தினசரி செய்திகள்

Saturday, October 5, 2013

கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி actress sri devi daughter

கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாகிறார். இதற்காக, உடற்பயிற்சி, நடனம் என உடம்பை மெருகேற்றி வருகிறார்.

பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா, துளசி சினிமாவுக்கு வந்துள்ளனர். இருவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து பழைய கனவுக் கன்னியான ஸ்ரீதேவி மகள் ஜான்வியும், சினிமாவில் அறிமுகமாகிறார்.

இரு வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஸ்ரீதேவியை அணுகி தங்கள் படங்களில் ஜான்வியை அறிமுகப்படுத்த கேட்டனர். ஆனால் சிறுமியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார். தற்போது ஜான்வி வளர்ந்து கதாநாயகிக்குரிய புது பொலிவோடு காட்சி தருகிறார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு ஜான்வியை ஸ்ரீதேவி அழைத்து வந்திருந்தார். கூட்டத்தினரை ஜான்வி அழகு வசீகரித்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். முன்பு ஒல்லியாக இருந்தவர் இப்போது மொழு மொழு என மாறி இருப்பதாக பேசினர்.

உடற்பயிற்சி, நடனம், உணவு கட்டுப்பாடு என அழகூட்டி இருந்தார். ஸ்ரீதேவி பிரபல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் மும்பை பட உலகினர் தெரிவித்தனர்.

The post கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

13ம் தேதி ‘பாண்டியநாடு’ pandiya nadu audio release on 13th

13ம் தேதி 'பாண்டியநாடு' ஆடியோ வெளியீடு

by admin
TamilSpyToday
நடிகர் விஷால், தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம்' மூலம் முதன்முதலாக தயாரித்துள்ள படம் 'பாண்டிய நாடு'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்கிவுள்ளார்.

டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக் சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த பாடல் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் மொத்த பாடல்களையும் வருகிற 13-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இந்த விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

விஷால் நடிக்க, சுந்தர்.சி. இயக்கியிருக்கும் 'மதகஜராஜா' படம் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்து வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் விஷாலின் 'பாண்டிய நாடு' படத்தை வரும் தீபாவளிக்கு திரையிட உள்ளனர்.

Show commentsOpen link

தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது – ரஜினி ஆவேச பேச்சு! actor rajini speech

தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது – ரஜினி ஆவேச பேச்சு!

by abtamil

16 வயதினிலே பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதாவது:–

தயாரிப்பாளர் ராஜ்கண்ணு என்னை சந்தித்து 16 வயதினிலே படத்தை டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக சொல்லி டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். அவரிடம் நான் இந்த படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு நேரடியாக வரும் என்றால் நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றேன்.

ராஜ்கண்ணு சினிமாவில் மரியாதைக்குரியவர். சுயமரியாதை உள்ளவர். கர்வம் கிடையாது. 16 வயதினிலே படம் எடுத்தபோது நன்றாக ஓடாது என்றனர். ஆனால் பெரிய வெற்றி பெற்றது. கமல் அப்போது பெரிய நடிகராக இருந்தார். படம் நன்றாக ஓடியது சந்தோஷமாக இருந்தது.

மனிதர்களுக்கு கஷ்டகாலம் வரும். கெட்ட காலம் வரும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. தன்மானம் உள்ளவன் சினிமாவில் இருக்க முடியாது.

தற்போது '16 வயதினிலே' மீண்டும் ரிலீசாக உள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீசுக்கு வருவது வரவேற்கத்தக்கது. இந்த படத்தையும் ஜெயிக்க வைக்க வேண்டும். இந்த படம் நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

 

Show commentsOpen link

தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் காயம் two policemen injured in firefight near puthur

தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் காயம் two policemen injured in firefight near puthur

Tamil NewsToday,

புத்தூர், அக். 5–

சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று திருப்பதி குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் படை உஷார்படுத்தப்பட்டது. திருப்பதி குடை ஊர்வலத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றொரு பிரிவினர் லாட்ஜ்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

பெரியமேட்டில் ஒரு லாட்ஜில் போலீசார் சோதனையிட்டபோது தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் பதுங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான படை அவனை சுற்றி வளைத்து கைது செய்தது.

போலீசார் மடக்கிப் பிடித்ததும் பக்ருதீன் இன்ஸ்பெக்டரின் கழுத்தை நெரித்தும் கட்டிப்புரண்டு சண்டை போட்டும் தப்ப முயன்றான். உடனே இன்னொரு இன்ஸ்பெக்டர் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பக்ருதீனை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று கூட்டாளிகள் எங்கே என்று விசாரித்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் ஆந்திரா மாநிலம் புத்தூரில் உள்ள ஒரு வீட்டை தமிழக – ஆந்திர போலீஸ் படை சுற்றி வளைத்தது.

தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் அங்கு குடும்பத்துடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இவர்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் வியாபாரிகள் போல் அங்கு 6 மாதமாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுடன் பெண்களும் இருந்தனர்.

போலீசார் முன் எச்சரிக்கையாக அந்த பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றினார்கள். அதன்பிறகு அதிகாலை 4 மணிக்கு தமிழக இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் ஒரு போலீஸ்காரர் ஆகியோர் துப்பாக்கியுடன் அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தனர்.

போலீசை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டினார்கள். இதில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வெட்டுக்காயம் அடைந்தார்.

வீட்டுக்குள் சென்ற மற்றொரு போலீஸ்காரரை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டனர்.

தீவிரவாதிகள் வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கியுடன் அந்த வீட்டில் பதுங்கி இருக்கிறார்கள். போலீசார் வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கியால் சுட்டபடி இருந்தனர். பதிலுக்கு அவ்வப்போது தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டு வருகிறார்கள்.

இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. தொடர்ந்து அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

2 தீவிரவாதிகளும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் சிக்கிய தமிழக போலீஸ்காரரின் கதி என்ன என்று தெரியவில்லை. அவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று ஒரு தகவல் கூறுகிறது.

ஆனால் அவரை பணய கைதியாக பிடித்துக் கொண்டு தீவிரவாதிகள் தப்ப முயற்சிக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

காலை 4 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை 10 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் நீடித்தது. 10 மணிக்கு மேலும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தெரிவிக்கிறார்கள்.

நீண்ட நேர துப்பாக்கி சண்டைக்கு பின் தீவிரவாதி இஸ்மாயில் போலீசாரிடம் பிடிபட்டான். அவனிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகளும், வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

மற்றொரு தீவிரவாதி பிலால் மாலிக்கை பிடிக்க போலீசார் தொடர்ந்து முற்றுகையிட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் – போலீஸ் துப்பாக்கி சண்டையால் புத்தூரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தீவிரவாதிகள் அரிவாளால் வெட்டியதில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு புத்தூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் 5 இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

...
Show commentsOpen link

Friday, October 4, 2013

‘பலான’ வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்! Do not link website

'பலான' வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்!

by Marikumar

டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படும் இந்த பெயரே கூட இணையத்தின் பகிர்வு கலாச்சாரத்திற்கு எதிரானதாக தோன்றலாம்.இணைப்பு தருவதால் அந்த தளத்திற்கு தேடியந்திர பலன் கிடைத்து விடாமல் இருக்கும் வகையில் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுக்க வழி செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றலாம்.

எந்த ஒரு இணையதளத்திற்கும் இணைப்பு தரும் போது அதை பலரும் சென்று பார்ப்பதும் இப்படி பலர் வருகை தருவதால் அந்த தளம் தேடியந்திர தேடல் முடிவுகள் பட்டியலில் முன்னிலை பெறுவதும் இயல்பானது தானே. ஒரு விதத்தில் இணைப்புகள் தருவதன் நோக்கமும் இது தான்.

அப்படியிருக்க , இணைப்பு தருவதன் பலன் அந்த தளத்திற்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே துவக்கப்பட்டுள்ள சேவையை எப்படி புரிந்து கொள்வது என குழம்பலாம்.

நிற்க, நல்ல இணையதளங்கள் என்றால் பிரச்சனையே இல்லை. நல்ல இணையதளங்கள் என்றால் அதற்கு அவற்றுக்கு தாரளமாக இணைப்பு தரலாம். அவை பயன்பெறுவதை பார்த்து மகிழலாம்.ஆனால் மோசமான,வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தர நேரிடும் போது என்ன செய்வது?

ஒவ்வொரு இணைப்பும் தேடியந்திர மதிப்பை கூட்ட பயன்படும் என்பதால் மோசமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது அவை அந்த இணைப்பால் பயன் பெற்று விடும். சரி மோசமான இனையதளங்களுக்கு இணைப்பு தராமலே இருந்து விடலாமே!

லாம் தான்!.ஆனால் சில நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோசடி தளங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது அல்லவா? அப்போது அந்த தளம் மோசமான வகையிலேனும் பிரபலமாகி இன்னும் கூடுதலான தேடியந்திர அங்கீகாரத்தை பெற்று விடுகிறது.விளைவு அந்த தளம் மேலும் பலரை ஏமாற்றலாம்.

இது சிக்கலானது தான் அல்லவா? இந்த சிக்கலுக்கான அழகான தீர்வு தான் டூ நாட் லிங்க் தளம் . அங்கீகாரம் பெற விரும்பாத தளங்களை சுட்டிக்காட்ட விரும்பும் போது அவற்றுக்கு நேரடியாக இணைப்பு தருவதற்கு பதிலாக அந்த தளத்தின் முகவரியை டூ நாட் லிங்க் தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே இந்த தளம் அதன் முகவரியை வேறு இணைப்பாக மாற்றித்த‌ரும்.

இந்த இணைப்பை கட்டுரையிலோ பதிவிலோ பகிர்ந்து கொண்டால் அதை கிளிக் செய்து பார்க்கலாம்.ஆனால் அந்த கிளிக் தேடியந்திர கணக்கில் வராது. அதே போல தேடியந்திர சிலந்திகள் வலை வீசி வரும் போதும் அந்த தளம் கண்ணில் படாது. காரணம் தேடியந்திரங்களை திரும்பி அனுப்பும் வகையில் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தான்.

ஆக,மோசமான இணையதளத்தை அடையாளம் காட்டியது போலவும் இருக்கும். ஆனால் அந்த தளத்திற்கு தேவையில்லாத தேடியந்திர வெளிச்சம் கிடைத்து விடாமலும் செய்து விடலாம்.

வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது டூ நாட் லிங்க் மூலமே இணைப்பு தாருங்கள்.

இதற்கான தேவை பல விதங்களில் ஏற்படலாம். உதாரணத்திற்கு ஒரு விதம்: உங்கள் அபிமான அரசியல் தலைவர் பற்றி தரக்குறைவான விமர்சனம் கண்டு ஆவேசம் கொள்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அந்த விமர்சனத்தை அம்பல்படுத்த அதை சுட்டிக்காட்டி உங்கள் எதிர்வினையை பதிவு செய்கிறீர்கள். நீங்கள் ஆணித்தரமாக வாத்தை வைத்தது ஒரு புறம் இருக்க, உங்களை அறியாமல் அந்த விமர்சனத்திற்கு தேடியந்திர அங்கீகாரத்தையும் பெற்று தந்து விடுகிறீர்கள். ஆனால் டூ நாட் லிங்க் இணைப்பை பயன்படுத்தினால் இதை தவிர்க்கும் அதே நேரத்தில் அந்த விமர்சன‌த்தின் உள்நோக்கத்தையும் அம்பலமாக்கலாம்.

