தினசரி செய்திகள்

Wednesday, October 2, 2013

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு இன்று தண்டனை அறிவிப்பு Fodder scam case punishment announced today Lalu Prasad

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு இன்று தண்டனை அறிவிப்பு Fodder scam case punishment announced today Lalu Prasad

Tamil NewsYesterday, 05:30

ராஞ்சி, அக்.3-

பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக 53 பிரிவுகளாக நடக்கிறது. இதில் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் சைபாசா மாவட்ட கருவூலத்தில் மோசடியாக ரூ.37 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்ற வழக்கில் ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 30-ந் தேதி அன்று தீர்ப்பு கூறியது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் இன்னொரு முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்நாத் மிஸ்ரா, ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி பிரவாஸ் குமார்சிங் தீர்ப்பு அளித்தார். இவர்களுக்கான தண்டனை இன்று காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக அறிவிக்கப்படுகிறது.

2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டால், லாலு பிரசாத்தும், ஜெகதீஷ் சர்மாவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தங்களது எம்.பி. பதவியை இழக்க நேரிடும். இதனை தொடர்ந்து அடுத்த 6 வருடங்களுக்கு அவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

லாலு பிரசாத் சிறை தண்டனை பெறுவதால், ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கும் என்ற செய்தியை கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத்சிங் மறுத்தார். மூத்த தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவோம் என்றார்.

லாலு பிரசாத்தை, சிறையில் ரகுவன்ஸ் பிரசாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரதாப் கூறுகையில், எனது தந்தைக்கு நீதி கிடைப்பதற்காக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்றார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 80 வயதாகும் ஜெகன்நாத் மிஸ்ரா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts