ரூபாயின் வீழ்ச்சி என்ன காரணம்
முழுவதும் படியுங்கள்....
வாஜ்பாய் ஆட்சியில் வலமாக இருந்த
இந்திய
பொருளாதாரத்தை சீரழித்து குட்டிசுவ
ஆக்கிய காங்கிரஸ் கருங்காலிகள் .....
திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்!
என்ன காரணம்? என்ன தீர்வு?
1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின்
வீழ்ச்சியும்!
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக
வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன
சாமியாராகப் பார்த்துக்
கொண்டிருந்து விட்டு, ரூபாயின்
மதிப்பை நிலைநிறுத்துவதற
்கு நடப்புக் கணக்குப்
பற்றாக்குறையை குறைக்கப் போவதாக
ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012
ஜனவரியில் ரூ.45
கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால்
வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல்
ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க
வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில்
இருந்து தற்போது வரை டாலரின்
மதிப்பு 35 சதவீதம் உயர்ந்தது.
அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில்
பிரதிபலித்தது.
2004-2005 முதல் நடப்புக் கணக்குப்
பற்றாக்குறை அதிகரித்து வந்ததன்
நேரடி விளைவு இது. நடப்புக்
கணக்குப் பற்றாக்குறையைக்
குறைக்கவும், ரூபாய் மதிப்பின்
வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும் சில
"நடவடிக்கைகளை' ப.சிதம்பரம் ஆகஸ்ட் 12-
ல் அறிவித்தார்.
ஆனால், அவர் அறிவித்த 36
மணி நேரத்துக்குள்ளாக ரூபாய்
மதிப்பு மேலும் வீழ்ந்தது.
டாலருக்கு ரூ.61.50 கொடுக்க
வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்
து டாலர் வெளியேறுவதைத் தடுக்க
வெளிநாடுகளில்
முதலீடு செய்வதையும், பணம்
செலுத்துவதையும் கட்டுப்படுத்த
வேண்டிய நிலைக்கு இந்திய ரிசர்வ்
வங்கி தள்ளப்பட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த
நடவடிக்கையும் கைகொடுக்கவில்லை.
ரூபாய் மதிப்பு வீழ்ந்து வந்த நிலையில்,
உண்மையிலேயே ரூபாயின் மதிப்பு -
அதாவது அதன் வாங்கும் சக்தி-
டாலருக்கு வெறும் ரூ.19.75தான்
என்று "தி எகனாமிஸ்ட்' (2.1.2013)
குறிப்பிட்டது. அதாவது ரூபாயின்
இன்றைய சந்தை மதிப்பில் மூன்றில்
ஒரு பங்குதான் அதன் நிஜமான மதிப்பு!
சர்வதேச சந்தையில் தகுதிக்கும் மிகக்
குறைவாக மதிப்பிடப்படும்
கரன்சி இந்திய ரூபாய்தான் என்றும்
"தி எகனாமிஸ்ட்' குறிப்பிட்டது.
உண்மையிலேயே அதிக மதிப்புடைய,
ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்ட
ரூபாயின் மதிப்பு ஏன்
குறைந்து வருகிறது? இதற்கு யார்
பொறுப்பு?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு 2004-இல்
பதவி ஏற்றபோது, இந்தியப்
பொருளாதாரம் வலுவாகவும், வளர்ச்சிப்
பாதையிலும் இருந்தது.
நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது,
வலுவான பொருளாதார
நிலையையே தேசிய ஜனநாயகக்
கூட்டணி அரசு விட்டுச்
சென்றது என்று ப.சிதம்பரமே ஒப்புக்
கொண்டுள்ளார்.
2004 ஜூலையில் அவரது பட்ஜெட்
உரையில், "இந்தியாவின் பொருளாதார
அடிப்படை வலுவாகவே காணப்படுகிறத
ஏற்றுமதியைவிட
இறக்குமதி கூடுதலாக இருந்தால்
ஏற்படும் பற்றாக்குறை நிலையும்
இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது'
என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த
நிலை மாறி, 1991-ம் ஆண்டில் காணப்பட்ட
இருண்ட பொருளாதார
நிலை ஏற்பட்டிருப்பதற்கு யார் காரணம்?
2004-ல் முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற
வளமான பொருளாதாரத்தை ஐக்கிய
முற்போக்குக்
கூட்டணி அரசு எப்படி சீரழித்தது?
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையின்
பாய்ச்சல்
2004-ல் ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசு பதவியேற்றதில்
இருந்து பொருளாதாரம்
மோசமானது எப்படி, 2009-ல் மீண்டும்
அதே அரசு ஆட்சிக்கு வந்ததும்
பொருளாதாரம்
எப்படி சீரழிந்தது என்பதை சில
புள்ளிவிவரங்களைப்
பார்த்தாலே புரியும். நடப்புக் கணக்குப்
பற்றாக்குறையின் அண்மைக்கால
வரலாற்றைப் பார்ப்போம்.
1991-2001 காலகட்டத்தில் நாட்டின் நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை 35 பில்லியன்
(ஒரு பில்லியன் - 100 கோடி) டாலராக
இருந்தது. அதாவது 3,500 கோடி டாலர்.
ஆனால், தேசிய ஜனநாயகக்
கூட்டணி ஆட்சியின்போது நடப்புக்
கணக்கு பற்றாக்குறை உபரியாக
மாறியது. உபரி -ஆம், உபரிதான்-
அதுவும். 22 பில்லியன் டாலராக
இருந்தது. 1978-க்குப் பிறகு நடப்புக்
கணக்கு உபரி என்பது அதுவே முதல்முற
தேசிய ஜனநாயகக்
கூட்டணி ஆட்சியின்போது உபரியாக
இருந்த நடப்புக் கணக்கு ஐக்கிய
முற்போக்குக் கூட்டணியின் 9
ஆண்டு ஆட்சியில், ப.சிதம்பரம்
(ஐந்தரை ஆண்டுகள்), பிரணாப்
முகர்ஜியின் (மூன்றரை ஆண்டுகள்)
தலைமையில் நடப்புக் கணக்குப்
பற்றாக்குறை இதுவரை இல்லாத
அளவுக்கு 339 பில்லியன் டாலராக
அதிகரித்தது. அவர்களது பொருளாதாரத்
தலைமையின் கீழ் உபரி எவ்வாறு, ஏன்
பற்றாக்குறையாக ஆனது?
2003-2004 இல் 13.5 பில்லியன்
டாலரை நடப்புக் கணக்கு உபரியாக
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம்
தேசிய ஜனநாயகக்
கூட்டணி ஒப்படைத்தது. நடப்புக்
கணக்குப் பற்றாக்குறை 2004-05இல் 2.7
பில்லியன் டாலராகவும், 2-வது மற்றும்
3-வது ஆண்டுகளில் மூன்று மடங்காக
அதாவது 10 பில்லியன் டாலராகவும்
உயர்ந்தது. பின்னர், நடப்புக் கணக்குப்
பற்றாக்குறை 16 பில்லியன்
டாலராகவும் (4-வது ஆண்டு), 28
பில்லியன் டாலராகவும் (5-வது ஆண்டு),
38 பில்லியன் டாலராகவும் (6-
வது ஆண்டு), 48 பில்லியன் டாலராகவும்
(7-வது ஆண்டு), 78 பில்லியன்
டாலராகவும் (8-வது ஆண்டு), 89
பில்லியன் டாலராகவும் (9-வது ஆண்டு)
அதிகரித்தது.
கச்சா எண்ணெய், தங்கம்
ஆகியவற்றை அதிகமாக
இறக்குமதி செய்வதே நடப்புக் கணக்குப்
பற்றாக்குறை அதிகரிக்கக் காரணம் என
அரசு திரும்பத் திரும்பக் கூறியது.
இப்போதும் கூறி வருகிறது. இதுதான்
காரணமா, இதுதான்
முழு உண்மையா என்றால் நிச்சயமாக
இல்லை.
உற்பத்தியை அழித்த இறக்குமதி
இறக்குமதி புள்ளிவிவரங்களை
ஆய்வு செய்வதால் அதிர்ச்சிகரமான
உண்மைகள் புலப்படுகின்றன. ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்
மூலதனப் பொருள்களின்
இறக்குமதி விண்ணை முட்டும்
அளவுக்கு அதிகரித்துள்ளது.
பொதுவாகச் சொல்வதென்றால்
இது யாராலும் கவனிக்கப்படாததா
கி (அல்லது மறைக்கப்பட்டதாகி) விட்டது.
தேசிய ஜனநாயகக்
கூட்டணி ஆட்சியின்போது மூலதனப்
பொருள்களின் இறக்குமதி சராசரியாக
ஆண்டுக்கு 10 பில்லியன் டாலராக
இருந்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சிக்கு வந்த முதல்
ஆண்டிலேயே (2004-05) மூலதனப்
பொருள்களின் இறக்குமதி 25.5 பில்லியன்
டாலராக ஆனது. அதன் பின்னர் ஒவ்வோர்
ஆண்டும் மூலதனப் பொருள்களின்
இறக்குமதி அதிகரித்தது.
2-வது ஆண்டில் 38 பில்லியன்
டாலராகவும், 3-வது ஆண்டில் 47
பில்லியன் டாலராகவும், 4-வது ஆண்டில்
70 பில்லியன் டாலராகவும், 5-
வது ஆண்டில் 72 பில்லியன்
டாலராகவும், 6-வது ஆண்டில் 66
பில்லியன் டாலராகவும், 7-வது ஆண்டில்
79 பில்லியன் டாலராகவும், 8-
வது ஆண்டில் 99 பில்லியன்
டாலராகவும், 9-வது ஆண்டில் 91.5
பில்லியன் டாலராகவும் அதிகரித்தது. 9
ஆண்டுகளில் மொத்தம் 587 பில்லியன்
டாலருக்கு மூலதனப் பொருள்கள்
இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மூலதனப் பொருள்களின்
இறக்குமதி "செயல்படும்'
பொருளாதாரத்துக்கான அறிகுறி.
தத்துவரீதியாக, அது தேசிய
உற்பத்தியை அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், என்ன ஆனது என்பதைப்
பார்ப்போம்.
ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சியின் முதல் 4
ஆண்டுகளில் தொழில் துறை உற்பத்திக்
குறியீடு ஆண்டுதோறும் சராசரியாக
11.5 சதவீதமாக இருந்தது. ஆனால்,
இது படிப்படியாகக் குறைந்து அடுத்த 5
ஆண்டுகளில் 5 சதவீதத்துக்கும்
கீழே போனது. கடைசியாக 2012-13 இல்
2.9 சதவீதமாக ஆனது. 4 ஆண்டுகளில்
மூலதனப் பொருள்
இறக்குமதி அதிகரிப்பதற்கேற்ப தொழில்
துறை உற்பத்தி அதிகரிக்காமல் 11.5
சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக 56 சதவீத
சரிவைக் கண்டது.
ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சியின் 9 ஆண்டுகளில் 587
பில்லியன் டாலருக்கு மூலதனப்
பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள
ன. கடைசி 5 ஆண்டுகளில் 407 பில்லியன்
டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள
ன.
இது மொத்தத்தில் 79 சதவீதமாகும்.
ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி ஆட்சியின் முதல் 4
ஆண்டுகளில் சராசரியாக 45 பில்லியன்
டாலருக்கும், பிந்தைய 5 ஆண்டுகளில் 80
பில்லியன் டாலருக்கும் மூலதனப்
பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள
ன.
79 சதவீதம் அதிகரிப்பு
மூலதனப் பொருள் இறக்குமதி 79 சதவீதம்
அதிகரித்தபோதும், தேசிய உற்பத்தி 56
சதவீதம் வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல
அதிர்ச்சி.
தொடர்ந்து உற்பத்தி குறைவதையும்,
இறக்குமதி அதிகரிப்பதையும்
பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ்
வங்கியும், பொருளாதார
ஆலோசகர்களும் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி.
(-தொடரும்)
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (கரண்ட்
அக்கௌண்ட் டெபிசிட்) என்றால் என்ன?
நாம் அன்னியச்
செலாவணி கொடுத்து இறக்குமதி செய்
மொத்தத் தொகைக்கும், ஏற்றுமதி மூலம்
கிடைக்கும் அன்னியச் செலாவணிக்கும்
உள்ள இடைவெளிதான் நடப்புக்
கணக்கு உபரி அல்லது பற்றாக்குறை.
ஏற்றுமதி அதிகமாக இருந்தால்
உபரியும், இறக்குமதி அதிகமாக
இருந்தால் பற்றாக்குறையும் ஏற்படும்.
அளவுக்கு மீறிய
பற்றாக்குறை ஏற்படும்போது அது பொர
நெருக்கடியை ஏற்படுத்தும்.
மூலதனப் பொருள்களின்
இறக்குமதி என்றால் என்ன?
ஒரு தயாரிப்பாளர்
ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வ
மூலப்பொருளை இறக்குமதி செய்வதுத
மூலதனப் பொருள் இறக்குமதி.
அப்படி மூலப்பொருளை இறக்குமதி செய்
பொருள்களைத் தயாரித்து அதிக
விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம்
இறக்குமதியால் ஏற்படும் நடப்புக்
கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட
முடியும்.
Saturday, August 31, 2013
ரூபாயின் வீழ்ச்சி என்ன காரணம் முழுவதும் படியுங்கள்....
Friday, August 30, 2013
நமது கல்வி முறை Message from தமிழால் இணைவோம் study method
தமிழால் இணைவோம்:
நமது கல்வி முறை எந்த லட்சணத்தில் எவ்வளவு கேவலமான நிலையில் இருக்கிறது என்பதற்கு என் சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன்,, புரிந்து கொள்ளுங்கள்,,
நான் இளங்கலை (உலோகவியல்) படித்தபோது 'மெட்டலர்ஜிக்கல் தெர்மோடைனமிக்ஸ்' (Metallurgical Thermodynamics) என்று ஒரு பாடம் உண்டு, ஒரு முறை கூட வகுப்பை கவனித்தது கிடையாது, ஏனென்றால் கவனித்தாலும் புரியாத வகையில் நடத்தப்பட்டது என்று சொல்வதை விட பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கே அது புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும், ஒன்றும் புரியாத மற்றும் சுத்தமாக படிக்காத காரணத்தினால் நான் 'செமெஸ்டர்' இறுதி பரீட்சை எழுதவே செல்லவில்லை, மேலும் எனக்கும் என் நண்பர்களுக்கும் 'இன்டெர்னல்' மார்க் ஐந்து கூட இல்லை, ஆனாலும் எங்கள் 'கேங்'கில் இருக்கும் ஒரு நண்பன் மட்டும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இரண்டே இரவுகளில் தன்னால் முடிந்ததை மட்டு மனப்பாடம் அடித்து பரீட்சை எழுதி வந்து விட்டான், 'எக்ஸ்டேர்ணலில்' ஜஸ்ட் பாஸ் ஆகி விட்டாலும், 'இண்டர்ணலில்' போதிய மதிப்பெண் இல்லாததால் அவனும் பெயிலாகி விட்டான்,,,
அடுத்த செமெஸ்டர் வந்தது, எங்களுக்கு அது அப்போது அரியர் பேப்பர், வழக்கம் போல் ஒரே இரவில் படித்து விடலாம் என்று நினைத்து புத்தகத்தை எடுத்தால் சத்தியமாக ஒன்றும் புரியவில்லை, சரி அடுத்த செமேச்டரில் முன்னதாகவே படித்து தெரிந்து கொண்டு எழுதி பாஸ் ஆகிடலாம், ஒரு தடவ வச்சா என்ன ரெண்டு தடவ வச்சா என்ன ??? அரியர் அரியர் தான என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிவிட்டு பரிச்சைக்கு 'ஸ்கூட்' (ரம்மி விளையாட தெரிந்தவர்களுக்கு புரியும்) விட்டு விடுவதாக முடிவு செய்து விட்டு சென்று விட்டேன்.
அடுத்த நாள் மதியம் சரியாக பரீட்சைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, போன செமேச்டரில் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய அதே நண்பன் என்னை தேர்வுக்கு வருமாறு வற்புறுத்தி கொண்டே இருந்தான்,, "ஒன்னுமே தெரியாம அங்க வந்து என்னடா செய்ய போறேன்,, விடு அடுத்த செமேஸ்டர்ல முன்னாடியே எல்லாத்தையும் படிச்சு எழுதிடுறேன்" என்று நான் கூறியும் அவன் விடுவதாக இல்லை,, "தயவு செஞ்சு எனக்கு கம்பெனி குடுக்க வா மாமா,, அரியர் பேப்பர் எழுத தனியா போனாலே ரொம்ப கேவலமா பாக்குறானுங்க" என்று எவ்வளவோ அவன் சொல்லி பார்த்தும் நான் மசியவில்லை, ஒன்னும் தெரியாம அங்க வந்து சும்மா உக்காந்து இருக்குறது நான் ரூம்ல நிம்மதியா படுத்து தூங்குவேன் என்று சொல்லி பார்த்தேன், என் நண்பன் விடுவதாக இல்லை, உனக்கு ரெண்டே ரெண்டு 'ப்ராப்ளம்' சொல்லித்தாரேன் அத மட்டும் நல்லா பாரு கடைசி அஞ்சு வருஷ கொஸ்டின் பேப்பர்ல அந்த ப்ராப்ளம் தான் வந்துக்கிட்டே இருக்கு என்று சொல்லி எனக்கு அந்த இரண்டே இரண்டு கணக்கை மட்டும் எப்படி 'சால்வ்' செய்வது என்று பத்தே நிமிடத்தில் சொல்லி குடுத்தான், அவனின் நிர்பந்தத்தால் பரீட்சைக்கு சென்றேன்,
கேள்வி தாளை வாங்கி பார்த்தால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவன் சொல்லி தந்த இரண்டு ப்ராப்ளம்ஸ் நான்கு பெரிய கேள்விகளாக மொத்தம் அறுபது மதிப்பென்களுக்கு வந்திருந்தது இன்னொரு பெரிய கேள்வி +2 கெமிஸ்ட்ரியில் படித்தது, ஒரு மணி நேரத்தில் மிகச்சரியாக ஐந்து கேள்விகளையும் நொறுக்கி எடுத்து விட்டேன், நான் எதுவும் படிக்காததால் எனக்கு எந்த குழப்பமும் இல்லை, தெளிவாக அவன் சொல்லி தந்தது தான் நினைவில் இருந்தது, தேர்வு முடிந்த வெளியே வந்த எனக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை, சொல்லி குடுத்த நண்பனோ சரியாக செய்யவில்லை, எந்த கணக்கிற்கும் விடை சரியாக வரவில்லை என்று வருத்தமாகவே இருந்தான், என் சந்தோசம் அவனக்கு அப்போது மிகுந்த துக்கத்தை கொடுத்தது, ரிசல்ட் வந்தது, அவன் 'எக்ச்டர்ணலில்' ஜஸ்ட் பாஸ் ஆகி இண்டர்ணலில் போதிய மதிப்பெண் இல்லாமல் பெயிலாகி இருந்தான், நான் எக்ச்டர்ணலில் மட்டும் 60 மதிப்பெண்கள் எடுத்து கோலாகலமாக பாஸ் ஆகி இருந்தேன், "தூங்கிக்கிட்டு இருந்த உன்ன தட்டி எழுப்பி சொல்லி குடுத்தேன் பார்த்தியா அது என் தப்பு" என்று நொந்து கொள்வதை தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை,,
அவ்ளோ தான் நம்ம கல்வி திட்டம்,, இது ஒரு சுயநல கல்வி திட்டம் என்று தான் சொல்ல வேண்டும், இங்கு எதுவும் புரியாவிடிலும் மிக மிக ஈசியாக பாஸ் ஆகி விடலாம்,,,, புரிதல் ஏற்படுத்தும் கல்வி முறை நம்மிடம் இல்லை,, எப்படி மதிப்பெண்கள் வாங்கி நல்ல வேலையை வாங்குவது என்ற பயிற்சி முறை தான் நமது கல்வி முறை, இங்கு புகட்டப்படுவது கல்வி அல்ல,, பயிற்சி,,
@ சகலகலா ஜீன்ஸ்
Thursday, August 29, 2013
புஸ்வானமான இந்தியாவின் பொருளாதார மேதைகள் indian politics news
புஸ்வானமான இந்தியாவின் பொருளாதார வல்லரசு கனவு - தமிழ் சசி
மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சி.ரங்கராஜன், மான்டெக் சிங் அலுவாலியா ஆகிய பொருளாதார மேதைகளை உள்ளடக்கிய தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவை கனவுக்குழு என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த கனவுக்குழுவின் வழிநடத்துதலில் தான் தற்பொழுது இந்தியாவின் பொருளாதார வல்லரசு கனவு புஸ்வானமாகி கொண்டிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் ரூபாய் சுமார் 20% சரிந்துள்ளது.
High Growth leads to High Inflation என்று பொருளாதாரத்தில் ஒரு தியரி உண்டு. அதைத் தான் இந்தியாவின் கனவுக் குழு செயல்படுத்திக் கொண்டிருந்தது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த பொழுது பொருளாதாரமும் தானாக வளரும் என்ற நம்பிக்கையில் அதைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் இந்தக் கனவுக்குழு மேற்கொள்ளவில்லை. சாதாரண மக்களை பணவீக்கம் அழுத்தினாலும் இரட்டை இலக்க உள்நாட்டு உற்பத்தி உயர்வு (GDP) தான் இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் பொருளாதாரத்தில் உள்ள தியரிகளை இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. உள்கட்டமைப்பு சரியில்லாத இந்தியாவில் குறுகிய காலத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சி நடைபெறும் சாத்தியங்கள் இல்லை. இந்தியாவின் பொருளாதார கொள்கைகளால் பல எதிர்மறை விளைவுகளே ஏற்பட்டன. உதாரணமாக தளர்த்தப்பட்ட விதிகளால் வெளிநாட்டு பணம், கூடவே கறுப்பு பணமும் இந்தியாவிற்குள் ஏராளமாக நுழைந்து. ரியல் எஸ்டேட் சந்தை அசுர வேகத்தில் வளர்ந்தது. குறுகிய காலத்தில் அதிகரித்த ரியல் எஸ்டேட் விலையால் மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்தது. ரியல் எஸ்டேட் தொடங்கி அன்றாட வாழ்க்கையில் அதிகரித்த பணவீக்கமும் மக்களின் வாங்கும் திறனை வெகுவாக குறைத்தது.
அதிகரித்த பணபுழக்கம் காரணமாக உள்நாட்டு உற்பத்தி பெருகும் என்ற தியரியும் இந்தியாவில் நடைபெறவில்லை. காரணம் உள்கட்டமைப்பு தொடங்கி இந்தியாவிற்கேயுரிய பலப் பிரச்சனைகள் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கவே இல்லை. பணவீக்கம் தான் அதிகரித்து கொண்டே இருந்தது. சில ஆண்டுகள் உள்நாட்டு உற்பத்தி 9% தொட்டாலும் அதற்கு முக்கிய காரணம் உலகெங்கிலும் இருந்த சுலபமான பணப்புழக்கம் காரணமாக நடந்த பொருளாதார உயர்வு தானே தவிர இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. இந்தியாவின் பொருளாதாரம் வளரும் என்ற நோக்கில் உள்ளே நுழைந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம், அதன் காரணமாக அதிகரித்த பணபுழக்கம், அதன் காரணமாக மலிவாக இருந்த இறக்குமதி, ரூபாய் உயர்வு என எல்லாமும் தற்பொழுது காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மோசமான பொருளாதாரம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை விலக்கி கொண்டிருக்கின்றன.
குறைவான உற்பத்தி மிக அதிகமான பணவீக்கம் (Slow growth High Inflation) என இந்தியா திண்டாடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4% என்ற மிகவும் குறைந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தியாவை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு இணையான பொருளாதார வல்லரசாக உயர்த்தி காட்டுவோம் என்று கூறிய மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ரங்கராஜன், மான்டெக் சிங் போன்ற பொருளாதார மேதைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை பத்தாண்டுகள் பின்நோக்கி கொண்டு சென்றிருக்கிறார்கள். நல்ல வளர்ச்சி.
1990களின் பிற்பகுதியில் தெற்காசிய நாடுகளான மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்றவை மிகப் பெரிய சரிவை எதிர்கொண்டன. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் இந்த நாடுகளின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. உலகப் பொருளாதாரத்தின் அடுத்த வல்லரசுகளாக இந்த நாடுகள் கருதப்பட்டன. உள்நாட்டு உற்பத்தி அதிகாரிக்காமல் வெறும் பணமுதலீடுகள் காரணமாக நடந்த இந்த பொருளாதார உயர்வு சரிவுக்கும் காரணமாக இருந்தது. இதில் மிகப் பெரிய சரிவை எதிர்கொண்ட நாடு தாய்லாந்து. ஒரு கட்டத்தில் சுமார் 9% பொருளாதார உயர்வை அடைந்த தாய்லாந்து மிக மோசமாக சரிந்தது. தாய்லாந்தின் நாணயமான பாட் மிக மோசமாக சரிந்தது.
இது போன்ற பல பொருளாதார சரிவுகள் உலகெங்கும் நடந்திருக்கிறது. கிட்டதட்ட தெற்காசியாவில் நடந்த சரிவை போன்ற ஒரு சரிவையே இந்தியா எதிர்கொண்டு வருவதாக தான் எனக்கு தோன்றுகிறது. உள்நாட்டு உற்பத்தியில் பெரிய வளர்ச்சி இல்லாமல் சுலபமாக இருந்த பணப்புழக்கம் மற்றும் வெளிநாட்டு நிதி முதலீடுகள் காரணமாக ஏற்பட்ட வளர்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் ரூபாய் வேகமாக சரிந்து வருகிறது. இந்தியாவில் இருந்த தங்களுடைய முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வேகமாக விலக்கி கொண்டு வருகின்றன. இது தொடருமானால் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும்.
பணமுதலைகளும், அரசியல்வாதிகளும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் சாமானிய மக்கள் ? அவர்களுக்கு அரசாங்கம் அளிக்கப் போகும் மலிவு விலை உணவுகளும், காய்கறிகளும், இன்ன பிற இலவசங்களும் மட்டும் தான் மிச்சம்.
via @தமிழ் சசி
2ஜி ஊழலை விசாரிக்கும் குழுவில் தி.மு.க. எம்.பி. வசந்தி ஸ்டான்லி dmk mp vasanthi stanley
2ஜி ஊழலை விசாரிக்கும் பாராளுமன்ற கூட்டுக்குழுவில் தி.மு.க. எம்.பி. வசந்தி ஸ்டான்லி 2g issue enquiry parliament group team dmk mp vasanthi stanley
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் 30 எம்.பி.க்கள் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் 20 பேர் பாராளு மன்றத்தில் இருந்தும் 10 பேர் மேல்–சபையில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டவர்கள். பாராளுமன்ற மேல்– சபை எம்.பி.க்களான சுதர்சனம் நாச்சியப்பன் (காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.) ஆகியோர் பாராளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம் பெற்று இருந்தனர்.Wednesday, August 28, 2013
நில அபகரிப்பு புகார், சிக்கும் கருணாநிதி மகள் செல்வி?
சற்றுமுன் செய்திகள்:
நில அபகரிப்பு புகார், சிக்கும் கருணாநிதி மகள் செல்வி?
கருணாநிதி குடும்பத்தின் பிற வாரிசுகளை போன்று இல்லாமல் அரசியலில் அதிகமாக தலையிடாதவர் அவரது மூத்த மகள் செல்வி.மாறன் பிரதர்ஸ்க்கு கருணாநிதி குடும்பத்தில் பாதுகாப்பு அளித்து வருவதே கருணாநிதியின் மூத்த மகள் செல்வி தான், சென்னை நுங்கம்பாக்கத்தில் 16 கிரவுண்ட் நிலத்தை வெறும் 22 இலட்சம் ரூபாய்க்கு வளைத்து போட்டது தான் கேஸ் ஆகியுள்ளது.
மேலும் படிக்க
Tuesday, August 27, 2013
Thanks for your vote - Anjana.Padmanabhan
Anjana.Padmanabhan
Hi All,
I made it to the "GRAND FINALE" of INDIAN IDOL JUNIOR in yesterday's shoot , with GOD's grace and all of your relentless support and encouragement.
THANK YOU ALL for blessing me with your wishes and votes.
I am truly blessed to have you continued affection and love.
THANKS, THANKS, THANKS,
A big thanks to all my dear ones from the bottom of my heart...All of your support have made Me enter the Grand Finale.
Again a Humble Appeal to all my dear ones - the voting lines are now open from 25/08/2013 to the morning of 01/09/2013 7AM. Please please do vote for her. Details of the voting is given below. Please caste the maximum number votes you can.
Thank you and Love you always.
1) To Vote via SMS : - TYPE IDOL ANJ (remember to leave a space between IDOL and ANJ) and send it to 5252525. You can caste as many votes as you can every day from your mobile.
2) FREE VOTING ONLINE : - Log in to myindianidol.com and caste "UNLIMITED VOTES FREE" using your FB / Twitter login.
For Apple ios mobile users and Android Mobile users, there is an App named INDIANIDOL, download it and u can caste unlimited votes.
இப்படியும் சில பழமொழிகள்.
தமிழால் இணைவோம்:
படித்ததில் இரசித்தது...
இப்படியும் சில பழமொழிகள்.
* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
* கார் ஓட டயரும் தேயும்
* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது
* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
* முடியுள்ள போதே சீவிக்கொள்
* பழகின செறுப்பு காலை கடிக்காது
* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி
* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே.
via; Ilayaraja Dentist
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் சரிவு dollar rate incressed
சற்றுமுன் செய்திகள்:
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மீண்டும் சரிவு.
அமெரிக்க டாலுருக்கு எதிரிரான இந்திய பணமதிப்பு மேலும் சரிந்து இன்று எப்போதும் இல்லாத அளவாக ரூபாய் 65.70 ஐ தொட்டது. அதன் எதிரொலியாக இந்திய பங்குசந்தை இன்று வீழ்ச்சியை சந்தித்தது
இதன் விளைவாக கச்சா எண்ணையின் கொள்முதல் விலை உயர்வானதால் இரண்டொரு நாளில் டீசல் விலை இரண்டிலிருந்து மூன்று ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என தெரிகிறது.
சமையல் எரிவாயு விலையும் மாதம் பத்து ரூபாய் வரை ஏற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
# விறகடுப்பும், சைக்கிளும் தான் நமக்கு சரிபட்டு வரும் போல
Monday, August 26, 2013
காலிபர் 'SHOE' இலவசமாக
சற்றுமுன் செய்திகள்:
.மாற்றுத்திறனாளிகளுக்கு காலிபர் 'SHOE' இலவசமாக வழங்கும்அன்பரின் கைபேசி எண்கள் +91 89253 73001, 98422 93774
தேவைப்படுவோம் பயன்படுத்திக்கொள்ளலாம்
Sunday, August 25, 2013
MIRACLE DRINK ... KILLS CANCER CELLS TOO
MIRACLE DRINK ... KILLS CANCER CELLS TOO.....MUST READ:
You need one beet root, one carrot and one apple that
combine together to make the JUICE! Wash the above, cut with the skin on into pieces and put them into the juicer and
drink the juice.
This MIRACLE DRINK has been circulating for a long time long
ago. It is worth your while to take note. There is a celebrity Mr. Seto who swears by it. He wants to make it public to draw the
attention of people who have cancers. This is a drink that can protect bad cells forming in your body or it will restrain its growth!
Mr. Seto had lung cancer. He was recommended to take this drink by a famous Herbalist from China. He has taken this drink diligently for 3 months and now his health is restored. It does not hurt for you to try.
You can add some lime or lemon for more refreshing taste.
This Miracle Drink will be effective for the following ailments:
1. Prevent cancer cells to develop. It will restrain cancer cells to grow.
2. Prevent liver, kidney,pancreas disease and it can cure ulcer
as well.
3. Strengthen the lung, prevent heart attack and high blood
pressure.
4. Strengthen the immune system
5. Good for the eyesight, eliminate red and tired eyes or dry eyes
6. Help to eliminate pain from physical training, muscle ache
7. Detoxify, assist bowel movement, eliminate constipation.Therefore it will make skin healthy & LOOK more radiant.It is God sent for acne problem.
8. Improve bad breath due to indigestion, throat infection,
9.pain
10. Assist Hay Fever Sufferer from Hay Fever attack.
Highly nutritious and easily
absorbed. Very effective if you need to loose weight. You will notice your immune system will be improved after 2 week routine.
Please make sure to drink immediately from the juicer for
best effect.
PLEASE SHARE TO YOUR FAMILY AND FRIENDS. —
Supply extra rice at affordable price: CM
Chief Minister Jayalalithaa
The demanded additional quantity may be 1.24 lakh tonnes a month
Chief Minister Jayalalithaa has urged Prime Minister Manmohan Singh to provide the additional quantity of rice at Rs. 3 per kg or Rs. 8.30 per kg.
[Under the Bill, rice will be provided to States at Rs. 3 per kg to cover eligible households. At present, Rs. 8.3 per kg is the issue price of rice fixed by the Central government for Above Poverty Line (APL) families. The additional quantity, which pertains to over and above the State’s entitlement, is likely to be around 1.24 lakh tonnes a month. The State’s monthly entitlement will be about 1.82 lakh tonnes].
Ms Jayalalithaa came up with this demand as she, in her letter written on Saturday to Dr Singh [the details of which were made public on Sunday], pointed out that the fixation of the issue price of foodgrains had even now been left to the discretion of the Union government, though the present allocation and off-take of foodgrains to States under the Public Distribution System (PDS) had been protected through an amendment to the Bill.
In the event of the issue price being fixed at the economic cost of price, the Sate would have to incur an “additional huge financial burden of around Rs.1,000 crore,” she said.
Recalling her previous letter sent to him on the subject, Ms Jayalailthaa stated that the Centre, which had accepted some of her suggestions, had proposed a few amendments.
She reiterated that the coverage of urban population under the Bill should be increased to 100 per cent or at least 75 per cent on a par with the population of rural areas.
She also suggested that the schedule in the Bill, now stating that the allocation of subsidised foodgrains would be in force for three years, be amended to provide the guaranteed subsidy for 10 years.
A provision to obligate the Central government to import food in times of scarcity was very crucial to make the legislation truly “a Food Security Act”.
Referring to the extension of the period for prescription of guidelines and identification of eligible households from 180 days to 365 days, she expressed doubt whether it was a realistic time frame given the fact that the identification of eligible households by States was contingent on the completion of the National Population Register and Socio Economic Caste Census (SECC). “This issue also may need to be revisited.” On the introduction of cash transfer and food coupon schemes, the Chief Minister said the provision should be amended that no such scheme may be introduced without the concurrence of the State governments.
இமாச்சல பிரதேசத்தில் 2 காணாமல் பிரஞ்சு hikers போலீஸ் தேடல்
இமாச்சல பிரதேசத்தில் 2 காணாமல் பிரஞ்சு hikers போலீஸ் தேடல்
ஆந்திர மூலம்
இமயமலை அடிவாரங்களில் உள்ள பிரபலமான சுவடுகளாக தேடி வருகின்றனர் சேர்ந்து ட்ரெக்கிங் போது காணாமல் போனது இரண்டு பிரஞ்சு ஆண்கள், போலீஸ் ஞாயிறன்று கூறினார்.
20 மற்றும் 21 வயதுடைய hikers, இமாச்சல பிரதேச மாநிலம் ஒரு வேறுபட்ட வழியில் எடுத்து புதனன்று 30 மற்ற வெளிநாட்டவர்கள் உட்பட ஒரு குழு பிரிந்து விட்டு பின்னர் காணப்படாத இல்லை. போலீஸ் இரண்டு அவர்கள் அதே மாலை சந்திக்க வேண்டும், தங்கள் நண்பர்கள் கூறினார் சொல்கின்றன.
போலீஸ் எந்த துப்பு கண்டுபிடிக்க இன்னும் சனிக்கிழமை முதல் Dharamsala நகரம் அருகே சுவடுகளாக பகுதியில் தேடி, ஆனால்.
பிரஞ்சு தூதரகம் ஞாயிறன்று இது பிரான்சில் ஆண்கள் குடும்பங்கள் தொடர்பு தெரிவித்துள்ளார்.
My Blog List
Popular Posts
-
மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி Chopper crash lands in Thane 5 dead Tamil NewsToday, மும்பை, செப். 29- மகாராஷ்டிர மாநி...
-
13ம் தேதி 'பாண்டியநாடு' ஆடியோ வெளியீடு by admin TamilSpyToday நடிகர் விஷால், தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பி...
-
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழ்நாட்டில் இன்றும் மழை பெய்யும் today tamilnadu rained சென்னை, செப்.8– சென்னை வானிலை ஆய்வு ம...
-
நிம்மதியாக இருக்க முடியலே என்ன காரணம்? ஒரு பெரிய பணக்காரர் ஒரு துறவியிடம் போனார். சுவாமி என்கிட்டே ஏராளமா பணம் இருக்கு இருந்தாலும் நி...
-
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் இளம்பெண் தீக்குளித்து சாவு chennai man young girl fire bath death Tamil NewsYesterday, சென்னை,...
-
பாகிஸ்தான்: கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிருடன் வந்தார் 13 year old molestation victim surface after buried alive இஸ்லா...
-
China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்...
-
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – விமர்சனம்! by admin TamilSpyYesterday, விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல… அப்ப படம் நல்லாத்தான் இருக...
-
'பலான' வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்! by Marikumar டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பி...
-
மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது by Marikumar ஒடிசாவில் சம்பவம்; பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை ...
Labels
- 2ஜி
- Actor Vijay
- Bangalore
- Cancer
- Chennai
- Cinema News
- College Student
- Computer
- Cricket News
- DMK
- Gambir
- India News
- Indian News
- Jeyalalitha
- London
- Madurai
- Nagapattinam
- News
- Police
- Political News
- Supreme Court
- Tamil Nadu
- Tamil News
- Thiruvanmiyur
- Tuticorin
- World News
- இ– மெயில்
- ஈழத்தமிழர்கள்
- உலகச் செய்திகள்
- சந்திரபாபுநாயுடு
- சீமான்
- செய்திகள்
- டாலர்
- தா.கிருஷ்ணன்
- தி.மு.க
- தெலுங்கானா
- நடிகை
- மு.க.அழகிரி
- யாகூ
- ரோஜா
- வசந்தி ஸ்டான்லி
- ஜிமெயில்
Popular Posts
-
மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி Chopper crash lands in Thane 5 dead Tamil NewsToday, மும்பை, செப். 29- மகாராஷ்டிர மாநி...
-
13ம் தேதி 'பாண்டியநாடு' ஆடியோ வெளியீடு by admin TamilSpyToday நடிகர் விஷால், தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பி...
-
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: தமிழ்நாட்டில் இன்றும் மழை பெய்யும் today tamilnadu rained சென்னை, செப்.8– சென்னை வானிலை ஆய்வு ம...
-
நிம்மதியாக இருக்க முடியலே என்ன காரணம்? ஒரு பெரிய பணக்காரர் ஒரு துறவியிடம் போனார். சுவாமி என்கிட்டே ஏராளமா பணம் இருக்கு இருந்தாலும் நி...
-
சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்: வாலிபர் இளம்பெண் தீக்குளித்து சாவு chennai man young girl fire bath death Tamil NewsYesterday, சென்னை,...
-
பாகிஸ்தான்: கற்பழிக்கப்பட்டு புதைக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிருடன் வந்தார் 13 year old molestation victim surface after buried alive இஸ்லா...
-
China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்...
-
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – விமர்சனம்! by admin TamilSpyYesterday, விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல… அப்ப படம் நல்லாத்தான் இருக...
-
'பலான' வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்! by Marikumar டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பி...
-
மொட்டை அடித்து, பிறப்புறுப்பை தைத்து மனைவியை துன்புறுத்திய கணவன் கைது by Marikumar ஒடிசாவில் சம்பவம்; பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை ...