வங்க கடலில் புதிய காற்றழுத்த
தாழ்வு: தமிழ்நாட்டில் இன்றும்
மழை பெய்யும் today tamilnadu rained
சென்னை, செப்.8–
சென்னை வானிலை ஆய்வு மைய
இயக்குனர் ரமணன்
இன்று கூறியதாவது:–
ஆந்திரா அருகே வங்க கடலில்
வளி மண்டலத்தின் மேல் அடுக்கில்
உருவான சுழற்சி காரணமாக
நேற்றிரவு தமிழ்நாட்டில்
வடமேற்கு மாவட்டங்களில்
ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது.
இந்த சுழற்சி இன்னும் நீடிப்பதால்
இன்றிரவும் மழை பெய்யும். வட
மாவட்டங்களில் அனேக இடங்களிலும்,
மற்ற பகுதிகளில்
ஓரிரு பகுதிகளிலும்
மழை எதிர்பார்க்கலாம்.
சென்னையில் வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில்
இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தற்போது ஆந்திரா அருகே மத்திய
மேற்கு வங்க கடலில் புதிதாக
ஒரு காற்றழுத்த
தாழ்வு உருவாகி உள்ளது. இது நகரும்
பட்சத்தில் தமிழ்நாட்டில் மேலும்
மழை பெய்யும்.
இவ்வாறு ரமணன் கூறினார்.
இன்று காலை 8.30 மணி வரை முக்கிய
ஊர்களில் பெய்த மழை அளவு விவரம்
வருமாறு:–
புதுச்சேரி–10 செ.மீட்டர்,
கும்பகோணம்–7 செ.மீ., கடலூர்,
விழுப்புரம்–6 செ.மீ., ஏற்காடு, மைலம்,
உளுந்தூர்பேட்டை, ஊத்தங்கரை,
சிதம்பரம்–5 செ.மீ., நெய்வேலி, செஞ்சி,
குடவாசல், தொழுதூர்–4 செ.மீ.,
ஓமலூர், வாழப்பாடி, பரங்கிப்பேட்டை,
தர்மபுரி, திருப்பத்தூர், ஒரத்தநாடு,
சேலம், சின்னகல்லார்–3 செ.மீ.,
நடுவட்டம், அரியலூர், ஆத்தூர்,
போச்சம்பள்ளி, மன்னார்குடி–2 செ.மீ.,
ஈரோடு, திருத்துறைப்பூண்டி,
திருவாரூர், சேத்தியாதோப்பு,
விருத்தாச்சலம், மேட்டூர், பாபநாசம்,
வால்பாறை, ஸ்ரீமுஷ்ணம், நீடாமங்கலம்,
வலங்கைமான், தம்மம்பட்டி, ஓசூர்,
கள்ளக்குறிச்சி, தேங்கனி கோட்டை,
பெரம்பலூர்–1 செ.மீட்டர்.
No comments:
Post a Comment