எளிமையான சேவை தான்.ஆனால் எப்படி எல்லாம் நுட்பமாக யோசித்து உருவாக்கி உள்ளனஎ இல்லையா?

இணைப்பில்லாமல் இணைப்பு கொடுக்க: http://www.donotlink.com/

Narasimahan Ramakrishnan
Share |

Show commentsOpen link

ஓரினச் சேர்க்கையாளர்கள் அரவாணிகளுக்கான 24 மணி நேர ‘கியு ரேடியோ’ : பெங்களூரில் துவக்கம் Radio station started for LGTB community

ஓரினச் சேர்க்கையாளர்கள் அரவாணிகளுக்கான 24 மணி நேர 'கியு ரேடியோ' : பெங்களூரில் துவக்கம் Radio station started for LGTB community

Tamil NewsYesterday,

பெங்களூர், அக். 5-

இந்தியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் மற்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களுக்கு என பிரத்யேகமான 24 மனிநேர வானொலி சேவையை பெங்களூரை சேர்ந்த 'கியு ரேடியோ' துவக்கியுள்ளது.

மேற்கண்ட சமுதாயத்தினருக்கான சிறப்பு தகவல்கள், மருத்துவ குறிப்புகள், நேயர் விருப்ப பாடல்கள் ஆகியவை 24 மணி நேரமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

ரேடியோவாலா.இன் என்ற நிறுவனம் இந்த ஒலிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது. இவர்களுக்கு என தனியாக ரேடியோ சேவை தொடங்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது ? என்ற கேள்விக்கு இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் பங்குதாரருமான அனில் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-

2009-ம் ஆண்டு எங்கள் வானொலியின் டெல்லி நிகழ்ச்சியில் இந்த சமுதாயத்தினர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நான் தொகுத்து வழங்கினேன்.

அன்றிரவு முதல் அவர்கள் மத்தியில் எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஒரு நிகழ்ச்சியிலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் போது, இவர்களுக்கு என தனியாக ஒரு சேனலை தொடங்கினால் என்ன ? என சிந்தித்தேன்.

அது இப்போதுதான் செயல் வடிவம் பெற்றுள்ளது.

பொதுவாக மீடியாக்களாலும் சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.

இவர்களையும் முன்னிலைப் படுத்தக்கூடிய பிரதிநிதிகள் தேவை. இவர்களுக்குள் இருக்கும் எண்ணங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் சாதனம் தேவை.

அந்த சாதனமாக இந்த கியு ரேடியோ அமையும் என கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் அரசியல் தலைவர்கள் !

மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் அரசியல் தலைவர்கள் !!
by admin
Tamil news, Tamil culture, செய்திகள் ...Today

அனைத்து நாடுகளிலுமே மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கத்தில் உள்ளோர் ஜாலியாக குடும்பத்துடன் ஊர் சுற்றுவது வாடிக்கையே என்ற போதிலும் கூட தற்போது கனடாவில் இதனை எதிர்த்து சிலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மையில் வெளியிடப்பட்ட  எம்.பி. ஆண்டு செலவு அறிக்கைப்படி கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனைவிகளின் விமானப் பயணச் செலவுக்கு 2.2 மில்லியன் டாலர்களும், அவர்களின் குழந்தைகளின் விமானப் பயணச் செலவுக்கு 554.000 டாலர்களும் செலவிட்டதாகத் தெரிகிறது.

வரி கண்காணிப்பு குழுக்கள் இது போன்ற செலவுகள் பற்றிய அறிக்கைகளில் மேலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் ஒரு முக்கிய மத்திய பொதுத்துறை தொழிற்சங்க தலைவர் பேசுகையில், பொது ஊழியர்கள் தங்களது  மனைவியரை இலவசமாகப் பயணத்தில் அழைத்துச் செல்லும் நிலை இல்லாத போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படக் கூடாது எனக் கூறி கடுமையாகச் சாடினார்.

இந்த அறிக்கையில் தனிப்பட்ட பயணங்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான பணம்  ஒட்டாவாவுக்கு பயணச் செலவுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.  மிகவும் அதிகமாக முன்னாள் லிபரல் கட்சித் தலைவர்  பாப் ரே  குடும்பப் பயணச் செலவு 56,919.57 டாலர்கள்.

அடுத்து பிரிட்டிஷ் கொலம்பியா கன்சர்வேடிவ்  எம்.பி. ரிச்சர்ட் ஹாரிஸ் செய்த செலவு  51,773.63 டாலர்கள். அடுத்து வான்கூவர் கிழக்கு NDP எம்.பி. லிப்பி டேவிஸ் செய்த செலவு  49,618.09 டாலர்கள்.

இதை ஒப்பிடும்போது பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தனது மனைவி லாரீன் ஹார்ப்பர் ஆகியோரின் பயணச் செலவே  34,107.33 டாலர்கள் தான். பெரும்பாலும் இந்தச் செலவினங்கள் பிரதமரின் நியமிக்கப்பட்ட பணிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என  ஹார்பரின் தொடர்பு இயக்குனர்  ஜேசன் மெக்டொனால்ட் கூறினார்.

இது போக இங்கு குறிப்பிட்ட விமானச் செலவுகளில் அரசு விமானத்தில் பயணம் செய்த செலவுகள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மக்களின் வரிப்பணத்தில் ஊர் சுற்றும் அரசியல் தலைவர்கள் !! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

கவர்ச்சி நடிகை ரோஸ்லின் ரேப் பண்ண ட்ரை பண்ணினார்! Sexy actress roslin rape news

என்னை ரேப் பண்ண ட்ரை பண்ணினார்! கவர்ச்சி நடிகையின் புகார்! (படங்கள் இணைப்பு)
by abtamil
Tamil newsToday,

தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தன்னை தரக்குறைவாக திட்டியும், நடத்தை குறித்து விமர்சித்தும், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டடதாக கவர்ச்சி நடிகை ரோஸ்லின் கான் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோல்ஸின் கான் கொடுத்துள்ள புகார் உண்மைதானா, இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரோஸ்லின் கான் ஒரு விளம்பரப் பிரியை ஆவார். ஏதாவது ஒரு சலசலப்பில் அவ்வப்போது சிக்குவது இவரது இயல்பாகி விட்டது.

சில மாதங்களுக்கு முன்பு இவரது கவர்ச்சிப் படங்கள் நிறைய வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வுக்காக இவர் கொடுத்திருந்த போஸ்களும் சர்ச்சையை ஏற்படுத்தின.

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. அந்தப் படத்தில் செக்ஸைத் தேடி அலையும் குடும்பப் பெண் வேடத்தில் அதாவது சவீதா பாபி வேடத்தில் ரோஸ்லின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பாலியல் அத்துமீறல் புகாரை கிளப்பியுள்ளார் ரோஸ்லின்.

ரோஸ்லின் கான் வீடு மும்பையில் காரேகான் பகுதியில் உள்ளது. அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவ நாளன்று இரவு தனது சகோதரியுடன் அவர் காரில் வந்துள்ளார். வீட்டுக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது கபில் ஜாப்ரி என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறுகிறார் ரோ்ஸ்லின்

இதுகுறித்து போலீஸிலும் புகார் செய்தார். இதையடுத்து கபிலை போலீஸார் கைது செய்தனர். ஆனால் தான் ரோஸ்லினுடன் சண்டை போட்டது உண்மைதான். ஆனால் மானபங்கம் செய்யவில்லை என்று கபில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதையடுத்து ரோஸ்லின் சொல்வது உண்மையா என்பதை அறிய அங்குள்ள ரகசியக் கேமராப் பதிவை ஆராய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். தற்போது கபில் ஜாப்ரி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

 

Show commentsOpen link

Thursday, October 3, 2013

லல்லுவுக்கு 5 ஆண்டு சிறை: காங்கிரஸ், பா.ஜனதா கருத்து என்ன? 5 years prison to Lalu Congress BJP opinion what

லல்லுவுக்கு 5 ஆண்டு சிறை: காங்கிரஸ், பா.ஜனதா கருத்து என்ன? 5 years prison to Lalu Congress BJP opinion what

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.4-

லல்லு பிரசாத்துக்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி, சி.பி.ஐ. விசாரணை சுயமாக நடைபெறுகிறது, மத்திய அரசின் தலையீடு இல்லை என்பதற்கு இந்த தீர்ப்பு உதாரணம். சட்டம் அதன் கடமையை செய்திருக்கிறது என கூறினார். ஊழலை காங்கிரஸ் கூட்டணி அரசு சகித்துக்கொள்ளாது என்பதற்கு இந்த தீர்ப்பு சான்று கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், லல்லு மீதான தீர்ப்பை வரவேற்றார். அவர், ஊழல் செய்தவர்களை சட்டம் விடாது பிடித்துக்கொள்ளும் என கூறினார்.
...
Show commentsOpen link

“தமிழ்நாட்டு மச்சான் தான் நமக்கு செட்டாவார்” : நமீதா அதிரடி முடிவு namitha select tamil boy to love

"தமிழ்நாட்டு மச்சான் தான் நமக்கு செட்டாவார்" : நமீதா அதிரடி முடிவு

by abtamil

Tamil newsYesterday,

மச்சான்ஸ், மச்சான்ஸ் என்றாலே அது நமீதா டிக்ஸ்னரியில ரொம்ப ஸ்பெஷலான வார்த்தை தான். 'எங்கள் அண்ணா'வில் பார்த்த நமீதாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சுற்றல்ல, பல சுற்று பெருத்துப் போய்விட்ட அவருக்கு நடிப்புக்கு கேப் விட்டு ரெண்டு, மூணு வருஷமாகியும் இன்னும் புதிய பட வாய்ப்புகள் கிடைத்தபாடில்லை.

ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் கடைத்திறப்பு, ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் என பல வேலைகளை கொடுத்து அவரை இப்போதும் பிஸியாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் படங்களில் நடிக்க தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் நமீதா திடீரென்று தீவிர அரசியலில் இறங்கப்போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் கிளம்பின.

இதுபற்றி அவரிடம் கேட்டால் அவரும் அதை மறுக்கவில்லை.

"ஆமாம், எனக்கு திடீரென பொலிடிக்கல்ல ரொம்ப இண்ட்ரெஸ்ட் வந்திருக்கு. போன வருஷமே எனக்கு பொலிடிக்கல் மேல இண்ட்ரெஸ்ட் ஆரம்பிச்சிடுச்சு. ஆனா நான் பொலிடிக்கல்னு இறங்கினா அது தமிழ்நாட்டு பொலிட்டிக்கல்ல தான் இறங்குவேன்.

ஏன்னா, நான் இங்கேதான் வாழ்கிறேன். இங்கேதான் டாக்ஸ் கட்டுறேன். தமிழ்நாட்டுக்கு வந்து 10 வருஷமாச்சு. அதனால நான் பக்கா சென்னை பொண்ணா மாறிட்டேன். ஒரு தமிழ்நாட்டுக்காரரை என்னோட வீட்டுக்காரரா செலெட்க் பண்ணிட்டு இங்கே தான் செட்டிலாகப் போறேன்.

என்று அடுத்தடுத்து வெடிகுண்டுகளைப் போடுகிறார் நமீதா.

Show commentsOpen link

அஜீத், விஜய்யுடன் மோதும் வடிவேலு ajith vijay and vadivelu

பொங்கலுக்கு அஜீத், விஜய்யுடன் மோதும் வடிவேலு

by abtamil
Tamil newsToday,

வரும் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்களுடன் வடிவேலுவின் தெனாலிராமன் போட்டி போடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது பலரையும் கண்டமேனிக்கு தாக்கிப் பேசினார். இதையடுத்து அவரின் திரைவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகளாக படமே இல்லாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஹீரோவாக தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெருமாபாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பொங்கலுக்கு ரிலீஸ் தெனாலிராமன் படத்தை பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

ஜில்லா நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகிறது.

வீரம் பொங்கலுக்கு விஜய் படம் தவிர அஜீத்தின் வீரம் படமும் ரிலீஸ் ஆகிறது.

அஜீத்-விஜய்யுடன் பொங்கலுக்கு அஜீத், விஜய் படங்களுடன் வடிவேலுவின் படம் மோதவிருக்கிறது.

Show commentsOpen link

Wednesday, October 2, 2013

முன்னாள் தலைவரின் பங்களாவில் செக்ஸ் விருந்துகள் sex news in tamil

முன்னாள் தலைவரின் பங்களாவில் செக்ஸ் விருந்துகள்

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

இங்கிலாந்தில் உள்ள மறைந்த பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு சொந்தமான முன்னாள் பங்களாவில் ஆபாச காட்சிகள் அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் சுர்ரே கில்ட்போர்ட் பகுதியில் ராக்வுட் ஹவுஸ் என்ற பெரிய பங்களா உள்ளது.

இந்த பங்களா கடந்த 1995ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பெனாசிர் பூட்டோவுக்கு சொந்தமானதாக இருந்தது.இந்த பங்களாவில் முன்பு பெனாசிரின் கணவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி, உலகத் தலைவர்கள் பலருக்கு ஆடம்பர விருந்துகளை நடத்தியுள்ளார்.தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த பங்களாவின் விலை 80 மில்லியன் பவுண்டு வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பங்களாவை ஆடம்பர விருந்துகளுக்காக பயன்படுத்தி வருகிறார்களாம்.அதாவது இரவு நேரங்களில் செக்ஸ் விருந்துகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் டென்னிஸ் போட்டியிலும் இங்கு ஆண், பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.சமீபத்தில் இந்த பங்களாவின் உரிமையாளர் 2 நாள் திருவிழா ஒன்றை நடத்தினார்.அதற்குப் பெயரே பாவத் திருவிழா 'mini festival of sin' என்பதாகும்.உலகத் தலைவர்கள் பலருக்கும் ஆடம்பர விருந்து வழங்கப்பட்ட இந்த பங்களாவில் இவ்வாறு நடப்பது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post முன்னாள் தலைவரின் பங்களாவில் செக்ஸ் விருந்துகள் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு இன்று தண்டனை அறிவிப்பு Fodder scam case punishment announced today Lalu Prasad

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத்துக்கு இன்று தண்டனை அறிவிப்பு Fodder scam case punishment announced today Lalu Prasad

Tamil NewsYesterday, 05:30

ராஞ்சி, அக்.3-

பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத்தீவன ஊழல் வழக்கு கடந்த 17 வருடங்களாக 53 பிரிவுகளாக நடக்கிறது. இதில் அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவரும், முன்னாள் ரெயில்வே மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் சைபாசா மாவட்ட கருவூலத்தில் மோசடியாக ரூ.37 கோடியே 70 லட்சம் ரூபாய் பெற்ற வழக்கில் ராஞ்சி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 30-ந் தேதி அன்று தீர்ப்பு கூறியது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் இன்னொரு முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்நாத் மிஸ்ரா, ஜெகதீஷ் சர்மா எம்.பி. உள்பட 42 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி பிரவாஸ் குமார்சிங் தீர்ப்பு அளித்தார். இவர்களுக்கான தண்டனை இன்று காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலமாக அறிவிக்கப்படுகிறது.

2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டால், லாலு பிரசாத்தும், ஜெகதீஷ் சர்மாவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தங்களது எம்.பி. பதவியை இழக்க நேரிடும். இதனை தொடர்ந்து அடுத்த 6 வருடங்களுக்கு அவர்கள் இருவரும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

லாலு பிரசாத் சிறை தண்டனை பெறுவதால், ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கும் என்ற செய்தியை கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத்சிங் மறுத்தார். மூத்த தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவோம் என்றார்.

லாலு பிரசாத்தை, சிறையில் ரகுவன்ஸ் பிரசாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் சந்தித்து பேசினர். லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரதாப் கூறுகையில், எனது தந்தைக்கு நீதி கிடைப்பதற்காக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் என்றார்.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 80 வயதாகும் ஜெகன்நாத் மிஸ்ரா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
...
Show commentsOpen link

மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது tamil sex news rr

மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது

by Marikumar

ஒடிசாவில் சம்பவம்; பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

வரதட்சணை போதாமை, கள்ளத் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்..!

புவ­னேஸ்வர்: வர­தட்­சணை போதாமை, கள்­ளத்­தொ­டர்பு சந்­தே­கம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தில் தன் மனை­விக்கு மொட்டை அடித்து, பிறப்­பு­றுப்பை தைத்து கொடு­மைப்­ப­டுத்­திய கொடூர கண­வ­ரொ­ருவர் ஒடி­சாவில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்த கொடு­மைக்கு உள்­ளான பெண், மருத்­து­வ­ம­னையில் தீவிர சிகிச்சை பெற்று வரு­கிறார்.

பெரும் பர­ப­ரப்­பையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள இச்­சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஒடிசா மாநிலம், புவ­னேஸ்­வரை சேர்ந்­தவர் ரஞ்சன் பாண்டா (வயது 32). இவரின் மனை­விக்கு 28 வயதாகிறது. ஏழு வயதில் மகன் ஒருவரும் இருக்­கிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் ரஞ்சன் பாண்­டா­வுக்கு திரு­மணம் இடம்­பெற்­றது. இதன்­போது, தனக்கு போது­மான வர­தட்­சணை கொடுக்­கா­த­தாலும், வேறு ஒரு­வ­ருடன் கள்ளத் தொடர்பு இருப்­ப­தாக எழுந்த சந்­தே­கத்­தாலும் மனை­வியை அடிக்­கடி கொடு­மைப்­ப­டுத்தி வந்தார். இதனால் பெருந்­த­விப்­பிற்­குள்­ளான அவர் மனைவி, ஒருநாள் மகளிர் பொலிஸ் நிலை­யத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பில் பொலிஸார் விசா­ரித்த போது, 'இனிமேல் கொடு­மைப்­ப­டுத்த மாட்டேன்' என வாக்­கு­றுதி அளித்து, மனை­வியை தன்­னுடன் அழைத்து வந்தார் பாண்டா. ஆனால், அதன்­பின்னர் அவ ரின் கொடுமை அதி­க­ரித்­தது.

கடந்த 24 ஆம் திகதி இரவு மனை­வி க்கு மயக்க மருந்து கொடுத்த பாண்டா, சுய­நி­னைவை இழந்­ததும் அவரின் தலையை மொட்டை அடித்தார்.

அதன்­பின்னர், பழுக்கக் காய்ச்­சிய ஆணி யால் மனை­வியின் கன்­னத்தில் இருந்த மச்­சத்தையும் அகற்றி, உடைந்த மின்­குமிழ் ஒன்­றினால் அவரின் வயிற்றை குத்­தி­ய­தோடு, பிறப்­பு­றுப்­பையும் நூல் மூலம் தைத்தார். இதன்­பின்னர், அப்­ப­டியே இறக்கட்டும் என விட்டு விட்டார்.

இந்தத் தக­வலை எப்­ப­டியோ அறிந்த பாண்­டாவின் குடும்­பத்­தினர், அந்தப் பெண்ணை மீட்டு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றனர். அங்கு சிகிச்­சைக்கு அப்பெண்ணை சேர்த்­த­வுடன் பொலி­ஸு க்கு பயந்து அனைவரும் அங்கிருந்து ஓடி­விட்­டனர்.

இந்­நி­லையில், மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தினர், பாதிக்­கப்­பட்ட பெண்ணின் சகோ­த­ர­ருக்கு தகவல் கொடுத்­த­தைத்­தொ­டர்ந்து அவர் பொலிஸில் புகார் கொடு த்தார். இதனையடுத்து, பாண்டா கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, கொடுமைக்கு ஆளான பெண், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
Share |

Show commentsOpen link

வசூல் வேட்டையில் ராஜா ராணி! Raja Rani vasool vettai

வசூல் வேட்டையில் ராஜா ராணி!

by abtamil
Tamil newsToday,

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் ரஜா ராணி.

அட்லீ இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா முதலானோர் நடிப்பில் வெளியாகியுள்ளது.

இப்படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெளியாகி இதுவரை 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாகி தொடர்ந்து வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வருடம் வெளியான படங்களில் வசூலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறதாம் இந்த ராஜா ராணி.

அது மட்டுமல்லாமல் இதுவரை ஆர்யா நடித்து வெளியாகிய படங்களிலேயே இந்தப் படம் தான் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையும் ராஜா ராணி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க தயாரித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Show commentsOpen link

Tuesday, October 1, 2013

டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது Woman arrested in Delhi for Torturing house maid

டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது Woman arrested in Delhi for Torturing house maid

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக்.2-

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டால்.

சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா, சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.

அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை நேற்று சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மந்திரி கிரண் வாலியா, சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆண்டு 13 வயது வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு முதலாளி குடும்பத்தினர் தாய்லாந்து சுற்றுலா சென்றதும், பூட்டிய வீட்டினுள் பல நாட்கள் தனியாக தவித்த அந்த சிறுமியை போலீசார் மீட்டதும் நினைவிருக்கலாம்.
...
Show commentsOpen link

நானோ என் மகன்களோ பதவிக்காக அலையவில்லை: சிறைப்பறவை லல்லுவின் மனைவி பேட்டி Rabri claims she is not craving for post

நானோ என் மகன்களோ பதவிக்காக அலையவில்லை: சிறைப்பறவை லல்லுவின் மனைவி பேட்டி Rabri claims she is not craving for post
Tamil NewsYesterday,

பாட்னா, அக்.2-

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் குஜராத் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி, நானோ என் மகன்களோ பதவிக்காக அலைபவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ. அதிகாரிகள் ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி என் கணவரை சிறைக்கு அனுப்பி விட்டனர்.

பீகாரின் தற்போதைய ஆட்சியில் 900 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 22ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முதல் மந்திரி நிதீஷ்குமார், சிவானந்த் திவாரி, ராஜீவ் ரஞ்சன் ஆகியோருக்கும் என் கணவருக்கு விதிக்கப்பட்டது போல் தண்டனை வழங்கப்படுமா? என்பதை அறிந்துகொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள்.

தனது அரசியல் எதிரிகளின் சதிக்கு என் கணவர் எப்படி இரையாகி விட்டார் என்பதை விளக்க நானும் என் மகன்களும் பீகார் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன்.

நானோ, என் மகன்களோ கட்சி பதவிக்காக அலையவில்லை. எங்களுக்கு கட்சியின் எந்த பதவியும் தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, லல்லு பிரசாத் யாதவ் நேற்று முன்தினம் சிறைக்கு சென்றபோது பேட்டியளித்த ரப்ரி தேவி, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி செல்வதுபோல் நானும் என் மகனும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை வழிநடத்தி செல்வோம் என்று கூறியது நினைவிருக்கலாம்.

கால்நடை தீவன ஊழல் தொடர்பாக லல்லுவின் மீது வழக்கு தொடரப்பட்ட வேளையில் லல்லுவுக்கு பதிலாக பீகாரின் முதல் மந்திரியாக ரப்ரிதேவி பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

ஒரு பால்காரரின் மகன் நாட்டை ஆளும் முதல்வர் lalu prasad yadav son

ஒரு பால்காரரின் மகன் நாட்டை ஆளும் முதல்வர்

by tnkesaven

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் ஒரு பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்தவர். முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.
பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார்.
அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.
ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு

கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.
1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.
லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால், லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார்.
இதனால் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.
2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.
courtesy;'newsindianews.com

Show commentsOpen link

நாடு வல்லரசாகிறதாம்! Tamil special news

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர

by tnkesaven

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்
நான் நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுவது வயது இருக்கும். கையில் ஒரு கொம்புடம் நடந்து வந்தார்.
ஒரு பிச்சைக் காரன் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக் காரருக்கு ஆத்திரம் வந்தது.. செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா என்று திட்டிய படி சென்றார்.. என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு முதியவர் புலம்பிக்கொண்டே சென்றார்.
பின்னர் ஒரு இட்லி கடையில் ரெண்டு இட்லி எவளோ அம்மா என்று கேட்டார். பத்து ரூபா என்றார் அந்த அம்மா.. என்னது பத்து ரூபாயா என்று நெஞ்சை பிடித்துக் கொண்டார்.. ஏம்மா ரெண்டு இட்லி பத்து காசுதானமா பத்து ரூபாங்கற என்றார்... பெரியவரே எந்த லோகத்துல இருகிங்க பத்து காசெல்லாம் எப்போவோ செல்லாதுன்னு சொல்லிட்டாங்க... நாட்டுல என்ன நடக்குதுன் தெரியாம தோளுல துண்ட போட்டுகிட்டு கிளம்பி வந்துறது... போங்க பெரியவரே என்று அனைவரும் அவரை ஏளனம் செய்து சிரித்தனர்.
அவர் முகம் வாடிப் போனார்.. அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். அய்யா நான் உங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.. நீங்கள் எந்த ஊர்..?? என்ன செய்கிறீர்கள்? பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கேட்டேன். நான் இதே ஊர் தான். பிள்ளைகள் இல்லை நான் ஒன்டிக்கட்டை என்றார். நீங்க செய்திகள் பார்ப்பது இல்லையா?? நட்டு நடுப்புகள் எதையும் அறியாமல் இருக்கிறீர்களே.. ஐந்து பைசா பத்து காசு இதெல்லாம் செல்லாக் காசிகிவிட்டது. இரண்டு இட்லி பத்து முதல் இருபது ரூபாய் வரை விலை ஏறிவிட்டது. மலிவு விலை உணவகத்தில் ஏழைகுக்கு மட்டுமே கம்மி விலையில் உணவு கிடைக்கும். பணக்காரர்கள் ஐந்து நட்சத்திர உணவகத்தில் உண்பார்கள். பிச்சைக் காரனுக்கு தர்மம் செய்ய எண்ணினால் கூட பத்து ரூபாய் போட வேண்டும் இல்லை என்றான் நம்மையும் பிச்சை எடுக்க அழைப்பான். நம் நாடு வளர்ந்துவிட்டது. இந்தியா வல்லரசாக உயர்ந்து கொண்டிருப்பதால் தான் இந்த மாற்றங்கள் என்றேன்.
முதியவர் என்னைப் பார்த்து சிரித்தார்.. என்ன பெரியவரே சிரிகிறீங்க என்று கேட்டேன். முப்பது நாப்பது வருடத்திற்கு முன் ஒரு விபத்தில் நான் நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாக கோமாவில் இருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்புதான் நினைவு திரும்பியது, உடல்நலம் தேறியதும் ஊரை சுற்றி பார்க்க வந்தேன்.. எனக்கு நாட்டு நடப்பு தெரியும், இந்த நாற்ப்பது ஆண்டுகளில் இந்தியா இவளவு மாறி இருக்கும் என்று நினைக்கவில்லை.
என் காலத்தில் ஏழை பணக்காரன் இருவருக்கும் ஒரே விலையில் தான் இட்லி
ஆனால் இப்பொழுது ஏழைக்கு மலிவுவிலை உணவகம்,
பணக்காரனுக்கு ஐந்து நட்சத்திர உணவகம்...
இதற்கு பெயர் முன்னேற்றமா???

அனைத்து மக்களுக்கும் அனைத்து பொருட்களும் ஒரே விலையில் கிடைத்தால் அன்று தான் நம் நாடு முன்னேறியதாக அர்த்தம்..

இந்த ஏற்றத்தாழ்வை முன்னேற்றம் என்று சொல்பவன் மூடன் என்றார்...
என் காலத்தில் பத்து ரூபாயை வைத்து ஒரு வாரம் சாப்பிடலாம்,
இந்த காலத்தில் ஒரு வாய் கூட சாப்பிட முடியாது
இதற்க்குப் பேர் முனேற்றம்.. சிரிக்கத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்...

அவர் பார்பதற்கு கிறுக்கன் போல் இருந்தாலும் அவர் சொன்னது அனைத்துமே மறுக்க முடியாது உண்மை
newsindianews.com

Show commentsOpen link

Monday, September 30, 2013

ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை: அபிஷேக் பச்சன் Abishek bhachan says acting with Aishwarya notyet confirmed

ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை: அபிஷேக் பச்சன் Abishek bhachan says acting with Aishwarya notyet confirmed
Tamil NewsYesterday,

1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற இந்திய மாடல் அழகியான ஐஸ்வர்யா ராய், இந்தித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.

தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமான இவர், மேலும் பல திரைப்படங்களில் நடித்து பேரும் புகழும் பெற்றார். 'ஜோதா அக்பர்' போன்ற வரலாற்றுக் காவிய திரைப்படங்களிலும், தமிழில் எந்திரன் போன்ற போன்ற நவீன அறிவியல் திரைப்படங்களிலும் இவரின் நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட இவர், 2011-ம் வருடம் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்ததையடுத்து எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல், தன் குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். ஆயினும், சில சமூக நலத் தொண்டு நிறுவனங்களின் தூதுவராகவும், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான ஐ.நா. கூட்டமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகவும், பிரான்ஸ் தேசத்தின் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்தியத் திரையுலகின் பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றி வந்தார்.

தன்னுடைய மகள் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில், ஐஸ்வர்யா ராய் மீண்டும் திரையுலகில் நடிப்பதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

பிரபல இந்திபட இயக்குனர் அட்மன் பிரகலாத் காக்கரின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஹேப்பி அனிவர்சரி என்ற புதிய படத்தில் அபிஷேக் பச்சனின் ஜோடியாக நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயிடம் ஒப்பந்தம் செய்தாகிவிட்டது என்ற வதந்திகளும் உலா வந்தன.

இந்த தகவலை ஐஸ்வர்யா ராயின் கணவரும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.

இயக்குனர் அட்மன் பிரகலாத் ஐஸ்வர்யாவின் நீண்டகால நண்பர் என்ற வகையில் எனக்கும் அறிமுகமானவர். ரூ.65 கோடி செலவில் ஹேப்பி அனிவர்சரி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கப் போவதாக அவர் எங்களிடம் கூறினார்.

நாங்கள் அந்த படத்தின் முழு கதையை இதுவரை கேட்கவே இல்லை. இன்னும் இதுதொடர்பாக சில விவகாரங்கள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கு முன்னதாக எதையும் எங்களால் உறுதிபடுத்த முடியாது. இவை எல்லாம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு அந்த செய்தியை நாங்கள் அறிவிப்போம் என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
...
Show commentsOpen link

தமிழ் சினிமாவின் புதிய அக்கா, தங்கை new sisters in tamil cinema

தமிழ் சினிமாவின் புதிய அக்கா, தங்கை
by admin
TamilSpyToday,

தமிழ் சினிமாவுக்கு லலிதா-பத்மினி-ராகினி, அம்பிகா-ராதா, ஊர்வசி-கல்பனா என கேரளாவில் இருந்து சேச்சிகள் வந்தார்கள். சிம்ரன்-மோனல், நக்மா-ஜோதிகா, காஜல் அகர்வால், நிஷா அகர்வால், ஆகியோர் வடக்கிலிருந்து வந்தார்கள். இப்போது ராதா மகள்கள் கார்த்திகா, துளசி வந்திருக்கிறார்கள். அடுத்து ஓசைப்படால் ஒரு தெலுங்கு சகோதரிகள் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். அது ஸ்ரீரம்யா-ஸ்ரீதிவ்யா சிஸ்டர்ஸ்.

ஸ்ரீரம்யா, தெலுங்கில், '1940ல ஒக்க கிராமம்' என்ற படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே மொட்டை அடித்து நடித்து ஆந்திர அரசின் சிறந்த நடிகைக்கான நந்தி விருது பெற்றார். பிறகு தமிழில் 'யமுனா' என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் சரியாக போகாததால் மீண்டும் தெலுங்கு பக்கம் திரும்பி விட்டார். அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இவரின் தங்கை ஸ்ரீ திவ்யா, 'வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்' அறிமுகமாகியிருக்கிறார். அக்காளுக்கு அடிக்காத யோகம் தங்கைக்கு அடித்திருக்கிறது. இப்போது ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. சகோதரிகளுக்கு இருக்கும் ஒரே ஆசை இருவரும் சேர்ந்து ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதானாம்.

அதிசயமான மனிதர்கள் – வீடியோ…

Show commentsOpen link

Sunday, September 29, 2013

மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி Chopper crash lands in Thane 5 dead

மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி Chopper crash lands in Thane 5 dead
Tamil NewsToday,

மும்பை, செப். 29-

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அவுரங்கபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தானே அருகேயுள்ள முர்பாத்டேசில் என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.  உடனே சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. என்ஜீனில் உள்ள உயர் அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கான காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
...
Show commentsOpen link

My Blog List

Popular Posts

Popular Posts