.

...

shared via http://feedly.com

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை தவிர்க்க முடியாது: மத்திய மந்திரி பனபாக லட்சுமி பேட்டி Andhra Pradesh separating the two can not be avoided Federal Minister Interview

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை தவிர்க்க முடியாது: மத்திய மந்திரி பனபாக லட்சுமி பேட்டி Andhra Pradesh separating the two can not be avoided Federal Minister Interview

குண்டூர், அக்.21-

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய மந்திரியும், பபட்லா தொகுதி எம்.பி.யுமான பனபாக லட்சுமி பபட்லாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரிப்பது என்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பிராந்திய (சீமாந்திரா) மக்களின் நலன் பாதுகாக்கப்படும்" என்று உறுதி அளித்தார். சீமாந்திரா பிராந்தியத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக, தலைநகர் ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும், அவர் வற்புறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், "தனிப்பட்ட முறையில் ஆந்திராவை பிரிப்பதை நான் விரும்பவில்லை. ஒன்றுபட்ட ஆந்திராவையே ஆதரிக்கிறேன். ஆனால், மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக" தெரிவித்தார்.

2014-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பபட்லா தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும், மந்திரி பனபாக லட்சுமி கூறினார்.

இதற்கிடையில் ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கடே வெங்கடா ரெட்டி கூறும்போது, "அரசியல் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக ஆந்திரா பிரிக்கப்பட்டால், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சீமாந்திரா பகுதி மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஆந்திர மாநில முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி, மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பைலின் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டபின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த அவர், கட்சி மேலிடத்தின் மாநில பிரிவினை முடிவை வெளிப்படையாக விமர்சித்தார்.

"ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றுபட்ட மாநிலமாக ஆந்திரா நீடிப்பதற்கு மக்கள் போராட வேண்டும்" என்றும், முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், தெலுங்கானா பிராந்திய காங்கிரஸ் தலைவர்கள், கிரண்குமார் ரெட்டியை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் வாபஸ் பெறப்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை மறைமுகமாக ஆதரித்ததாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

...

shared via

ஓமன் நாட்டில் கடலில் குளித்த இந்தியர் உள்பட 2 பேர் பலி 2 people killed drown at sea in Oman

ஓமன் நாட்டில் கடலில் குளித்த இந்தியர் உள்பட 2 பேர் பலி 2 people killed drown at sea in Oman

துபாய், அக்.21-

ஓமன் நாட்டில் பணிபுரியும் 15 வெளிநாட்டினர் பக்ரீத் பண்டிகை விடுப்பில் சுற்றுலா சென்றனர். தெற்கு ஓமன் சலாலா பகுதியில் உள்ள தாகா கடற்கரைக்கு சென்ற அவர்களில் 6 பேர் கடலில் இறங்கி குளித்தனர்.

இதில் 6 பேர் ராட்சத அலையில் சிக்கினர். அதில் 4 பேர் மீட்கப்பட்டனர். இந்தியாவை சேர்ந்த வல்சகுமார் (வயது 50), இலங்கையை சேர்ந்த கிராது (50) ஆகிய 2 பேரும் கடல் நீரில் மூழ்கி பலியானார்கள். இவர்கள் ஓமன் நாட்டு பாதுகாப்பு துறையில் கடந்த 6 வருடங்களாக பணிபுரிந்து வந்தனர்.

...

shared via

மும்பையில் இளம் பெண்ணுக்கு வாயில் ஆசிட் ஊற்றி கொல்ல முயற்சி: காதலன் கைது young girl was tried killing by her boyfriend in mumbai

மும்பையில் இளம் பெண்ணுக்கு வாயில் ஆசிட் ஊற்றி கொல்ல முயற்சி: காதலன் கைது young girl was tried killing by her boyfriend in mumbai

மும்பை, அக். 20–

மும்பை தாஹஷர் பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திரா சக்பால் (வயது 20).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை அவர் காதலிக்க தொடங்கினார். ஆனால், அந்த பெண் ஜிதேந்திராவை காதலிக்க மறுத்து விட்டார்.

இதனால் அவர் அந்த பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து தொந்தரவு செய்தார். அவரையும், அவரது தந்தைதையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜிதேந்திராவை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் மும்பை புறநகர் பகுதியான கோரை கடற்கரை பகுதியில் அந்த பெண்ணின் வாயில் ஜிதேந்திரா ஆசிட்டை ஊற்றி கடலில் தள்ளினார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜிதேந்திராவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

அந்த பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் முகம் 10 சதவீதம் எரிந்து விட்டதாக போலீஸ் அதிகாரி மகேஷ் பட்டீல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

...

shared via

My Blog List

Popular Posts

Popular Posts