காதலில் விழுந்தார் 'ட்விட்டர்' புகழ் பாடகி சின்மயி : இளம் ஹீரோவை மணக்கிறார்!
by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...
பிரபல பாடகியும் 'ட்விட்டர்' சர்ச்சைப் புகழுக்கு சொந்தக்காரருமான சின்மயிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பிரபலமானவர் தான் சின்மயி. மணிரத்னம் டைரக்ட் செய்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
பாடிய முதல் பாடலுக்கே பல விருதுகளைப் பெற்ற சின்மயி தொடர்ந்து பல படங்களில் பாடினார். 'வாகை சூட வா' படத்தில் 'சர சர சாரக்காத்து' பாடலுக்காகவும் நிறைய விருதுகளைப் பெற்றார்.
பாடல் வாய்ப்புகள் இல்லாத காலகட்டங்களில் பூமிகா, பத்மப்ரியா, சமீரா, கங்கனா ரணாவத், சமந்தா, காஜல் அகர்வால் என்று பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியும், ஒரு பிரைவேட் தமிழ் எப்.எம் ரேடியோவில் ரேடியோ ஜாக்கியாகவும் தனது கேரியரை ரன் பண்ணிய சின்மயி பல மாதங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பரபரப்பான சில விஷயங்களை எழுதி அதன்மூலம் சில பிரச்சனைகளில் சிக்கினார்.
அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்த சின்மயி சமீபகாலமாக சைலண்ட்டாக எந்த வயலண்ட்டும் இல்லாமல் தனது சிங்கர் கேரியரை தொடர்ந்து வந்தார். அப்படிப்பட்ட சின்மயி தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டார்.
ஆமாம், 'மாஸ்கோவின் காவிரி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ராகுல் ரவீந்திரன் என்ற இளம் ஹீரோவை சின்மயி காதல் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம். இவர்கள் திருமணத்துக்கும் இரு வீட்டாரும் சம்மதித்து விட்டனர்.
மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமான ராகுல் தொடர்ந்து விண்மீன்கள், சூரிய நகரம் ஆகிய படங்களில் நடித்தார். லேட்டஸ்ட்டாக 'வணக்கம் சென்னை' என்ற படத்தில் நடித்துள்ள அவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
"என் மகள் சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் திருமணம் நடக்கப்போவது உண்மைதான். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் பிப்ரவரி மாதத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளோம். வெகுவிரைவில் மற்ற விவரங்களைச் சொல்கிறேன்" என்று தனது மகள் சின்மயி காதல் திருமணத் தகவல்களை வெளியிட்டிருக்கிறார் அவரது அம்மா பத்மாசினி.
496 total views, 496 views today
The post காதலில் விழுந்தார் 'ட்விட்டர்' புகழ் பாடகி சின்மயி : இளம் ஹீரோவை மணக்கிறார்! appeared first on Sound Camera Action.
Show commentsOpen link
No comments:
Post a Comment