தினசரி செய்திகள்

Monday, August 12, 2013

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு பிறந்த நாள் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வரர் Indian millionaire to host Charles Birthday

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு பிறந்த
நாள் விருந்தளிக்க லண்டனில் வசிக்கும்
இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வர தம்பதியர்
முடிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு வரும்
நவம்பர் மாதம் 14ம் தேதி பிறந்த நாள்
வருகிறது. இதனையொட்டி, நவம்பர் 21ம்
தேதி லண்டன் பக்கிங்காம் அரண்மனையில்
பலகோடி ரூபாய் செலவில்
அவருக்கு பிரமாண்ட விருந்தளிக்க லண்டனில்
வசிக்கும் கோடீஸ்வரர்களான
இந்தியாவை சேர்ந்த சைரஸ் வண்ட்ரேவலா -
பிரியா வண்ட்ரேவலா தம்பதியர்
முடிவு செய்துள்ளனர்.
லண்டனில் பிரபலமான இசைக்குழுவான
பில்ஹார்மோனியா குழுவினரின்
இசை நிகழ்ச்சி, மது விருந்து, கேளிக்கை,
உற்சாகம், உல்லாசம் என விருந்தை பல
கோடி பவுண்ட் செலவில் தடபுடலாக நடத்த
சைரஸ்
வண்ட்ரேவலா ஏற்பாடு செய்து வருகிறார்.
இங்கிலாந்தின் அரச
குடும்பத்துக்கு நெருக்கமானவராக
கருதப்படும் சைரஸ் பங்கு பரிமாற்ற தொழில்
செய்து வருகிறார்.
அவரது மனைவி பிரியா இந்தியாவின் பிரபல
ரியல் எஸ்டேட் நிறுவனமான
ஹிர்கோ குழுமத்தின் தலைவராக உள்ளார்.
இந்த தம்பதியர் அறக்கட்டளையின் மூலம் பல
தர்ம காரியங்களையும் செய்து வருகின்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்காக பக்கிங்காம்
அரண்மனையை பயன்படுத்திக்கொள்ள
இங்கிலாந்து ராணி எலிசபெத்
அனுமதி தந்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும்
பிரபல இந்தியர்கள் உள்பட சுமார் 250 பேர்
மட்டும் இந்த விருந்தில் பங்கேற்பார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி எலிசபெத் இந்த விருந்தில் பங்கேற்பாரா?
என்பது தொடர்பான அதிகாரபூர்வ
அறிவிப்பு ஏதும் பக்கிங்காம்
அரண்மனை வட்டாரங்களில் இருந்து இன்னும்
வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts