தினசரி செய்திகள்

Friday, September 27, 2013

சினிமா விழாவில் மிரட்டி ஆட வைக்கப்பட்ட நடிகைகள்? Tamil cinema dance program

சினிமா விழாவில் மிரட்டி ஆட வைக்கப்பட்ட நடிகைகள்?

by abtamil

சென்னையில் நடந்த சினிமா விழாவில் நடனமாட மாட்டேன் என்று கூறிய சில நடிகைகள் மிரட்டி ஆட வைக்கப்பட்டார்களாம். சென்னையில் சினிமா விழா ஒன்று கோலாகலமாக நடந்தது.

விழாவில் எனக்கு அழைப்பு வரவில்லை, உனக்கு அழைப்பு வரவில்லை என்று பலர் அலுத்துக் கொண்டனர். இந்நிலையில் விழாவில் நடனமாட சில முன்னணி நடிகைகள் மறுத்துவிட்டார்களாம். வழக்கமாக மேடை நிகழ்ச்சிகளில் ஆட நடிகைகளுக்கு பெரும் தொகை அளிக்கப்படும்.

ஆனால் இந்த விழாவில் ஆட பெரிய தொகை எல்லாம் கொடுக்கவில்லையாம். இதனால் பல நடிகைகளை நடனமாட மறுத்தார்களாம். அவ்வாறு மறுத்த நடிகைகளை மிரட்டி ஆட வைத்தார்களாம்.

அதிலும் ஆட மாட்டேன் என்று அடம்பிடித்த மங்கலகரமான ராய் நடிகையை மிரட்டி ஆட வைத்தார்களாம். மேலும் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து சொல்லும் நாட்டாமையின் மகளையும் கூட மிரட்டி ஆட வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

Show commentsOpen link

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம் womens hockey

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்

by veni
Google NewsToday, 20:57

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான 8-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்ற இந்திய அணி, கோப்பை வென்றால் மட்டுமே, அடுத்த ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

இதனால் கவனமுடன் விளையாடிய இந்திய வீராங்கனைகள் லீக் ஆட்டங்களில் முத்திரை பதித்து அரையிறுதிக்கு முன்னேறினர். ஆனால் அரையிறதியில், கொரிய அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றதால், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் கனவு தகர்ந்தது.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா-சீனா அணிகள் மோதின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில், அனுராதா தேவி தாக்கோம் 16-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 31-வது நிமிடத்திலும் அபாரமாக பீல்டு கோல்கள் அடித்தனர்.

இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது, 51-வது நிமிடத்தில் சீனாவின் யான் யான் ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். அதன்பின்னர் இந்திய வீராங்கனைகளின் தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சீன வீராங்கனை வூ மெங்ராங் 64-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 2-2 என சமன் செய்தார்.

இதனால் ஆட்டநேரம் முடிந்ததும் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல்கணக்கில் இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. அத்துடன், லீக் போட்டியில் சீனாவிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டது.

முன்னதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜப்பான் அணி, நடப்பு சாம்பியன் தென் கொரியாவை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. அத்துடன் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதை உறுதி செய்தது.

The post பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

ஒரு ஹீரோ நான்கு ஹீரோயின்! சேரன் இயக்கத்தில் சிம்பு! Simbu and seran next movie

ஒரு ஹீரோ நான்கு ஹீரோயின்! சேரன் இயக்கத்தில் சிம்பு!

by admin
TamilSpyYesterday,

சிம்பு தற்போது வேட்டைமன்னன், வாலு ஆகிய இரு படங்களில் நடித்துவருகிறார். கைவசம் இரு படங்கள் இருக்கிறதே தவிர திரைப்படத்தின் வேலைகள் நடப்பதாக தெரியவில்லை. அதிலும் ஹன்ஸிகாவோடு காதல் கைகூடிய பின் சிம்பு திரையுலகம் பக்கம் காணப்படுவதே இல்லை என்கின்றனர் திரையுலகினர்.

ஆனால் தற்போது சேரன் இயக்கத்தில் சிம்புவை நடிக்கவைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக பேசப்படுகிறது. மஞ்சு மனோஜ் நடித்த பொடுகடு என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முடிவிலிருக்கும் தயாரிப்பாளர் சிரிஷா ஸ்ரீதர் சிம்புவை ஹீரோவாக நடிக்கவைக்க விருப்பப்படுகிறாராம். மேலும் இந்த கதைக்கு தமிழ் இயக்குனர்களில் சேரனைத் தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளதாம்.

