சென்னை கடல் பகுதியில்
தீவிரவாதிகள் வேட்டையில்
இலங்கை மீனவர்கள் சிக்கினர் chennai sea
area militants hunt sri lankan fishermen caught
தமிழக கடல் பகுதி வழியாக
தீவிரவாதிகள் புகுந்து ராமேஸ்வரம்,
மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட
பகுதிகளில் தாக்குதல் நடத்தலாம் என
மத்திய உளவுத்துறை போலீசார் 3
முறை எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையடுத்து தமிழக கடலோர
பகுதிகள் முழுவதும்
பாதுகாப்பு படையினர்
உஷார்படுத்தப்பட்டு தீவிர
கண்காணிப்பில்
ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை கடல்
பகுதியில் கடலோர
பாதுகாப்பு படையினர்
கண்காணிப்பில் ஈடபட்ட
போது சந்தேகத்திற்கிடமாக நின்ற
இலங்கை மீன்பிடி படகை சுற்றி வளைத்தனர்.
அதில் இருந்த இலங்கையை சேர்ந்த
லட்சுமணன் பெரேரா, முத்துமாலா,
வகேரா சாந்தா, அசிலா,
பாதா ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் சென்னை கடல்
பகுதி வரை எப்படி மீன்பிடிக்க வந்தனர்
என தெரியவில்லை. பிடிபட்ட 5
இலங்கை மீனவர்களும்
சென்னை துறைமுக போலீசில்
ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
No comments:
Post a Comment