தினசரி செய்திகள்

Saturday, September 14, 2013

உனக்குள் நான் unakkul naan

உனக்குள் நான்

என் இனிய  காதலியே
                                 உனக்காகவே  
உதயமான வென்மதியாக 
                     உன் நினைவுகளுடன்
வாழும் செந்தாமரை நான் 
                  இரவு பொழு தெல்லாம் 
உறக்கம் துறந்து உன் நினைவுகளுடன் 
                                            வாழும் இதயம் நான்!
ஆண்டுகள் பல கடந்தாலும் 
                                    யுகங்கள் பல ஆனாலும்
மாறாத காதல் மனதாய் 
                            தென்றலென மாறி 
உன் சுவாசத்தில் 
              கலந்தே உயிர் 
வாழும் உள்ளம் 
                      நான்
Show commentsOpen link

கடன் கொடுத்தவருக்கே கொலை மிரட்டல்வழக்கில் பிடிவாரண்ட் : தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!

கடன் கொடுத்தவருக்கே கொலை மிரட்டல்வழக்கில் பிடிவாரண்ட் : தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!

by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...Today,

பிரபல பைனான்சியரும், விநியோகஸ்தருமான மதுரை அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

அஜீத் நடித்த காதல் கோட்டை, முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க மற்றும் வான்மதி, காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள், கடல் பூக்கள், வெற்றிக்கொடி கட்டு உட்பட 10–க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன்.

இவர் மீது மதுரையை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன் 15.3.2006–ம் ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் "தனக்கும் சிவசக்தி பாண்டியனுக்கும் பணம் கொடுக்கல்–வாங்கல் உள்ளது என்றும், அது தொடர்பாக அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும்" அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழக திரைப்பட வர்த்தக சங்க முகவரியை மையமாக வைத்து அந்த புகாரை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எழும்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிவசக்தி பாண்டியன் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதையடுத்து அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கோர்ட்டின் உத்தரவை ஏற்று ஆயிரம் விளக்கு போலீசார் சிவசக்தி பாண்டியனை இன்று கைது செய்தனர்.

107 total views, 107 views today

The post கடன் கொடுத்தவருக்கே கொலை மிரட்டல்வழக்கில் பிடிவாரண்ட் : தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது! appeared first on Sound Camera Action.

Show commentsOpen link

Friday, September 13, 2013

Modis prime ministerial candidate appointment Rajnath Singh announced

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி நியமனம்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு bjp Party Modis prime ministerial candidate appointment Rajnath Singh announced

Tamil NewsToday

புதுடெல்லி, செப். 13- பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது. நவம்பர் மாதம் 5 மாநில தேர்தல் முடிந்தபிறகு மோடியை முன் நிறுத்தலாம் என்று அத்வானி கூறி வந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ, நரேந்திர மோடியை உடனே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பா.ஜ.க ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால், மோடி விஷயத்தில் ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டு வந்த அத்வானி கூட்டத்திற்கு வரவில்லை. இக்கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அப்போது மோடிக்கு அதிக ஆதரவு இருந்ததால், அவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் நிருபர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அத்வானியை சந்தித்து அவர் வாழ்த்து பெறுவார் என்றும் கூறினார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சி அலுவலகத்திற்கு வெளியில் திரண்டிருந்த மோடியின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டபடி ஆரவாரம் செய்தனர். ...
Show commentsOpen link

பழைய கூட்டணியில் மீண்டும் ஹன்சிகா actress hanshika old groups

பழைய கூட்டணியில் மீண்டும் ஹன்சிகா

- Tamil newsToday

ஹன்சிகா, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இது, காதலால் ஏற்பட்ட சந்தோஷம் அல்ல; அவரின், அடுத்த படம் குறித்த சந்தோஷம். இதுகுறித்து, அவர், என், அடுத்த படம் குறித்து, பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அவை எல்லாம் உண்மையில்லை. தீயா வேலை செய்யணும் குமாருபடத்துக்கு பின், மீண்டும், சுந்தர். சி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அவருடன் பணியாற்றுவது, இனிமையான அனுபவம். இந்த படம், ஹீரேயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். படத்தின் கதையே, என்னைச் சுற்றித் தான் நககிறது. இதனால், என் நடிப்புத் திறமையைவெளிப்படுத்துவதற்கு, எனக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என, கூறியுள்ளார்.

Show commentsOpen link

Wednesday, September 11, 2013

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?


தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம்தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக
அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?

- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்
- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்
- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்
- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:
http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

எனது அமைதிதான் தலைவா பட வெற்றிக்கு காரணம்:விஜய்! Victory reason for thalaivaa movie

எனது அமைதிதான் தலைவா பட வெற்றிக்கு காரணம்:விஜய்!

தலைவா பட பிரச்சினையின் போது நான் அமைதியாக இருந்ததுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் 'தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.

Tuesday, September 10, 2013

இலங்கை ஆண்களில் 14.5 சதவீதத்தினர் பலாத்காரம் செய்கின்றனர் srilankan gents rape story

இலங்கை ஆண்களில் 14.5 சதவீதத்தினர்
பலாத்காரம் செய்கின்றனர்;

ஆய்வு
இலங்கையில் 14.5
சதவீதத்துக்கு அதிகமானோர்
அல்லது 10 மனிதரில்
ஒருவருக்கு மேற்பட்டோர்
குறைந்தபட்சம்
ஒரு தடவையாவது பெண்
மீது வல்லுறவு செய்ததை ஒப்புக்கொண்டனர்
என பெண்களுக்கு எதிரான
வன்முறை எனும்
ஐ.நா ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் ஆறு நாடுகளை சேர்ந்த
பத்தாயிரம் ஆண்கள் பங்கேற்றனர்.
பெண்களுக்கு எதிரான
வன்முறை எவ்வளவு தூரம் பரவலாக
காணப்படுகின்றது, அதற்கான காரணம்
என்பவற்றை அறிவதற்காக பல
நாடுகளை உள்ளடக்கி நடைபெற்ற
முதலாவது ஆய்வு இதுவாகும்.
வல்லுறவை ஒப்புக்கொண்டவர்களில்
அரைவாசிக்கு சற்று குறைவானோர்
தாம் ஒரு தடவைக்கு மேல்
இவ்வாறு செய்வதாக கூறினார்.
பெண்களுக்கு எதிரான பலாத்காரம்
நாடுகளுக்கு இடையில்
வேறுபட்டு காணப்பட்டது.
பப்புவா நியூகினியில் 10 பேரில்
அறுவர் பெண்களை பலவந்தமாக
பாலுறவுக்கு உட்படுத்தியதாக
கூறினார்.
கம்போடியா,சீனா,இந்தோனிஷியா ஆகிய
நாடுகளில் ஆய்வுக்கு உட்பட்டோரில்
20 சதவீதம் தொடக்கம் 50 சதவீதம்
வரையிலானோர்
வல்லுறவு கொண்டவர்களாக உள்ளனர்
என்றும் இந்த
ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளில்
முழு ஆசிய மற்றும் ஆசிய பசுபிக்
பிராந்தியத்துக்கும் பொருந்தாது.
ஆயினும் ஆய்வுக்குட்பட்ட நாடுகளில்
பயனள்ள தகவல்களை தந்துள்ளது என்றும்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஆன்லைன்’ வர்த்தகத்தில் இருந்து மஞ்சளை நீக்க வேண்டும்: பிரதமரிடம் விவசாயிகள் வலியுறுத்தல் online trade remove manjal Manmohan singh farmers request

'ஆன்லைன்' வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்க வேண்டும்:
பிரதமரிடம் விவசாயிகள்
வலியுறுத்தல் online trade remove manjal
Manmohan singh farmers request

ஈரோடு, செப். 10–
ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர்
கணேசமூர்த்தி தலைமையில் இந்திய
மஞ்சள் விவசாயிகள் சங்க தலைவர்
தெய்வசிகாமணி, தெலுங்கு தேசம்
கட்சி எம்.பி.க்கள் நாகேஸ்வரராவ், ரமேஷ்
ரத்தோர், ஆந்திர மஞ்சள் விவசாயிகள் சங்க
தலைவர் நரசிம்மநாயுடு ஆகியோர்
டெல்லி சென்றனர்.
பின்னர் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர்
மன்மோகன்சிங், நுகர்வோர் நல மத்திய
மந்திரி தாமஸ்
ஆகியோரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
மஞ்சள்
விலை தொடர்ந்து இறங்குமுகமாக
இருப்பதற்கு ஆன்லைன் வர்த்தகத்தில்
நடைபெறம் சூதாட்டமே காரணம்
ஆகும். எனவே ஆன்லைன் வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்க வேண்டும்.
ஆன்லைன் வர்த்தகத்தில் நடைபெறும்
முறைகேடுகள் பற்றி சி.பி.ஐ.
விசாரணை நடத்த வேண்டும். மஞ்சள்
வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்.
நடப்பு சந்தையில் மஞ்சள்
விற்பனை விலையைவிட
கமாடிட்டி முன்பேர வர்த்தகத்தில்
விற்கப்படும் மஞ்சளின் விலை 20 முதல்
25 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.
இதனை கருத்தில்
கொண்டு விவசாயிகளின்
உரிமைகளை பாதுகாக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில்
கூறப்பட்டிருந்தது.
பிரதமரை சந்தித்தது தொடர்பாக
கணேமூர்த்தி எம்.பி. நிருபர்களிடம்
கூறும்போது,
"மனுவை பெற்றுக்கொண்ட பிரதமர்
ஆன்லைன் வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்குவது சம்பந்தமாக
ஒரு குழு அமைப்பதாக தெரிவித்தார்.
2 மாத காலத்திற்குள் ஆன்லைன்
வர்த்தகத்தில்
இருந்து மஞ்சளை நீக்காவிட்டால்
ம.தி.மு.க. விவசாயிகளுடன்
இணைந்து போராட்டம் நடத்தும்" என்றார்.

