தினசரி செய்திகள்

Friday, September 27, 2013

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம் womens hockey

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

by veni
Google NewsToday, 20:57

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான 8-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்ற இந்திய அணி, கோப்பை வென்றால் மட்டுமே, அடுத்த ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

இதனால் கவனமுடன் விளையாடிய இந்திய வீராங்கனைகள் லீக் ஆட்டங்களில் முத்திரை பதித்து அரையிறுதிக்கு முன்னேறினர். ஆனால் அரையிறதியில், கொரிய அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றதால், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் கனவு தகர்ந்தது.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா-சீனா அணிகள் மோதின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில், அனுராதா தேவி தாக்கோம் 16-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 31-வது நிமிடத்திலும் அபாரமாக பீல்டு கோல்கள் அடித்தனர்.

இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது, 51-வது நிமிடத்தில் சீனாவின் யான் யான் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். அதன்பின்னர் இந்திய வீராங்கனைகளின் தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சீன வீராங்கனை வூ மெங்ராங் 64-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-2 என சமன் செய்தார்.

இதனால் ஆட்டநேரம் முடிந்ததும் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. அத்துடன், லீக் போட்டியில் சீனாவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது.

முன்னதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியன் தென் கொரியாவை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. அத்துடன் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை உறுதி செய்தது.

The post பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts