கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,
நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாகிறார். இதற்காக, உடற்பயிற்சி, நடனம் என உடம்பை மெருகேற்றி வருகிறார்.
பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா, துளசி சினிமாவுக்கு வந்துள்ளனர். இருவரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து பழைய கனவுக் கன்னியான ஸ்ரீதேவி மகள் ஜான்வியும், சினிமாவில் அறிமுகமாகிறார்.
இரு வருடங்களுக்கு முன்பே பல இயக்குனர்கள் ஸ்ரீதேவியை அணுகி தங்கள் படங்களில் ஜான்வியை அறிமுகப்படுத்த கேட்டனர். ஆனால் சிறுமியாக இருப்பதாக சொல்லி மறுத்துவிட்டார். தற்போது ஜான்வி வளர்ந்து கதாநாயகிக்குரிய புது பொலிவோடு காட்சி தருகிறார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றுக்கு ஜான்வியை ஸ்ரீதேவி அழைத்து வந்திருந்தார். கூட்டத்தினரை ஜான்வி அழகு வசீகரித்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். முன்பு ஒல்லியாக இருந்தவர் இப்போது மொழு மொழு என மாறி இருப்பதாக பேசினர்.
உடற்பயிற்சி, நடனம், உணவு கட்டுப்பாடு என அழகூட்டி இருந்தார். ஸ்ரீதேவி பிரபல டைரக்டர்களிடம் கதை கேட்டு வருவதாகவும் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் மும்பை பட உலகினர் தெரிவித்தனர்.
The post கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.
Show commentsOpen link
No comments:
Post a Comment