தமிழ் - Tamil:
இந்திய உளவுத்துறையால் இயக்கப்பட்ட #மெட்ராஸ் கபே இன்று வெளியானது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சற்று பின்னைடைவே. ஓரளவு ஈழத்திற்கு ஆதரவாக இந்தியர்கள் திரண்டு வரும் நிலையில், இன்று நாடு முழுவதும் #தமிழீழ #விடுதலை என்பது அவசியமற்றது, நியாயமற்றது என்ற கருத்தை மக்களின் மனதில் விதைத்துள்ளது இப்படம்.
தமிழகத்தில் தமிழில் எப்படியாவது வெளியிட வேண்டும் என்ற முயற்சி மட்டும் தோற்றுப்போனது. #இங்கிலாந்து #கனடா #மலேசியா போன்ற நாடுகளிலும் வெளியாகவில்லை என்பது ஆறுதல். எனினும் படத் தயாரிப்பாளர்களின் நோக்கம் இந்திய அளவில் நிறைவேறி உள்ளது .
#வடஇந்திய #செய்தி வலைத் தளங்களில் மெட்ராஸ் கபே ஒரு சிறந்த படம் என்றும் #தமிழர்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்கின்றனர் என்றும் பதிவு செய்துள்ளனர். பல வடநாட்டு மக்களும் படத்திற்கு ஆதரவாக கருத்தை பதிவு செய்துள்ளனர்.
ஆனால்
தமிழ் நாட்டின் செய்தி #ஊடகங்கள் இப்படம் தமிழர்களுக்கு எதிரானது என்றே பதிவு செய்துள்ளன. தமிழக மக்களுக்கும் வடநாட்டு மக்களுக்கும் புரிந்துணர்வில் எவ்வளவு வேறுபாடுகள்? இனி வடநாட்டில்
தமிழர்கள் என்றாலே கேவலமானவர்கள், வன்முறையாளர்கள் என்ற மனநிலையை தான் நாம் பார்க்க இயலும். நம்மை முட்டாளாக்கி வெற்றி கண்டுள்ளது இப்படம். வடநாட்டினர் பலரும் தமிழர்களை எதிரியாகவே இனி பார்க்கக் கூடும்.
ஆகவே தோழர்களே தயவு செய்து ஆங்கில செய்தி ஊடகங்களில்
#தமிழர் தரப்பு நியாயங்களை ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள். இந்திய அமைதி படை குறித்தும் #ராஜீவ் குறித்தும் உண்மையை அவர்களுக்கு விளக்குங்கள். நம்மால் இதை தான் இப்போது செய்ய முடியும். நம்மால் படம் எடுக்க முடியாது. எடுத்தாலும் அதை வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் இந்தியர்கள். அதனால் விரைவாக நமது கருத்தை வடநாட்டு செய்தி ஊடங்களில் பதிவு செய்து நம் தரப்பு நியாயங்களை அவர்களுக்கு புரியவைப்போம். இந்திய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்.
No comments:
Post a Comment