தினசரி செய்திகள்

Saturday, September 21, 2013

இன்டர்நெட்டில் திரிஷா, ஸ்ரேயா பெயரில் பரவும் வைரஸ் thrisa virus and sreya virus

இன்டர்நெட்டில் திரிஷா, ஸ்ரேயா பெயரில் பரவும் வைரஸ்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil news

நடிகர், நடிகைகள் பெயரில் இன்டர்நெட்டில் வைரஸ் பரப்பப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணையதள பாதுகாப்பு நிறுவனமான மெக்காபி சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளான 80–க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இந்த ஆய்வை நடத்தியது.

இதில் திரிஷா பெயரில் அதிக வைரஸ் பரப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. திரிஷா பெயரை சிபாரிசு செய்ததும், கம்ப்யூட்டர்கள் சேதம் அடைந்துள்ளன. இதுபோல் ரஜினி, கமலஹாசன், சூர்யா, ஆர்யா, விஜய், தனுஷ், ஸ்ரேயா, சமந்தா, ஸ்ருதிஹாசன் பெயர்களிலும் வைரஸ் பரப்பப்பட்டு உள்ளன. இவர்களைவிட திரிஷா பெயரில்தான் விஷமிகள் 'வைரஸ்' பரப்பி உள்ளனர்.

Show commentsOpen link

Friday, September 20, 2013

பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ........ஆண்டு man live in earth 175 crores year

பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ........ஆண்டுĨ
by silentsounds
New Tamil Jokes - Penmai.comToday, 08:50

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்

world.jpg

பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.

அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.

இந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.

இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது:

நமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.

இதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.

எங்களது ஆய்வின் மூலம், பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி , கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.

கிரகத்திற்கும் அதன் நடசத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

விண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.

கிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது, மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட, பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.

சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1,000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.

நாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம்.

எங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று ஆன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.

-dinamani

Attached Images
world.jpg (58.9 KB)
Show commentsOpen link

மும்பை மாடல் அழகியை ஜோடியாக்கிய சந்தானம் santhanam with mumbai girl

மும்பை மாடல் அழகியை ஜோடியாக்கிய சந்தானம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானத்திற்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் ராஜமவுலி இயக்கி 2010 ல் வெளியான மரியாதை ராமண்ணா படம்தான் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில், காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும், சலோனி ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

மும்பை மாடல் அழகி தமிழில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி அஸ்னா ஜாவேரி நடிக்க உள்ளார். சந்தானம் ஏற்கனவே அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.

சந்தானம் தயாரிப்பு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை முதல் பிரதி அடிப்படையில் பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு சந்தானம் தயாரிக்கிறார்.

முதன் முதலாக லட்டு காமெடியனாக மட்டுமே நடித்துவந்த சந்தானம், முதன் முதலாக நாயகனாக நடித்து தயாரித்த படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிக்கிறார்.

பிரம்மாண்ட செட் இப்படத்திற்காக பெரிய செட் ஒன்றை சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் போட்டிருக்கிறார்களாம். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.

தொடர்ச்சியாக தேதிகள் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்க இருப்பதால், தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் சந்தானம்.

காமெடி நடிகர் ஸ்ரீநாத் உன்னாலே உன்னாலே', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

Show commentsOpen link

Wednesday, September 18, 2013

ஜெ. லிஸ்ட்டில் விஜய் actor vijay in j list

ஜெ. லிஸ்ட்டில் விஜய் இருப்பது வரும் லிஸ்

by vijigermany
New Tamil  - Penmai.comToday,
ஜெ. லிஸ்ட்டில் விஜய் இருப்பது வரும் லிஸ்ட்டிலா? வராத லிஸ்ட்டிலா?

தலைவா' படத்துக்காக கொடநாடு தேடிப்போனபோது விஜய்யை சந்திக்க முடியாதென்று 'நோ' சொல்லி திருப்பி அனுப்பினார் ஜெ.
இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழ் உண்டா? அழைத்தால் உரிய மரியாதை கொடுப்பார்களா? என்கிற குழப்பத்தில் தவிக்கிறார், விஜய்.

மனஉளைச்சல் ஏற்படும்? தேவையில்லாமல் பிபி எகிறும் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் கைலாஷ் மலைக்கு சென்று விட்டார்.
24ம்தேதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துவிடும். ஆனால், 30ம்தேதி வாக்கில் சென்னைக்குத் திரும்புகிறார் எஸ்.ஏ.சி.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு யார் யார் எல்லாம் வரவேண்டும் என்பதைவிட யார் யார் வரவே கூடாது என்பதைத் தனியாக லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கிறாராம், முதல்வர் ஜெயலலிதா!

ஆக விஜய் இருப்பது வரும் லிஸ்ட்டிலா? வராத லிஸ்ட்டிலா என்பதுதான் ஹாட் சஸ்பென்ஸ்..

Show commentsOpen link

சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார் swaziland king 14th marriage Tamil News

சுவாஷிலாந்து மன்னருக்கு 14–வது திருமணம்: 18 வயது அழகியை மணக்கிறார் swaziland king 14th marriage
Tamil NewsToday,

ஜெருசேலம், செப். 18–

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவன பகுதியில் சுவாஷிலாந்து என்ற நாடு உள்ளது. இதன் மன்னராக மூன்றாம் இம்ஸ் வாதி உள்ளார். அந்நாட்டு சட்டப்படி மன்னர் விரும்பினால் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

அதன்படி மன்னர் இம்ஸ்வாதி ஏற்கனவே 13 பெண்களை திருமணம் செய்து மனைவி ஆக்கி கொண்டார். இந்த நிலையில் இவர் 14–வது திருமணம் செய்ய உள்ளார். இவரது 14–வது மனைவி ஆக, போகும் அந்த பெண் பெயர் சின்டிஸ்வா டிலாமினி. 18 வயது நிரம்பிய அப்பெண் அழகிப் போட்டியில் பங்கேற்றவர்.

இவர் கடந்த ஆண்டு உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தார். அதை தொடர்ந்து பாரம்பரிய கலாசார அழகி போட்டியின் இறுதி போட்டியில் பங்கேற்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் மன்னர் முன்பு நடன நிகழ்ச்சி நடந்தது. அதில் நாடு முழுவதும் இருந்து பல பெண்கன் கலந்து கொண்டு நடனமாடினர்.

அவர்களில் சின்டிஸ்வா அழகில் மயங்கிய மன்னர் அவரை தனது மனைவி ஆக்கி கொள்ள தீர்மானித்தார். அதன் விளைவாக தான் இத்திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமன அறிவிப்பை அரண்மனையின் கவர்னர் திமோதி மெடிவா பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருமணத்துக்கு முன்பே மன்னருடன் குடும்பம் நடத்தும் மணப்பெண் கர்ப்பம் அடைய வேண்டும். அதன் பிறகே திருமணம் நடைபெறும். அதே முறைதான் சின்டிஸ்வாவுக்கும் கடை பிடிக்கப்பட உள்ளது. மன்னருடன் வாழும் இவர் கர்ப்பம் அடைந்த பிறகே அதிகாரப்பூர்வமாக அவரது 14–வது மனைவி ஆவார்.

மன்னர் இம்ஸ்வாதியின் 3 மனைவிகள் இவரை விட்டு ஓடி விட்டனர். கடைசியாக திருமணம் செய்த ராணி லாஜிஜா மன்னனின் செக்ஸ் கொடுமை தாங்காமல் பிரிந்தார். மற்றொரு ராணி லாதுபே மன்னரின் நெருங்கிய நண்பர் சட்ட மந்திரியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டார். அவருடன் ஒரே படுக்கையில் இருந்ததை மன்னர் பார்த்து விட்டார். அதை தொடர்ந்த அவரும் ஓட்டம் பிடித்தார்.

...
Show commentsOpen link

Tuesday, September 17, 2013

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள் tamil news channel

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

‎எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும்.

இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.

அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்? இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது. தீர்வு தான் என்ன? Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு

சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.

எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.

Show commentsOpen link

நீல நிற ஆப்பிள், வெள்ளை நிற மாங்காய், பச்சை நிற ஆரஞ்சு different type of fruits colours

கறுப்பு தக்காளி... நீல வாழைப்பழம்

by Subhasreemurali
New Tamil  - Penmai.comToday,

இன்னும் சில நாட்களில் நமது கடை வீதிகளில், நீல நிற ஆப்பிள், வெள்ளை நிற மாங்காய், பச்சை நிற ஆரஞ்சு என கலர்கலராக பழங்களைப் பார்க்கலாம். இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகர விஞ்ஞானிகள் சிலர், பழங்களின் நிறம், மணம், ருசி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைக் கண்டுபிடித்துவிட்டனர்.

பழங்களைப் பயன்படுத்தி நோய்களைத் தடுப்பது எப்படி என கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் நடத்தி வந்த இடையறாத ஆராய்ச்சிக்குப் பலன் கிடைத்துள்ளது. டயட்டில் இருப்பவர்களின் வசதிக்காக பழங்களிலுள்ள சத்தைக் கூட்டவும் குறைக்கவும் முடியும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் உறுதியாகி இருக்கிறது.

