இலங்கை ஆண்களில் 14.5 சதவீதத்தினர்
பலாத்காரம் செய்கின்றனர்;
ஆய்வு
இலங்கையில் 14.5
சதவீதத்துக்கு அதிகமானோர்
அல்லது 10 மனிதரில்
ஒருவருக்கு மேற்பட்டோர்
குறைந்தபட்சம்
ஒரு தடவையாவது பெண்
மீது வல்லுறவு செய்ததை ஒப்புக்கொண்டனர்
என பெண்களுக்கு எதிரான
வன்முறை எனும்
ஐ.நா ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் ஆறு நாடுகளை சேர்ந்த
பத்தாயிரம் ஆண்கள் பங்கேற்றனர்.
பெண்களுக்கு எதிரான
வன்முறை எவ்வளவு தூரம் பரவலாக
காணப்படுகின்றது, அதற்கான காரணம்
என்பவற்றை அறிவதற்காக பல
நாடுகளை உள்ளடக்கி நடைபெற்ற
முதலாவது ஆய்வு இதுவாகும்.
வல்லுறவை ஒப்புக்கொண்டவர்களில்
அரைவாசிக்கு சற்று குறைவானோர்
தாம் ஒரு தடவைக்கு மேல்
இவ்வாறு செய்வதாக கூறினார்.
பெண்களுக்கு எதிரான பலாத்காரம்
நாடுகளுக்கு இடையில்
வேறுபட்டு காணப்பட்டது.
பப்புவா நியூகினியில் 10 பேரில்
அறுவர் பெண்களை பலவந்தமாக
பாலுறவுக்கு உட்படுத்தியதாக
கூறினார்.
கம்போடியா,சீனா,இந்தோனிஷியா ஆகிய
நாடுகளில் ஆய்வுக்கு உட்பட்டோரில்
20 சதவீதம் தொடக்கம் 50 சதவீதம்
வரையிலானோர்
வல்லுறவு கொண்டவர்களாக உள்ளனர்
என்றும் இந்த
ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளில்
முழு ஆசிய மற்றும் ஆசிய பசுபிக்
பிராந்தியத்துக்கும் பொருந்தாது.
ஆயினும் ஆய்வுக்குட்பட்ட நாடுகளில்
பயனள்ள தகவல்களை தந்துள்ளது என்றும்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment