இந்தோனேசியாவில் களைப்பை போக்கி களிப்பை ஏற்படுத்தும் மலைக்க வைக்கும் மலைப்பாம்பு மசாஜ் Indonesian SPA treats with Python massage
ஜகர்தா, நவ.4-
மனச் சோர்வா? உடல் களைப்பா? உடனடி நிவாரணம் பெற இளம் பெண்களிடம் மசாஜ் செய்து புத்துணர்வு பெறுங்கள் என்ற கவர்ச்சி வாசகங்களுடன் ஒரு கைபேசி எண்ணும் செய்தி தாள்களில் விளம்பரப் படுத்துவதுண்டு.
இத்தகைய விளம்பரங்களை காணும் சில சபலிஸ்ட் களின் லப்-டப் ஏக்கத்துக்கு எகிறி எகத்தாளம் போட தொடங்கிவிடும்.
மைதா மாவு நிறத்தில் தங்கச் சிலை போன்ற உடல்வாகு கொண்ட இளம் பெண்கள், வாழைத் தண்டு கால்களால் தங்களது முதுகில் ஊர்ந்து செல்வதை போலவும், வெண்டை விரல்களால் பிடரி பகுதியை நீவி விடுவதை போலவும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே கற்பனை செய்ய தொடங்கும் அவர்கள் உமிழ்நீர் சொட்டுவதை கூட மறந்துபோய் பகல் கனவில் மிதக்க தொங்கி விடுவார்கள்.
ஆனால், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகர்தாவில் ஒரு புதிய மசாஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விளம்பரங்களை பார்ப்பவர்கள் செய்தி தாளை தூக்கி எறிந்து விட்டு தலை தெறிக்க ஓட வேண்டிய நிலை ஏற்படலாம். வாடிக்கையாளர்களின் முதுகில் மலைப்பாம்புகளை ஊர்ந்து செல்ல வைத்து சிலிர்ப்பூட்டும் புதிய வகை மசாஜை இந்த ஸ்பா அறிமுகப்படுத்தியுள்ளது.
பாம்புகள் தங்களின் உடலின் மீது நெளிவதால் உண்டாகும் பயத்தின் விளைவாக மசாஜ் செய்து கொள்பவரின் உடலில் அட்ரனலைன் எனப்படும் ஒருவித ஹார்மோன் சுரக்கிறது.
மேலும், பாம்பின் கதகதப்பான தோல் மனித சருமத்தில் படுவதன் மூலமாக ஏற்படும் புதிய உணர்வின் பயனாக நமது ரத்த சுழற்சியில் புதிய வேகம் பிறக்கிறது.
மேற்கண்ட பலன்களுக்காக இந்த மலைப்பாம்பு மசாஜ் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இதற்காக சுமார் 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் இந்த மசாஜ் பார்லரில் விஷத் தன்மையற்ற மலைப்பாம்புகளே பயன்படுத்தப்படுகின்றன.
வாடிக்கையாளர்களிடம் பாம்புகள் எல்லை மீறாமல் இருக்க தேர்ச்சி பெற்ற உதவியாளர்கள் உடன் இருந்து கண்காணிப்பார்கள்.
சாதாராண மசாஜ் பார்லரில் செய்வது போல் மசாஜ் செய்யும் நபரிடம் வாடிக்கையாளர்கள் சில்மிஷம் செய்ய நினைத்தால்... மலைப்பாம்புக்கு குர்குர்ரே ஆகி மண்டையைப் போட வேண்டியது தான்.
...
shared via
No comments:
Post a Comment