இந்திய இளம்பெண் பிரீத்தி ராஜாகோபாலனுக்கு காமன்வெல்த் சுற்றுச்சூழல் விருது Priti rajagopalan wins Commonwealth youth environment award
D
லண்டன், அக். 19-
மாசு அடைந்து வரும் உலகின் சுற்றுச் சூழ்நிலையில் மாற்றம் கொண்டுவர சுற்றுச்சூழல் ஆர்வலரான இந்தியர் பிரீதி ராஜகோபாலன் (23) தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பிரீத்தி தனது 18-வது வயதில் சக மாணவர்களுடன் சேர்ந்து கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கினார். அதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 200 பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கழிவுகள் மற்றும் உரமாக்கும் பொருட்களை தனியாக பிரிப்பதற்கான பயிற்சியை பிரீத்தி ராஜகோபாலன் அளித்துள்ளார்.
பின்னர் அந்த உரங்கள் மலிவு விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன். 40 நகரங்களில் அவர் நடத்தி வரும் இத்திட்டத்திற்கு அரசு நிதியுதவியும் அளித்து வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கு சூரிய சக்தியை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கவும், நீரை சுத்தகரிக்கவும் பயிற்சியளித்து வருகிறார்.
உள்ளூர் சமூக தொண்டு அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகளுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பணிகளை மிகச் சிறப்பாக செய்து வரும் பிரீத்தி ராஜகோபாலனுக்கு லண்டன் காமன்வெல்த் நிர்வாகத் தலைமையகத்தில் நடந்த விழாவில் காமன்வெல்த் நாடுகளின் சுற்றுச்சூழல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அத்துடன் 5000 பவுண்ட் பணமுடிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதை பெற்றுக்கொண்ட பிரீத்தி ராஜகோபாலன் கூறியதாவது:-
இந்த விருதானது காற்று மண்டலத்தை தூய்மை படுத்தும் எனது நடவடிக்கையை முன்னோக்கி எடுத்துச்செல்ல ஊக்கமளிக்கிறது. என்னுடன் மேலும் அதிகமானோரை இந்தப் பணியில் இணைக்க இது உறுதுணையாக இருக்கும்.
இந்த பரிசுத்தொகையை கொண்டு சூரிய சக்தியை பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலான நகர கரிம வேளாண்மை பண்ணை திட்டத்தை தொடங்கி அதன் மூலம் அப்பகுதிகளுக்கு உணவு உற்பத்தியை பெருக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு பிரீத்தி கூறினார்.
...
shared via