China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் சீனாவின் யூடு ரோவரை படம்பிடித்த நாசா செயற்கைக்கோள் China Yutu Moon rover pictured from orbit by Nasa satellite
வாஷிங்டன், டிச. 31-
சீனா தனது விண்வெளித் திட்டங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக ஜேட் ராபிட் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக அனுப்பியது. 150 சென்டி மீட்டர் அகலமுடைய சக்கரங்களை கொண்ட இந்த ஜேட் ராபிட் கருவியானது, நிலவில் இறங்கி மேற்பரப்பு மற்றும் மண்ணின் தன்மை பற்றி ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி நிலவின் மேற்பரப்பபில் மழைக்கடல் என்றழைக்கப்படும் மெரெ இம்ப்ரியம் பகுதி அருகே இந்த ரோவர் கருவியும் அதன் துணை கருவியும் ஆராய்ந்துக்கொண்டிருக்கும் காட்சிகளை நிலவை பற்றி ஆராயும் நாசாவின் செயற்கைக்கோள் (எல்.ஆர்.ஓ.) படம்பிடித்து வெளியிட்டுள்ளது.
சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு கலன்களும், நிலவின் இருண்ட மேற்பரப்பில் வெள்ளையாக தெரிவதையும், அதன் நிழல் மிக நீளமாக தெரியும் காட்சிகளையும் நாசாவின் புகைப்படம் காட்டுகிறது.
இந்த ஜேட் ராபிட் திட்டத்தையடுத்து, ரோபாவை நிலவில் இறக்கி ஆராய சீனா திட்டமிட்டுள்ளது.
...