தினசரி செய்திகள்

Friday, September 13, 2013

Modis prime ministerial candidate appointment Rajnath Singh announced

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி நியமனம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு bjp Party Modis prime ministerial candidate appointment Rajnath Singh announced

Tamil NewsToday

புதுடெல்லி, செப். 13- பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது. நவம்பர் மாதம் 5 மாநில தேர்தல் முடிந்தபிறகு மோடியை முன் நிறுத்தலாம் என்று அத்வானி கூறி வந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ, நரேந்திர மோடியை உடனே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பா.ஜ.க ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால், மோடி விஷயத்தில் ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டு வந்த அத்வானி கூட்டத்திற்கு வரவில்லை. இக்கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அப்போது மோடிக்கு அதிக ஆதரவு இருந்ததால், அவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிருபர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அத்வானியை சந்தித்து அவர் வாழ்த்து பெறுவார் என்றும் கூறினார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சி அலுவலகத்திற்கு வெளியில் திரண்டிருந்த மோடியின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டபடி ஆரவாரம் செய்தனர். ...
Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts