"சொன்னதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறில்லை…" : நஸ்ரியா அர்ஜென்ட் பிரஸ்மீட்டின் ஃபுல் ரிப்போர்ட்???
by abtamil
Tamil newsToday,
பொய்யும் புரட்டுகளும் மட்டுமே நிறைந்த இப்படி ஒரு பிரஸ்மீட்டை இதுவரை சினிமா பத்திரிகையாளர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள்.
அந்தளவுக்கு வார்த்தைக்கு வார்த்தை புளுகுமூட்டைகளை அவிழ்த்து விட்ட பிரஸ்மீட்டாகத்தான் அமைந்தது 'நய்யாண்டி' விவகாரத்தில் நஸ்ரியாவின் அர்ஜெண்ட் பிரஸ்மீட்.
இந்த பொய் முதலில் அவர் பிரஸ்மீட்டுக்கு வர லேட்டானதிலிருந்தே ஆரம்பித்தது. அதாவது ஏழரை மணிக்கு வருவார் என்று சொல்லப்பட்ட நஸ்ரியா எட்டேமுக்காலுக்குத்தான் வந்து சேர்ந்தார்.
அப்போதே ஏன் இவ்ளோ லேட் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது "ப்ளைட் லேட் என்று அவர் தரப்பில் பதிலாக சொல்லப்பட்டது."
அப்படியானால் காலையில் நான் படம் பார்த்து விட்டேன் என்று நஸ்ரியா சொன்னதாக வந்த தகவல்கள் எல்லாமே பொய். அதாவது அவர் கேரளாவில் தான் வேறொரு படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி காலையில் 'நய்யாண்டி' படத்தை சென்னையில் பார்த்திருப்பார்?
படத்தை அவரது அப்பா, அவரது வக்கீல், தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் உட்பட சிலர் மட்டுமே சென்னையில் உள்ள போர்ப்ரேம்ஸ் ப்ரிவியூவ் தியேட்டரில் பார்த்திருக்கிறார்கள். அவர் பார்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஆனால் பிரஸ்மீட்டில் நான் காலையிலேயே படத்தை பார்த்து விட்டேன். நான் ட்ரெய்லரில் ஆட்சேபித்த அந்தக்காட்சி படத்தில் இல்லை. இப்போது முழுப்படத்திலும் நான்தான் நடித்திருக்கிறேன் என்று வந்த வேகத்திலேயே கூசாமால் பொய் சொன்னார் நஸ்ரியா.
சரி தியேட்டரில் படம் பார்த்ததாக சொல்றீங்க? எந்த தியேட்டரில் பார்த்தீங்க? அதுக்கு ஆதாரம் இருக்கா? என்று ஒரு நிருபர் நஸ்ரியாவிடம் கேட்க 'எந்த தியேட்டரில் பார்த்தேன்னு தெரியல' என்று திருதிருவென முழித்தவர் பிறகு பக்கத்தில் இருந்த தயாரிப்பாளரின் முகத்தை பார்க்க அவர் இந்த தியேட்டர் தான் என்று சொல்ல உடனே நஸ்ரியா ஆமாம், இந்த தியேட்டர்ல தான் பார்த்தேன் என்று அடுத்த பொய்யை அவிழ்த்து விட்டார்.
"தயாரிப்பாளரும், டைரக்டரும் உங்களை மிரட்டியதா நீங்க கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கீங்க?" அது உண்மையா என்று அடுத்த கேள்வி வந்தபோது " இல்ல நான் அப்படி எந்த கம்ப்ளெயிண்ட்டும் குடுக்கல" என்றார். அப்போது கேள்வி கேட்ட நிருபர் இல்லியே நீங்க உங்களோட கம்ப்ளெயிண்ட் பேப்பரிலேயே அதை சொல்லியிருக்கீங்களே? என்று கையோடு கொண்டு வந்த அதன் ஜெராக்ஸ் காப்பியை தூக்கி காண்பித்தார்.
இதற்கு என்ன பதில்? சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் நஸ்ரியா.
பிறகு நீங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய மதத்தை சொல்லி டைரக்டர் திட்டியதாக புகாரில் கூறியிருக்கிறீர்களே? என்று அடுத்த கேள்வி வந்தபோது "இல்லை நான் அப்படிச் சொல்லல. அதாவது என் மதத்தை சார்ந்தவர்களுக்கும், என் குடும்பத்தாருக்கும், ஃப்ரெண்ட்ஸ்களுக்கும் அந்தக்காட்சி பிடிக்கலேன்னு தான் சொன்னேன் என்று யோசிக்காமல் அந்தர்பல்டி அடித்தார்.
முன்னதாக மொத்த விவகாரத்துக்கும் விளக்கம் கொடுத்த அவர் "நான் ட்ரெய்லரில் பார்த்த பிரச்சனைக்குரிய காட்சி படத்தில் இல்லை. அதனால் நான் தயாரிப்பாளர் மீதும், டைரக்டர் மீதும் கொடுத்த கம்ப்ளெயிண்ட்டை நாளைக்கு வாபஸ் வாங்குவேன்" என்று கூறினார்.
இப்படி நஸ்ரியா அடுக்கடுக்கான பொய்களை அவிழ்த்து விட கூடவே வந்திருந்த தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனும் தன் பங்குக்கு பொய்களை சொல்ல ஆரம்பித்தார். அதாவது அந்த சர்ச்சைக்குரிய சீனில் உங்களை நடிக்கக் கூப்பிட்டபோது இந்த ஒரு சீனுக்காக கேரளாவில் இருந்து நான் வரமுடியாது, நீங்க வேற யாரையாவது டூப் போட்டு எடுத்துக்கங்க? என்று நீங்கள் தான் சொன்னதாக டைரக்டர் சற்குணம் நேற்று கூறியிருக்கிறாரே? என்று ஒரு நிருபர் கேட்டபோது " இல்லை டைரக்டர் என்கிட்ட பெர்மிஷன் கேட்கவேயில்லை, நானும் அப்படிச் சொல்லவில்லை, வேணும்னா இவர்கிட்ட கேட்டுப்பாருங்க என்று பக்கத்தில் இருந்த தயாரிப்பாளரை கை காட்டினார்.
அதற்கு தயாரிப்பாளரோ இல்லை சார் அதைப்பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது என்று தன் பங்குக்கு ஒரு பொய்யை சொல்லி வைத்தார். ( அதாவது ஒரு படத்தோட ஷூட்டிங் தயாரிப்பாளருக்கே தெரியாம நடந்தது இந்தப்படத்துல தான் போல…)
அதேபோல இந்த சின்ன விஷயத்தைப் போய் நீங்க பெரிசாக்குறீங்களே நாளைக்கு உங்களை எப்படி மத்த டைரக்டர்கள் நடிக்க கூப்பிடுவாங்க என்று கேட்க "அதுக்கு நான் என்ன சார் பண்ணமுடியும். என்னோட சீனை எடுக்கும் போது என்கிட்ட பெர்மிஷன் கேட்கணும் இல்லியா?" என்றார் பிரச்சனையின் சீரியஸ் தெரியாமல்.
சரி அதையெல்லாம் விடுங்க இப்போ டைரக்டர் சற்குணம் கூட சமாதானமாயிட்டீங்களா? இல்லியா? என்று கேட்டால் எனக்கு அவருக்கும் சண்டையே வரல சார். சண்டை வந்தாதானே சமாதானம் ஆகுறத்துக்கு. இதுல என்ன பிரச்சனைன்னா எங்க மூணு பேருக்குள்ளேயும் கம்யூனிகேஷனே இல்ல அதுதான் பிரச்சனை.
உடனே டென்ஷனான பத்திரிகையாளர்கள் நீங்க ஒண்ணும் பேசுறீங்க? தயாரிப்பாளர் ஒண்ணு பேசுறார், டைரக்டர் ஒண்ணைச் சொல்றார். நீங்க ஏன் இந்த பிரஸ்மீட்டுக்கு டைரக்டரை கூட்டிட்டு வரல என்று கேட்டபோது " இல்லை சார் அவரோட பையனுக்கு உடம்பு சரியில்லை, அதனால ஊருக்கு போயிருக்காரு…," என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தார் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன்.
ஆனால் நஸ்ரியாவுடன் தயாரிப்பாளர் சமாதானமாகி விட்டாரே தவிர டைரக்டர் சற்குணம் இதுவரை நஸ்ரியாவிடம் சமாதானம் ஆகவில்லை என்பதே உண்மை. அந்தக்கோபத்தில் தான் அவர் இந்த பிரஸ்மீட்டை தவிர்த்தார் என்று அவர் தரப்பிலிருந்து நமக்கு உறுதியா பதில் கிடைத்தது.
உண்மை நிலைமை இப்படி இருக்க "மறுபடியும் சற்குணம் படத்துல நடிப்பீங்களா?" என்று ஒரு நிருபர் முத்தாய்ப்பாக கேட்டு வைக்க " "அவர் கூப்பிட்டார்னா கண்டிப்பா நடிப்பேன்" என்றாரே பார்க்கலாம் நஸ்ரியா.
அவரின் இந்தப்பதிலைக் கேட்டு "இன்னுமா கைப்புள்ள இந்த உலகம் நம்மளை நம்பிக்கிட்டிருக்கு" என்று தான் சொல்லத்தோன்றியது.
பிரஸ்மீட்டில் நடந்த சில சுவாரஷ்யங்கள் :
+ நான் மீடியாக்கள் முன்னால் பேசுகிறோம் என்ற எந்தவித பய உணர்வும் இல்லாமல் வார்த்தைக்கு வார்த்தை பொய்களை மட்டுமே பேசினார் நஸ்ரியா.
+ மிகவும் சிம்பிளாக எந்தவித மேக்கப்பும் இல்லாமல் தான் பிரஸ்மீட்டுக்கு வந்திருந்தார் நஸ்ரியா.
+ இத்தனை அடுக்கடுக்கான கேள்விகள் வரும் என்று நஸ்ரியா எதிர்பார்த்திருக்க மாட்டார் போலிருக்கிறது. அதனால் தான் பல கேள்விகளுக்கு அவரால் சரியான பதிலைச் சொல்லமுடியவில்லை.
+ பல கேள்விகள் நஸ்ரியாவை ஆத்திரமூட்டும் விதமாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் நியாயமாக இருந்தது என்பது தான் உண்மை.
+ இதே மாதிரி திருமணம் என்னும் நிஹ்ஹா படத்துக்கும் பிரச்சனை பண்ணுவீங்களா? என்று கேட்டபோது இல்ல அந்தப்படத்தோட கதை எனக்கு தெரியும் என்று சொல்லி சமாளித்தார்.
+ இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பிரச்சனை பன்றீங்களே? தயாரிப்பாளரை நெனைச்சி பார்த்தீங்களா? என்று கேட்டபோது அதான் நான் அவரோட சமாதானமாயிட்டேன் என்றார்.
+ பிரஸ்மீட்டில் கேள்விகள் கேட்ட ஆரம்பித்த உடனே தயாரிப்பாளர் நஸ்ரியாவின் மேனேஜரிடம் பிரஸ்மீட்டை நிறுத்தும்படி சைகையால் கேட்டுக்கொண்டே இருந்தார்.
Show commentsOpen link