உதாரணமாக, சத்து மிகுந்த வாழைப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே, வாழைப்பழத்தின் மரபணுக்களை மாற்றியமைத்து அதில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைத்துவிட்டால் அது எல்லோரும் சாப்பிடும்படியான ஆரோக்கியப் பழமாக மாறிவிடும். பழங்களின் நிற அணுக்களை மாற்றி அமைப்பதன் மூலம் சில வகை புற்றுநோய் அபாயங்களையும் தடுக்க முடியுமாம்.

இப்படி மாற்றி அமைக்கும் பழங்களின் நிறமும் மாறி விடுமாம். எனவே இன்னும் சில வருடங்களில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கலர் கலராக மருந்து, மாத்திரைகள் எழுதித் தருவதற்கு பதிலாக கலர் கலர் பழங்களைக் கொடுக்கப் போகிறார்கள்!

Show commentsOpen link

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா - Sounth Indian Filmfare award

ஷார்ஜாவில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.


சிறந்த படம் கும்கி
சிறந்த நடிகர் தனுஷ் (3)
சிறந்த நடிகை ஹன்சிகா (ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த நடிகர் (விமர்சகர் விருது) விஜய் சேதுபதி (பீட்ஸா)
காமெடி நடிகர் தம்பி ராமையா (கும்கி)வில்லன் வித்யுத் ஜாம்வால் (துப்பாக்கி)துணை
நடிகை சரண்யா பொன்வண்ணன் (நீர்ப்பறவை)துணை
நடிகர் மாதவன் (வேட்டை)
அறிமுக தயாரிப்பாளர் சி.வி.குமார் (அட்டகத்தி)
அறிமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (பீட்ஸா)
அறிமுக நடிகை லட்சுமி மேனன்
அறிமுக நடிகர் விக்ரம் பிரபு (கும்கி)
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் (துப்பாக்கி)
பாடகி சைந்தவி (உயிரின் உயிரே... தாண்டவம்)
பாடலாசிரியர் தனுஷ் (கண்ணழகா.. 3)
சண்டை இயக்குனர் கிச்சா (துப்பாக்கி)
நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் (அரவான்)
சிறந்த ஒளிப்பதிவாளர் சுகுமார் (கும்கி)

Monday, September 16, 2013

காதலில் விழுந்தார் ‘ட்விட்டர்’ புகழ் பாடகி சின்மயி : இளம் ஹீரோவை மணக்கிறார்! Sinmayi love

காதலில் விழுந்தார் 'ட்விட்டர்' புகழ் பாடகி சின்மயி : இளம் ஹீரோவை மணக்கிறார்!

by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...

பிரபல பாடகியும் 'ட்விட்டர்' சர்ச்சைப் புகழுக்கு சொந்தக்காரருமான சின்மயிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பிரபலமானவர் தான் சின்மயி. மணிரத்னம் டைரக்ட் செய்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டார்.

பாடிய முதல் பாடலுக்கே பல விருதுகளைப் பெற்ற சின்மயி தொடர்ந்து பல படங்களில் பாடினார். 'வாகை சூட வா' படத்தில் 'சர சர சாரக்காத்து' பாடலுக்காகவும் நிறைய விருதுகளைப் பெற்றார்.

பாடல் வாய்ப்புகள் இல்லாத காலகட்டங்களில் பூமிகா, பத்மப்ரியா, சமீரா, கங்கனா ரணாவத், சமந்தா, காஜல் அகர்வால் என்று பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியும், ஒரு பிரைவேட் தமிழ் எப்.எம் ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகவும் தனது கேரியரை ரன் பண்ணிய சின்மயி பல மாதங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பரபரப்பான சில விஷயங்களை எழுதி அதன்மூலம் சில பிரச்சனைகளில் சிக்கினார்.

அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த சின்மயி சமீபகாலமாக சைலண்ட்டாக எந்த வயலண்ட்டும் இல்லாமல் தனது சிங்கர் கேரியரை தொடர்ந்து வந்தார். அப்படிப்பட்ட சின்மயி தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.

ஆமாம், 'மாஸ்கோவின் காவிரி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவீந்திரன் என்ற இளம் ஹீரோவை சின்மயி காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம். இவர்கள் திருமணத்துக்கும் இரு வீட்டாரும் சம்மதித்து விட்டனர்.

மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமான ராகுல் தொடர்ந்து விண்மீன்கள், சூரிய நகரம் ஆகிய படங்களில் நடித்தார். லேட்டஸ்ட்டாக 'வணக்கம் சென்னை' என்ற படத்தில் நடித்துள்ள அவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

"என் மகள் சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் திருமணம் நடக்கப்போவது உண்மைதான். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளோம். வெகுவிரைவில் மற்ற விவரங்களைச் சொல்கிறேன்" என்று தனது மகள் சின்மயி காதல் திருமணத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது அம்மா பத்மாசினி.

496 total views, 496 views today

The post காதலில் விழுந்தார் 'ட்விட்டர்' புகழ் பாடகி சின்மயி : இளம் ஹீரோவை மணக்கிறார்! appeared first on Sound Camera Action.

Show commentsOpen link

ஆஸ்திரலிய தேர்தலில் அஸாஞ்சே தோல்வி.. 'செக்ஸ்' கட்சியை விட கம்மியான ஓட்டு வாங்கினார்! Sex politics news

ஆஸ்திரலிய தேர்தலில் அஸாஞ்சே தோல்வி.. 'செக்ஸ்' கட்சியை விட கம்மியான ஓட்டு வாங்கினார்!

by Marikumar
ஆண் பெண் செக்ஸ்: சில டிப்ஸ்Today,

ஆஸ்திரேலியாவில் நடந்த செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சேவுக்கு ஆஸ்திரேலிய மக்கள் ஆதரவு தரவில்லை. அவர் போட்டியிட்ட விக்டோரியாவில் தோல்வியைத் தழுவினார். அவரது கட்சிக்கும் வெற்றி கிட்டவில்லை.

விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.

இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் கிளம்பின. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார் அஸாஞ்சே. இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு.

தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கிறார் அஸாஞ்சே. இந்த நிலையில் அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார். அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் அஸாஞ்சே உள்பட அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஒரு சீட்டில் கூட அஸாஞ்சே கட்சியால் வெல்ல முடியாமல் போய் விட்டது. அக்கட்சிக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை.

அதை விட கொடுமை என்னவென்றால் ஆஸ்திரேலிய செக்ஸ் கட்சி என்ற கட்சியை விட குறைந்த வாக்குகளை அஸாஞ்சே கட்சி பெற்றுள்ளதாம். பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற கட்சி இந்த ஆஸ்திரேலியன் செக்ஸ் கட்சியாகும். இதை விட அஸாஞ்சே கட்சிக்கு ஓட்டு கிடைத்திருப்பது அவர்களை கஷ்டப்படுத்தியுள்ளதாம்.
Share |

Show commentsOpen link

Sunday, September 15, 2013

நிம்மதியாக இருக்க முடியலே என்ன காரணம்? Nimmathiya irukka

நிம்மதியாக இருக்க முடியலே என்ன காரணம்?

ஒரு பெரிய பணக்காரர் ஒரு துறவியிடம் போனார்.
சுவாமி… என்கிட்டே ஏராளமா பணம் இருக்கு
இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியலே… என்ன காரணம்?
என்று கேட்டார்.

அந்தத் துறவி இதற்கு நேரடியாக பதில் சொல்லவில்லை.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு குழந்தையைக் கூப்பிட்டார்.
அது ஓடிவந்தது.ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்து அந்தக்
குழந்தையின் கையில் கொடுத்தார் துறவி.அதை வாங்கிக்
கொண்டு குழந்தை சிரித்தது.இன்னொரு பழத்தை எடுத்துக்
கொடுத்தார்.அதை இன்னொரு கையில் வாங்கிக் கொண்டு
குழந்தை சிரித்தது.

மூன்றாவது ஆப்பிளை எடுத்துக் கொடுத்தார்.
ரெண்டு பழத்தையும் நெஞ்சிலே அணைத்துக் கொண்டு
மூன்றாவது பழத்தையும் வாங்க முயன்றது. ஆனால்
அது நழுவிக் கீழே விழ…

ஏற்கனவே இருந்த இரண்டு பழங்களும் தரையில் விழுந்து
உருண்டன.இப்போது அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது.

துறவி அந்தப் பணக்காரரிடம் சொன்னார்:

குழந்தையை கவனிச்சியா? இரண்டு ஆப்பிள் போதும்ன்னு
அது நினைச்சிருந்தா இப்போ அது அழவேண்டிய அவசியம்
வந்திருக்குமா? பணக்காரர் புரிந்து கொண்டார்.
எதுவுமே அளவுக்குமிஞ்சினா துன்பம்தான்.

My Blog List

Popular Posts

Popular Posts