தினசரி செய்திகள்

Saturday, August 24, 2013

சந்திரபாபுநாயுடுவே காரணம் நடிகை ரோஜா குற்றச்சாட்டு partition of Andhra Reason chandrababu naidu Actress roja said

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தாயார் விஜயலட்சுமி குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று 5–வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடித்தது.
உண்ணாவிரதம் காரணமாக விஜயலட்சுமி சோர்வடைந்து உள்ளார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தது. ரத்த அழுத்தமும் குறைந்து வருவதாக டாக்டர்கள் கூறினார்கள். 
இதன் காரணமாக உட்கார முடியாமல் உண்ணாவிரத மேடையில் அவர் படுத்து கிடக்கிறார். ஏராளமான மக்கள் வரிசையில் நின்று அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ரோஜா நேற்று குண்டூர் வந்து விஜயலட்சுமியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். அப்போது ஆந்திரா பிரிந்ததற்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது:–
தெலுங்கானா பிரிவினை குறித்து எனக்கு ஆட்சேபம் இல்லை என்று சந்திரபாபுநாயுடு 2 முறை கடிதம் கொடுத்து உள்ளார். முக்கிய எதிர்கட்சி தலைவரான அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் ஆட்சி கவிழ்ந்து இருக்கும் தெலுங்கானா பிரிந்து இருக்காது.
ராயலசீமா பகுதியை சேர்ந்த அவர் ஆந்திர மக்களுக்கு பாவம் செய்து விட்டார்.
தெலுங்கானாவும், ஆந்திராவும் எனக்கு 2 கண்கள் என்று கூறியவர் அப்போது 2 கண்ணையும் குத்தி குருடாக்கி விட்டார்.
காங்கிரசில் இருந்த சந்திரபாபுநாயுடு என்.டி. ராமராவ் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய போது அக்கட்சிக்கு தாவி அவரது மகளை மணந்து மருமகனாகி இறுதியில் அவரது முதுகில் குத்தியே ஆட்சியை பிடித்தவர். இப்படி முதுகில் குத்துவது அவருக்கு கைவந்த கலை. தெலுங்கு மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு நடிகை ரோஜா பேசினார்.
தெலுங்கானா எதிர்பு போராட்டம் ஆந்திராவில் இன்று 24 நாளாக நீடிக்கிறது. கர்னூல், அனந்தபுரம், கடப்பா, நெல்லூர், திருப்பதி, விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
கர்னூலில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஓரிடத்தில் திரண்டு ஐக்கிய ஆந்திராவுக்கு ஜெய் என்ற கோஷத்தை சுமார் 2½ மணி நேரம் முழங்கினார்கள். பின்னர் ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதே போல் கர்னூலில் மாணவர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts