தினசரி செய்திகள்

Friday, October 18, 2013

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூல்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு Tripati temple same day two and half crore hundi income

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரே நாளில் ரூ.2½ கோடி வசூல்: பக்தர்கள் வருகை அதிகரிப்பு Tripati temple same day two and half crore hundi income

திருப்பதி, அக். 19–

ஆந்திராவில் கடந்த 1½ மாதமாக நீடித்து வந்த தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் ஓய்ந்ததால் பஸ் போக்குவரத்து சீராகி உள்ளது.

இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவு வரத் தொடங்கி உள்ளனர். புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

தர்ம தரிசன வரிசையில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பிய நிலையில் கோவிலுக்கு வெளியே 1 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 30 மணி நேரம் ஆகிறது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 15 மணி நேரம் தரிசனத்துக்கு காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ரூ.300 விரைவு தரிசன கவுண்டர் மதியம் 3 மணிக்கு மூடப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பால் கோவில் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதமாக உண்டியல் வருமானம் ரூ.1½ கோடியை தாண்டாமல் இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.2.57 கோடி வசூலானது. நடந்து முடிந்த பிரமோற்சவத்தின் போது கூட இந்த அளவு உண்டியல் வருமானம் கிடைக்கவில்லை என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலையில் நேற்று இரவு பவுர்ணமி தின கருடசேவை நடந்தது. கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts