13ம் தேதி 'பாண்டியநாடு' ஆடியோ வெளியீடு
by admin
TamilSpyToday
நடிகர் விஷால், தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம்' மூலம் முதன்முதலாக தயாரித்துள்ள படம் 'பாண்டிய நாடு'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்கிவுள்ளார்.
டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக் சமீபத்தில் சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த பாடல் ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மொத்த பாடல்களையும் வருகிற 13-ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இந்த விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
விஷால் நடிக்க, சுந்தர்.சி. இயக்கியிருக்கும் 'மதகஜராஜா' படம் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக இருந்து வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் விஷாலின் 'பாண்டிய நாடு' படத்தை வரும் தீபாவளிக்கு திரையிட உள்ளனர்.
Show commentsOpen link
No comments:
Post a Comment