ஹீரோவை நான்கு ஹீரோயின்கள் காதலிக்கும் கதை தான் பொடுகடு திரைப்படத்தின் கதையாம். கதையை கேட்டதும் இதற்கு சிம்பு தான் கரெக்ட் சாய்ஸ் என்று ரசிகர்கள் நினைக்கலாம். சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் கதை கிட்டத்தட்ட இதே மாதிரியானது என்பதால் அதே காரணத்திற்காகத்தான் இயக்குனர் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரா? என்கிறது கோடம்பாக்கம்.

Show commentsOpen link

இணையத்தில் பட்டையை கிளப்பும் ஆரம்பம் ட்ரெய்லர்! (வீடியோ இணைப்பு) aarambam trailor video

இணையத்தில் பட்டையை கிளப்பும் ஆரம்பம் ட்ரெய்லர்! (வீடியோ இணைப்பு)

by abtamil

ரசிர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது ஆரம்பம் பட ட்ரெய்லர்.

பில்லா வெற்றியைத் தொடர்ந்து விஷ்னுவர்தன் இயக்கும் திரைப்படம் ஆரம்பம்.

இப்படத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா மற்றும் டாப்ஸி ஆகியோர் நடித்துள்ளனர்.

தீபாவளி ரேசில் களமிறங்க தயாராகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றம் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

ட்ரெய்லரிலேயே அதிக வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிமாக உள்ளது.

மேலும் இப்படத்திற்கு யுவன்சங்கராஜா இசையமைத்துள்ளார்.

 

Show commentsOpen link

கடாபி மீது செக்ஸ் குற்றச்சாட்டு Libya president Gaddafi on torture accusation

லிபியா முன்னாள் அதிபர் கடாபி மீது செக்ஸ் குற்றச்சாட்டு Libya president Gaddafi on torture accusation
Tamil NewsToday, 05:30

திரிபோலி, செப். 27–

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மர் கடாபி (72). இவருக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு லிபியாவில் மக்கள் புரட்சி வெடித்தது. இதை தொடர்ந்து அவர் எடுத்த ராணுவ நடவடிக்கை தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து பானிவாலிட் என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை புரட்சி படையினர் பிடித்து அடித்து கொன்றனர்.

கடாபியின் வலதுகரமாக அவரது பாதுகாப்பு இயக்குனர் மன்சூர் டாவ் இருந்து வந்தார். தொடக்கம் முதல் அவரது வாழ்க்கை முடியும் வரை உடன் இருந்தார்.

கடாபி மீது 'செக்ஸ்' புகார்கள் உள்ளன. இவர் தனது மாளிகையின் பாதாள அறையில் இளம் பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்டதாக கூறப்பட்டது.

இது குறித்து மன்சூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு மழுப்பலாக அவர் பதில் அளித்தார். 'செக்ஸ்' என்பது ஒருவரது வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயம்.

கடாபியை பொறுத்தவரை அவர் ஒரு 'செக்ஸ்' பிரியர் என கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா என்பது எனக்கு தெரியாது. பங்களாவின் பாதாள அறையில் உள்ள 'செக்ஸ்' மாளிகைக்குள் நான் சென்றதில்லை.

ராணுவ அதிகாரிகளில் நான் உயர்பதவியில் இருந்தேன். அத்துடன் அவருக்கு கமாண்டராகவும் பணிபுரிந்தேன். எனவே, அவரது கட்டளையை மட்டும் நிறைவேற்றுவேன் என்றார்.

...
Show commentsOpen link

Thursday, September 26, 2013

Don't Drink and Drive - Public Message

Don't Drink and Drive - Public Message

by Manonmani Nagamani
Girls secret Vs Boys secret - Tamil Facebook Shares25 Sep 2013

Related Searches : public message for all , tamil public service lines ,  Drink and Drive tamil pictures for facebook shares.

Show commentsOpen link

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி: உலகக் கோப்பை கனவு தகர்ந்தது Asia Cup hockey Indian women lose to Korea in semis

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி: உலகக் கோப்பை கனவு தகர்ந்தது Asia Cup hockey Indian women lose to Korea in semis
Tamil NewsToday, 05:30

கோலாலம்பூர், செப். 26-

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான 8-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கோப்பை வென்றால் மட்டுமே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால் இந்திய அணி, தீவிர பயிற்சியுடன் களமிறங்கியது.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி 2ம் இடத்தைப் பிடித்ததால் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கொரிய அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கொரிய அணி 2-வது நிமிடத்தில் முதல் கோலையும், 9-வது நிமிடத்தில் 2-வது கோலையும் அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்த இந்திய வீராங்கனைகள் கோல்கள் அடிக்க கடுமையாக போராடினர். அப்போது 41-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ரிது ராணி கோலாக்கினார். அதன்பின்னர் கோல் அடிக்க முடியவில்லை. எனவே இறுதியில் 1-2 என்ற கோல்கணக்கில் இந்தியா பரிதாபமாக தோற்றது. இதனால் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் கனவும் தகர்ந்தது.
...
Show commentsOpen link

Wednesday, September 25, 2013

கொடைக்கானலில் ஆடிப்பாடும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா sivakarthikeyan and hansika

கொடைக்கானலில் ஆடிப்பாடும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா

by abtamil Tamil newsToday,

'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'மான் கராத்தே'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். மேலும், நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் உடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பதோடு, கதை மற்றும் திரைக்கதையையும் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.

தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Show commentsOpen link

Tuesday, September 24, 2013

Madras Cafe - என் பார்வையில்!!

Madras Cafe - என் பார்வையில்!!

by Priyakash
New Tamil Jokes -

Naan, last weekend, "Madras Cafe" padam paarthen...

I can just say, "Now I understand how Afghanis, Iraqis, Vietnamese will feel after watching Hollywood(American) war movies":(:(:(

Idhukku mela ennala onnum solla mudiyala....Ungalukke naan enna solla varennu puriyumnnu nenaikaren...

Their message "War can't bring any victory"(if it's the true one that they wanted:rolleyes:, because movie says otherwise) should have been converyed in a much more clearer and better way.

Only thing in the movie, which is just okay is the dialogues(which are very few) of Nargis Fakhri as an unbiased war correspondent. Everything else is seriously flawed:(

Though I had my apprehensions about the movie, it proved to be more disastrous than my expectations(????):rolleyes:....

Bollwood should really think before making such movies based on serious, sensitive issues.

At last, my only regret is that why didn't I stick to my initial decision of not watching this movie:frusty::hurt:

Neenga yaaradhu naan panna thappaye(indha padam paarthadhu:rolleyes:) panneengala???

Show commentsOpen link

‘த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?’ trisha drinking news

'த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?'

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

இப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்டு செய்தி. என்ன நடந்தது? சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள். உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார்.

அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம். த்ரிஷா – நள்ளிரவு மது விருந்துகள் – கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது. பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

Show commentsOpen link

Monday, September 23, 2013

சோனியாவின் குரலில் பேசிய பெண் யார்? central govt lawyer phone speaking in the voice of like Sonia

மத்திய அரசு வழக்கறிஞரிடம் தொலைபேசியில், சோனியாவின் குரலில் பேசிய பெண் யார்? central govt lawyer phone speaking in the voice of like Sonia
Tamil NewsYesterday, 05:30

புதுடெல்லி, செப். 24-

மத்திய அரசு வழக்கறிஞரிடம் (அட்டர்னி ஜெனரல்) சோனியா காந்தி குரலில் தொலைபேசியில் ஒரு பெண் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2-ந்தேதி அமெரிக்கா சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 11-ந்தேதி டெல்லி திரும்பினார். அவர் அமெரிக்காவில் இருந்த போது அட்டர்னி ஜெனரல் வாகன்வதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் சோனியா காந்தியை போன்ற குரலில் பேசிய ஒரு பெண், 'தான் நியூயார்க்கில் இருந்து பேசுவதாகவும், நிலக்கரி சுரங்க முறைகேடு உள்ளிட்ட மத்திய அரசின் ஊழல் தொடர்பான வழக்குகளில் தங்களின் (அட்டர்னி ஜெனரல்) செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும், எனவே அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து விலகும்படியும்' கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர். இதை உறுதிப்படுத்திய டெல்லி போலீசார், 'இந்த சம்பவம் தொடர்பாக அட்டர்னி ஜெனரல் புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளோம்' என்று கூறினர். டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருவதை உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவும் உறுதிப்படுத்தினார். விசாரணையில் அப்பெண் பொதுத்துறை நிறுவன அதிகாரி என்று தெரியவந்தது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், 'மத்திய அரசின் ஊழல் வழக்குகள் சம்பந்தமாக அட்டர்னி ஜெனரலிடம் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி விவாதித்து வரும் சம்பவங்கள் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக எத்தனை பேருடன் அட்டர்னி ஜெனரல் விவாதித்தார் என்பதை அவர் தெரியப்படுத்த வேண்டும்' என்றார்.

...
Show commentsOpen link

நஸ்ரியா ‘ஸ்வீட் ஹார்ட்’, நயந்தாரா ‘டார்லிங்’: இது ‘ராஜாராணி’அட்லி ஸ்டைல் nasriya and nayanthara

நஸ்ரியா 'ஸ்வீட் ஹார்ட்', நயந்தாரா 'டார்லிங்': இது 'ராஜாராணி'அட்லி ஸ்டைல்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயந்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் மற்றும் சந்தானம் எனப் பெரிய நட்சத்திரப்பட்டாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராஜா ராணி' படத்தில் அழகான, இளமையான அப்பாவாக வருகிறாராம் சத்யராஜ். சந்தானமும், சத்யனும் தங்கள் காமெடிப் பணிகளைச் செவ்வணே செய்திருக்கிறார்களாம். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தைப் பற்றி தினமும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதோ, அவற்றில் சில உங்களுக்காக….

அட்லியுடன் நட்பு… நண்பன் படத்தில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்த போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், அட்லியின் திறமையைப் பார்த்து இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் சத்யராஜ்.

நடிக்கலப்பா…. படத்தில் அவருக்கு நயந்தாராவின் அப்பா வேடமாம். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், 'இப்படத்தில் தான் நடிக்கவில்லையென்றும், வாழ்ந்திருக்கிறேன்' எனவும் தெரிவித்துள்ளார் சத்யராஜ். மேலும், இப்படத்தை தனது பிள்ளைகள் பார்த்தால் 'அப்பா நீங்கள் இப்படத்தில் நடிக்கவில்லை. உண்மையாகவே நீங்கள் இது போன்ற அப்பா தான்' என கூறுவார்கள் என கூறியிருந்தார் சத்யராஜ்.

படத்துவக்க விழா… இப்படத்திற்கான க்ளாப் போர்ட்டை ஏ.ஆர். முருகதாஸ் அடித்து துவக்கி வைக்க, கமல் ஒளிப்பதிவைத் துவக்கி வைத்தார்.

சார 'தீ'……. சந்தானம் 'சாரதி' என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவின் நண்பராக வருகிறாராம். கதையை வழி கொண்டு செல்லும் கதாபாத்திரமென்பதால், இந்த கதாபாத்திரத்ஹ்டிற்கு 'சாரதி' எனப் பெயர் போலும்.

டார்லிங்…ஸ்வீட் ஹார்ட்… படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் நண்பர்களாகவே பழகினார்களாம். இதற்கு உதாரணமாக இயக்குநர் அட்லி 'நயனை டார்லிங் என்றும், நஸ்ரியாவை ஸ்வீட் ஹார்ட் என்றும் அழைப்பதையுமே கூறலாம்.

பாராட்டு மழை… அட்லியை சூப்பர்ஸ்டாரும், உலக நாயகனும் தனித் தனியே அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Show commentsOpen link

Sunday, September 22, 2013

Karunanidhi hails TNA’s victory in Northern Province polls

Karunanidhi hails TNA's victory in Northern Province polls
Tamil NewsYesterday,

DMK president M. Karunanidhi on Sunday hailed the victory of the Tamil National Alliance (TNA) in the provincial council polls held after a gap of 25 years in the former Tamil Tigers-ruled Northern Province in Sri Lanka.
"I welcome this victory. I hope the new government and its members will work hard for implementation of the 13th amendment to the Sri Lankan constitution as expected by the Tamils the world over," Mr. Karunanidhi said.

The TNA trounced the ruling United People s Freedom Alliance (UPFA) coalition of President Mahinda Rajapaksa, grabbing 30 of the 38 seats in the much-awaited polls in the province.

...
Show commentsOpen link

My Blog List

Popular Posts

Popular Posts