Sunday, September 8, 2013

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: கலெக்டர் நந்தகுமார் அறிவிப்பு 144 ban announce in ramanadhapuram district



இமானுவேல்சேகரன் நினைவு தினம், தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமுலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இன்று (9–ந்தேதி) முதல் 15–ந்தேதி வரையும், அக்டோபர் 25–ந்தேதி முதல் 31–ந்தேதி வரையும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் இருந்தும் இமானுவேல்சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை போன்றவற்றுக்கு வாடகை வாகனங்களில் வரவும் தடைவிதிக்கப்படுகிறது.

இதேபோல் நினைவு ஜோதி எடுத்துவரவும் அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நினைவிடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஜோதி எடுத்து வரலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மனம் இருந்தால் போதும்...!!! Manam irunthal pothum

தமிழால் இணைவோம்:
மனம் இருந்தால் போதும்...!!!

ஒரு பிச்சைக்காரன் சாலையில் சென்ற பெரியவரிடம் பிச்சை கேட்டான். இளகிய மனம் படைத்த பெரியவர் அவனுக்குப் பிச்சையிட வேண்டும் என்ற ஆர்வத்தில், தன் கையைச் சட்டைப் பைக்குள் விட்டுத் துழாவினார். ஒரு காசுக்கூடக் கிடைக்கவில்லை. வேதனையோடு பிச்சைக்காரனிடம், பணமில்லையே தம்பி! என்றார். அதைக் கேட்ட பிச்சைக்காரனின் முகத்திலே ஓர் ஒளி...!
ஐயா, காசு இல்லை என்பதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். பிச்சை கொடுப்பதைக் காட்டிலும் பெரிய உதவி ஒன்றை நீங்கள் எனக்குச் செய்துவிட்டீர்கள்! யாருமே என்னை மதிக்காதபோது தம்பி என்றல்லவா என்னை அழைத்து விட்டீர்கள், அதுபோதும் என்றான் அவன். பணமோ காசோ கொடுப்பது மட்டுமல்ல; இனிமையாகப் பேசுவதும் அறம் தான். யாவருக்குமாம் பிறருக்கு இன்னுரை தானே என்பதைத் திருமூலரும் கூறியிருக்கிறார்...!

எனவே பணம் இருந்தால் தான் அறம் செய்ய முடியும் என்பதில்லை...! மனம் இருந்தால் போதும் ஆயிரம் அறங்கள் செய்யலாம்...!!

-Pon Mani

Visit our Page -► தமிழால்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழ்நாட்டில் இன்றும் மழை பெய்யும் today tamilnadu rained

வங்க கடலில் புதிய காற்றழுத்த
தாழ்வு: தமிழ்நாட்டில் இன்றும்
மழை பெய்யும் today tamilnadu rained

சென்னை, செப்.8–
சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குனர் ரமணன்
இன்று கூறியதாவது:–
ஆந்திரா அருகே வங்க கடலில்
வளி மண்டலத்தின் மேல் அடுக்கில்
உருவான சுழற்சி காரணமாக
நேற்றிரவு தமிழ்நாட்டில்
வடமேற்கு மாவட்டங்களில்
ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது.
இந்த சுழற்சி இன்னும் நீடிப்பதால்
இன்றிரவும் மழை பெய்யும். வட
மாவட்டங்களில் அனேக இடங்களிலும்,
மற்ற பகுதிகளில்
ஓரிரு பகுதிகளிலும்
மழை எதிர்பார்க்கலாம்.
சென்னையில் வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில்
இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தற்போது ஆந்திரா அருகே மத்திய
மேற்கு வங்க கடலில் புதிதாக
ஒரு காற்றழுத்த
தாழ்வு உருவாகி உள்ளது. இது நகரும்
பட்சத்தில் தமிழ்நாட்டில் மேலும்
மழை பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
இன்று காலை 8.30 மணி வரை முக்கிய
ஊர்களில் பெய்த மழை அளவு விவரம்
வருமாறு:–
புதுச்சேரி–10 செ.மீட்டர்,
கும்பகோணம்–7 செ.மீ., கடலூர்,
விழுப்புரம்–6 செ.மீ., ஏற்காடு, மைலம்,
உளுந்தூர்பேட்டை, ஊத்தங்கரை,
சிதம்பரம்–5 செ.மீ., நெய்வேலி, செஞ்சி,
குடவாசல், தொழுதூர்–4 செ.மீ.,
ஓமலூர், வாழப்பாடி, பரங்கிப்பேட்டை,
தர்மபுரி, திருப்பத்தூர், ஒரத்தநாடு,
சேலம், சின்னகல்லார்–3 செ.மீ.,
நடுவட்டம், அரியலூர், ஆத்தூர்,
போச்சம்பள்ளி, மன்னார்குடி–2 செ.மீ.,
ஈரோடு, திருத்துறைப்பூண்டி,
திருவாரூர், சேத்தியாதோப்பு,
விருத்தாச்சலம், மேட்டூர், பாபநாசம்,
வால்பாறை, ஸ்ரீமுஷ்ணம், நீடாமங்கலம்,
வலங்கைமான், தம்மம்பட்டி, ஓசூர்,
கள்ளக்குறிச்சி, தேங்கனி கோட்டை,
பெரம்பலூர்–1 செ.மீட்டர்.

My Blog List

Popular Posts

Popular Posts