தினசரி செய்திகள்

Thursday, August 29, 2013

2ஜி ஊழலை விசாரிக்கும் குழுவில் தி.மு.க. எம்.பி. வசந்தி ஸ்டான்லி dmk mp vasanthi stanley

2ஜி ஊழலை விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் தி.மு.க. எம்.பி. வசந்தி ஸ்டான்லி 2g issue enquiry parliament group team dmk mp vasanthi stanley

பாராளுமன்ற கூட்டுக் குழுவில் 30 எம்.பி.க்கள் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் 20 பேர் பாராளு மன்றத்தில் இருந்தும் 10 பேர் மேல்–சபையில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டவர்கள். பாராளுமன்ற மேல்– சபை எம்.பி.க்களான சுதர்சனம் நாச்சியப்பன் (காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.) ஆகியோர் பாராளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

சுதர்சனம் நாச்சியப்பன் மத்திய மந்திரியாக உள்ளார். திருச்சி சிவாவின் எம்.பி. பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்து விட்டது. எனவே 2 பேரும் தற்போது பாராளுமன்ற கூட்டுக் குழுவில் இல்லை. இதனால் 2 இடங்கள் காலியாகி இருக்கிறது.
பாராளுமன்ற கூட்டுக் குழு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஊழல் குறித்து விசாரித்து வருகிறது. இதன் தலைவராக பி.சி.சாக்கோ இருந்து வருகிறார்.
தற்போது இந்த குழுவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கும் மேல்–சபை எம்.பி.க்கள் 2 பேர் நியமிக்கப்பட உள்ளனர். யாரை நியமிப்பது என்பதும் முடிவாகி விட்டது.
அதன்படி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மேல்– சபை காங்கிரஸ் எம்.பி. பட்டாச்சாரியா பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். தி.மு.க. எம்.பி. வசந்தி ஸ்டான்லியும் இந்த குழு உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார்.
பாராளுமன்ற மேல்– சபை எம்.பி.க்களில் இருந்து கூட்டுக்குழுவின் புதிய உறுப்பினர்களை முறைப்படி நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. வருகிற 6–ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைகிறது. அதற்குள் புதிய உறுப்பினர்கள் 2 பேர் பாராளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts