இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – விமர்சனம்!
by admin
TamilSpyYesterday,
விஜய்சேதுபதி நடிச்சிருக்காப்ல… அப்ப படம் நல்லாத்தான் இருக்கும் என்று டிக்கெட் வாங்கியவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போடுகிறார் படத்தின் இயக்குனர். ட்ரெய்லரே பட்டையக்கிளப்புதுன்னா… படம் சும்மா அதிரப்போகுதுன்னு நினைத்தவர்கள் நினைப்பில் ஒரு பெரிய பாராங்கல்லே விழுகிறது!
ஓப்பன் பண்ணா ஒரு ஒயின் ஷாப். அந்த ஒயின் ஷாப்பில் ஒரு பஞ்சாயத்து (குமாரின் அறிமுகம் – விஜய் சேதுபதி). அதே ஒயின் ஷாப்பில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்தவர்கள் அடுத்த ஒயின் ஷாப்பில் குடித்துகொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நண்பர்களோடு குடித்துக்கொண்டிருப்பவர் பாலா. குமுதாவை ரூட் விடும் குமாரை அதே ஒயின் ஷாப்பில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் அண்ணாச்சி ஆட்கள். அடிவாங்கிய குமாரும் (சுமார் மூஞ்சி குமாரு) அவன் நண்பன் குமாரும் (ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு) விடிய விடிய ராத்திரி முழுக்க சரக்கிற்காக ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பாக அலைகிறார்கள்.
நண்பர்களோடு குடித்துவிட்டு செல்லும் பாலா குடிபோதையில் எதிரில் வந்த வண்டியில் மோதிவிட, உயிருக்கு போராடுகிறார் ஒரு பெண்மணி. அந்த பெண்மணியின் கணவரும் அதே நேரத்தில் ஒரு ஒயின் ஷாப்பில் குடித்துக்கொண்டிருக்கிறார்.
அந்தப் பெண்மணிக்கு தேவைப்படும் ரேர் பிளட் குரூப் நம்ம சுமார் மூச்சி குமாரிடம் தான் இருக்கிறது. பாலாவும் அவர் நண்பர்களும் குமாரை வலைவீசி தேடுகிறார்கள்… குடியால் பல பிரச்சனைகள் வரும் என்பதும் குடிக்காமல் இருப்பதே நல்லது என்பதும் படத்தின் மெசேஜ். (ஒருவேளை இந்த விஷயத்தை இயக்குனர் ஒயின் ஷாப்பில் யோசித்திருப்பாரோ!)
இதற்கிடையில் குமுதாவை குமார் காதலிப்பதும், பாலாவை ரேணு காதலிப்பதும் என கலாட்டாவான காட்சிகள் வந்து போகிறது. தனக்கான ஓவர்களில் விடாமல் சிக்ஸ் அடிக்கிறார் சுமார் மூச்சி குமாராக வரும் விஜய் சேதுபதி. காலை ஐந்து மணிக்கே குமுதா வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து காத்திருப்பதும், குமுதா கோலம் போடும் போது, ஒவ்வொரு புள்ளிக்கும் 'அய்யோ… அய்யயோ… சூப்பரு…' என பாராட்டுவது, ஒவ்வொரு முறை பல்பு வாங்கும் போதும், 'ஆனா,
குமுதா ஹேப்பி அண்ணாச்சி' என்று அண்ணாச்சியிடம் கெத்து காட்டுவது என அரட்டைக் கச்சேரி நடத்துகிறார் விஜய் சேதுபது.
பசுபதி! ஒரு சிங்கத்தைக் கூட்டி வந்து புல்லை தீணியாக போட்டிருக்கிறார்கள். சுகர் இருக்குன்னு சொல்வதும், அவர் கைநீட்டி பேசும்போது கை ஆடுவதும் சமீபத்திய காமெடி படங்களில் வரும் அதே ரக காமெடி!
பாலாவாக வரும் அஷ்வினைவிட அவர் பாஸாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் கலக்குகிறார். மலையாளி என்ன தமிழன் என்ன… எல்லாம் மனுஷங்க தானே என அவர் சொல்வது டச்சிங்! அஷ்வின் – ஸ்வாதி காதல் காட்சிகள் போர் என்றாலும், அஷ்வின் ஸ்வாதியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யம்.
என் வீட்டுல நா இருந்தேனே என கானா பாலாவின் பாடலும், ப்ரே பண்ணுவேன் என்ற பாடலும் மெட்ராஸ் வாலிபர்களுக்கு நல்ல விருந்து, தியேட்டர் அதிரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் விஜய் சேதுபதியின் டான்ஸ் தூள். கானா பாடலுக்கு ராஜுசுந்தரம் வரும்போது, தேவாவின் கானா பாடல்களுக்கு அவர் டான்ஸ் ஆடி நடித்த ஞாபகம் வருகிறது. ஏனென்றால் உன் பிறந்தநாள்… என்ற பாடல் ஜப்பானில் படமாக்கப்பட்டதாம் – உண்மையாவா?
நீங்க ஸ்க்ரீன்ல வந்தாலே சிரிப்பு வருதுன்னு யாரோ சூரியிடம் பொய் சொல்லிட்டாங்க போல, மனிஷன் பாடாய் படுத்துகிறார். அவரும் என்னென்னவோ ட்ரை பண்றார். ஆனா, நமக்கு சிரிப்பு மட்டும் வரவே மாட்டேங்குது. கொலைசெய்து சைக்கிளில் சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு பேரும் செய்கிற டார்ச்சர் சொஞ்ச நஞ்சம் இல்லை. அந்த சூரியகாந்தி பூவோடு வலம் வரும் மதுமிதா கும்முன்னு இருந்தாலும், காமெடியக் காணோம்.
படத்தின் முடிவில் நமக்குக் கிடைகிற ஒரே ஒரு ஆறுதல் பரிசு க்ளைமாக்ஸ் – சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் கோகுல் (க்ளைமாக்சில் மட்டும்)
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? என்று ரசிகர் நொந்துபோய் சொல்லப்போவது நிச்சயம்…
Show commentsOpen link
No comments:
Post a Comment