கடன் கொடுத்தவருக்கே கொலை மிரட்டல்வழக்கில் பிடிவாரண்ட் : தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!
by News Admin
Sound Camera Action | Tamil Cinema Latest News | Movie Reviews ...Today,
பிரபல பைனான்சியரும், விநியோகஸ்தருமான மதுரை அன்புவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
அஜீத் நடித்த காதல் கோட்டை, முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க மற்றும் வான்மதி, காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள், கடல் பூக்கள், வெற்றிக்கொடி கட்டு உட்பட 10–க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன்.
இவர் மீது மதுரையை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியன் 15.3.2006–ம் ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் "தனக்கும் சிவசக்தி பாண்டியனுக்கும் பணம் கொடுக்கல்–வாங்கல் உள்ளது என்றும், அது தொடர்பாக அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும்" அவர் குறிப்பிட்டு இருந்தார்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழக திரைப்பட வர்த்தக சங்க முகவரியை மையமாக வைத்து அந்த புகாரை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எழும்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சிவசக்தி பாண்டியன் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. கோர்ட்டின் உத்தரவை ஏற்று ஆயிரம் விளக்கு போலீசார் சிவசக்தி பாண்டியனை இன்று கைது செய்தனர்.
107 total views, 107 views today
The post கடன் கொடுத்தவருக்கே கொலை மிரட்டல்வழக்கில் பிடிவாரண்ட் : தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது! appeared first on Sound Camera Action.
Show commentsOpen link
No comments:
Post a Comment