தினசரி செய்திகள்

Tuesday, September 17, 2013

நீல நிற ஆப்பிள், வெள்ளை நிற மாங்காய், பச்சை நிற ஆரஞ்சு different type of fruits colours

கறுப்பு தக்காளி... நீல வாழைப்பழம்

by Subhasreemurali
New Tamil  - Penmai.comToday,

இன்னும் சில நாட்களில் நமது கடை வீதிகளில், நீல நிற ஆப்பிள், வெள்ளை நிற மாங்காய், பச்சை நிற ஆரஞ்சு என கலர்கலராக பழங்களைப் பார்க்கலாம். இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகர விஞ்ஞானிகள் சிலர், பழங்களின் நிறம், மணம், ருசி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைக் கண்டுபிடித்துவிட்டனர்.

பழங்களைப் பயன்படுத்தி நோய்களைத் தடுப்பது எப்படி என கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வந்த இடையறாத ஆராய்ச்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. டயட்டில் இருப்பவர்களின் வசதிக்காக பழங்களிலுள்ள சத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் உறுதியாகி இருக்கிறது.

உதாரணமாக, சத்து மிகுந்த வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே, வாழைப்பழத்தின் மரபணுக்களை மாற்றியமைத்து அதில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைத்துவிட்டால் அது எல்லோரும் சாப்பிடும்படியான ஆரோக்கியப் பழமாக மாறிவிடும். பழங்களின் நிற அணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் சில வகை புற்றுநோய் அபாயங்களையும் தடுக்க முடியுமாம்.

இப்படி மாற்றி அமைக்கும் பழங்களின் நிறமும் மாறி விடுமாம். எனவே இன்னும் சில வருடங்களில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கலர் கலராக மருந்து, மாத்திரைகள் எழுதித் தருவதற்கு பதிலாக கலர் கலர் பழங்களைக் கொடுக்கப் போகிறார்கள்!

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts