தினசரி செய்திகள்

Wednesday, August 21, 2013

தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி Krishnan murder case appeal to the Supreme Court against the release of MK Azhagiri

முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் மதுரையில் கடந்த 2003–ம் ஆண்டு மே மாதம் 20–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு மதுரை செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.


கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஆந்திர மாநிலம் சித்தூர் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை முடிந்த பின்னர் கடந்த 2008–ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட மு.க.அழகிரி உள்பட 13 பேரை விடுதலை செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
தா.கிருஷ்ணன் கொலை வழக்கு தீர்ப்பு வந்தபோது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி இருந்தது. இதனால் அரசு அப்பீல் மனு செய்யவில்லை.
கடந்த 2011–ல் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அப்பீல் செய்வது குறித்து ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில் ஆந்திர மாநில அரசு வக்கீல் ஆந்திர ஐகோர்ட்டில் அப்பீல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஆந்திர அரசு அப்பீல் மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நேரடியாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts