ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை: அபிஷேக் பச்சன் Abishek bhachan says acting with Aishwarya notyet confirmed
Tamil NewsYesterday,
1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற இந்திய மாடல் அழகியான ஐஸ்வர்யா ராய், இந்தித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார்.
தமிழில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமான இவர், மேலும் பல திரைப்படங்களில் நடித்து பேரும் புகழும் பெற்றார். 'ஜோதா அக்பர்' போன்ற வரலாற்றுக் காவிய திரைப்படங்களிலும், தமிழில் எந்திரன் போன்ற போன்ற நவீன அறிவியல் திரைப்படங்களிலும் இவரின் நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட இவர், 2011-ம் வருடம் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்ததையடுத்து எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல், தன் குழந்தையை வளர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். ஆயினும், சில சமூக நலத் தொண்டு நிறுவனங்களின் தூதுவராகவும், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கான ஐ.நா. கூட்டமைப்பின் நல்லெண்ணத் தூதுவராகவும், பிரான்ஸ் தேசத்தின் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்தியத் திரையுலகின் பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றி வந்தார்.
தன்னுடைய மகள் வளர்ந்துவிட்ட சூழ்நிலையில், ஐஸ்வர்யா ராய் மீண்டும் திரையுலகில் நடிப்பதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
பிரபல இந்திபட இயக்குனர் அட்மன் பிரகலாத் காக்கரின் இயக்கத்தில் உருவாகவுள்ள ஹேப்பி அனிவர்சரி என்ற புதிய படத்தில் அபிஷேக் பச்சனின் ஜோடியாக நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயிடம் ஒப்பந்தம் செய்தாகிவிட்டது என்ற வதந்திகளும் உலா வந்தன.
இந்த தகவலை ஐஸ்வர்யா ராயின் கணவரும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.
இயக்குனர் அட்மன் பிரகலாத் ஐஸ்வர்யாவின் நீண்டகால நண்பர் என்ற வகையில் எனக்கும் அறிமுகமானவர். ரூ.65 கோடி செலவில் ஹேப்பி அனிவர்சரி என்ற பெயரில் புதிய படத்தை இயக்கப் போவதாக அவர் எங்களிடம் கூறினார்.
நாங்கள் அந்த படத்தின் முழு கதையை இதுவரை கேட்கவே இல்லை. இன்னும் இதுதொடர்பாக சில விவகாரங்கள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்கு முன்னதாக எதையும் எங்களால் உறுதிபடுத்த முடியாது. இவை எல்லாம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு அந்த செய்தியை நாங்கள் அறிவிப்போம் என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment