தினசரி செய்திகள்

Monday, September 16, 2013

ஆஸ்திரலிய தேர்தலில் அஸாஞ்சே தோல்வி.. 'செக்ஸ்' கட்சியை விட கம்மியான ஓட்டு வாங்கினார்! Sex politics news

ஆஸ்திரலிய தேர்தலில் அஸாஞ்சே தோல்வி.. 'செக்ஸ்' கட்சியை விட கம்மியான ஓட்டு வாங்கினார்!

by Marikumar
ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ்Today,

ஆஸ்திரேலியாவில் நடந்த செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தரவில்லை. அவர் போட்டியிட்ட விக்டோரியாவில் தோல்வியைத் தழுவினார். அவரது கட்சிக்கும் வெற்றி கிட்டவில்லை.

விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.

இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் கிளம்பின. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் அஸாஞ்சே. இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு.

தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கிறார் அஸாஞ்சே. இந்த நிலையில் அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார். அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் அஸாஞ்சே உள்பட அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஒரு சீட்டில் கூட அஸாஞ்சே கட்சியால் வெல்ல முடியாமல் போய் விட்டது. அக்கட்சிக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை.

அதை விட கொடுமை என்னவென்றால் ஆஸ்திரேலிய செக்ஸ் கட்சி என்ற கட்சியை விட குறைந்த வாக்குகளை அஸாஞ்சே கட்சி பெற்றுள்ளதாம். பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற கட்சி இந்த ஆஸ்திரேலியன் செக்ஸ் கட்சியாகும். இதை விட அஸாஞ்சே கட்சிக்கு ஓட்டு கிடைத்திருப்பது அவர்களை கஷ்டப்படுத்தியுள்ளதாம்.
Share |

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts