சார்ஜா: பழுது பார்க்கும் போது லிப்ட் மேலே விழுந்து இந்தியர் பரிதாப பலி Indian killed in Sharjah lift accident
சார்ஜா, நவ.4-
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஷைஜோ. சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூன்றாவது மாடியில் லிப்ட்டை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேகமாக இறங்கி வந்த லிப்ட் அவர் மீது மோதியது.
உடல் நசுங்கிய நிலையில் லிப்ட்டின் அடியில் சிக்கிக்கொண்ட ஷைஜோவை காப்பாற்ற சக ஊழியர்கள் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனையடுத்து, அவர்கள் போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த மீட்பு படையினர் ஷைஜோவை வெளியே எடுத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிர் பிரிந்து சில நிமிடங்கள் ஆகிவிட்டதாக தெரிவித்தனர்.
விபத்து நடந்த உடனேயே தகவல் அளிக்காமல் சகபணியாளர்கள் தாமதம் செய்ததால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என அல்ஹீரா போலீஸ் நிலைய மேஜர் அல் நக்பி என்பவர் கூறினார்.
...
shared via
No comments:
Post a Comment