பொங்கலுக்கு அஜீத், விஜய்யுடன் மோதும் வடிவேலு
by abtamil
Tamil newsToday,
வரும் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்களுடன் வடிவேலுவின் தெனாலிராமன் போட்டி போடுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின்போது திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது பலரையும் கண்டமேனிக்கு தாக்கிப் பேசினார். இதையடுத்து அவரின் திரைவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இதையடுத்து அவர் 2 ஆண்டுகளாக படமே இல்லாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் ஹீரோவாக தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெருமாபாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்கு ரிலீஸ் தெனாலிராமன் படத்தை பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.
ஜில்லா நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகிறது.
வீரம் பொங்கலுக்கு விஜய் படம் தவிர அஜீத்தின் வீரம் படமும் ரிலீஸ் ஆகிறது.
அஜீத்-விஜய்யுடன் பொங்கலுக்கு அஜீத், விஜய் படங்களுடன் வடிவேலுவின் படம் மோதவிருக்கிறது.
Show commentsOpen link
No comments:
Post a Comment