மும்பை மாடல் அழகியை ஜோடியாக்கிய சந்தானம்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானத்திற்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் ராஜமவுலி இயக்கி 2010 ல் வெளியான மரியாதை ராமண்ணா படம்தான் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்று தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில், காமெடி நடிகர் சுனில் ஹீரோவாகவும், சலோனி ஹீரோயினாகவும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
மும்பை மாடல் அழகி தமிழில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி அஸ்னா ஜாவேரி நடிக்க உள்ளார். சந்தானம் ஏற்கனவே அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் ஹீரோவாக நடிக்கிறார்.
சந்தானம் தயாரிப்பு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை முதல் பிரதி அடிப்படையில் பி.வி.பி சினிமாஸ் நிறுவனத்திற்கு சந்தானம் தயாரிக்கிறார்.
முதன் முதலாக லட்டு காமெடியனாக மட்டுமே நடித்துவந்த சந்தானம், முதன் முதலாக நாயகனாக நடித்து தயாரித்த படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'. தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிக்கிறார்.
பிரம்மாண்ட செட் இப்படத்திற்காக பெரிய செட் ஒன்றை சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலையில் ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் போட்டிருக்கிறார்களாம். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்குகிறது.
தொடர்ச்சியாக தேதிகள் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமே தயாரிக்க இருப்பதால், தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் சந்தானம்.
காமெடி நடிகர் ஸ்ரீநாத் உன்னாலே உன்னாலே', 'வேட்டைக்காரன்' போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்குகிறார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
Show commentsOpen link
No comments:
Post a Comment