தினசரி செய்திகள்

Friday, August 30, 2013

நமது கல்வி முறை Message from தமிழால் இணைவோம் study method

தமிழால் இணைவோம்:
நமது கல்வி முறை எந்த லட்சணத்தில் எவ்வளவு கேவலமான நிலையில் இருக்கிறது என்பதற்கு என் சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன்,, புரிந்து கொள்ளுங்கள்,,

நான் இளங்கலை (உலோகவியல்) படித்தபோது 'மெட்டலர்ஜிக்கல் தெர்மோடைனமிக்ஸ்' (Metallurgical Thermodynamics) என்று ஒரு பாடம் உண்டு, ஒரு முறை கூட வகுப்பை கவனித்தது கிடையாது, ஏனென்றால் கவனித்தாலும் புரியாத வகையில் நடத்தப்பட்டது என்று சொல்வதை விட பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கே அது புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும், ஒன்றும் புரியாத மற்றும் சுத்தமாக படிக்காத காரணத்தினால் நான் 'செமெஸ்டர்' இறுதி பரீட்சை எழுதவே செல்லவில்லை, மேலும் எனக்கும் என் நண்பர்களுக்கும் 'இன்டெர்னல்' மார்க் ஐந்து கூட இல்லை, ஆனாலும் எங்கள் 'கேங்'கில் இருக்கும் ஒரு நண்பன் மட்டும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இரண்டே இரவுகளில் தன்னால் முடிந்ததை மட்டு மனப்பாடம் அடித்து பரீட்சை எழுதி வந்து விட்டான், 'எக்ஸ்டேர்ணலில்' ஜஸ்ட் பாஸ் ஆகி விட்டாலும், 'இண்டர்ணலில்' போதிய மதிப்பெண் இல்லாததால் அவனும் பெயிலாகி விட்டான்,,,

அடுத்த செமெஸ்டர் வந்தது, எங்களுக்கு அது அப்போது அரியர் பேப்பர், வழக்கம் போல் ஒரே இரவில் படித்து விடலாம் என்று நினைத்து புத்தகத்தை எடுத்தால் சத்தியமாக ஒன்றும் புரியவில்லை, சரி அடுத்த செமேச்டரில் முன்னதாகவே படித்து தெரிந்து கொண்டு எழுதி பாஸ் ஆகிடலாம், ஒரு தடவ வச்சா என்ன ரெண்டு தடவ வச்சா என்ன ??? அரியர் அரியர் தான என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிவிட்டு பரிச்சைக்கு 'ஸ்கூட்' (ரம்மி விளையாட தெரிந்தவர்களுக்கு புரியும்) விட்டு விடுவதாக முடிவு செய்து விட்டு சென்று விட்டேன்.

அடுத்த நாள் மதியம் சரியாக பரீட்சைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக, போன செமேச்டரில் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதிய அதே நண்பன் என்னை தேர்வுக்கு வருமாறு வற்புறுத்தி கொண்டே இருந்தான்,, "ஒன்னுமே தெரியாம அங்க வந்து என்னடா செய்ய போறேன்,, விடு அடுத்த செமேஸ்டர்ல முன்னாடியே எல்லாத்தையும் படிச்சு எழுதிடுறேன்" என்று நான் கூறியும் அவன் விடுவதாக இல்லை,, "தயவு செஞ்சு எனக்கு கம்பெனி குடுக்க வா மாமா,, அரியர் பேப்பர் எழுத தனியா போனாலே ரொம்ப கேவலமா பாக்குறானுங்க" என்று எவ்வளவோ அவன் சொல்லி பார்த்தும் நான் மசியவில்லை, ஒன்னும் தெரியாம அங்க வந்து சும்மா உக்காந்து இருக்குறது நான் ரூம்ல நிம்மதியா படுத்து தூங்குவேன் என்று சொல்லி பார்த்தேன், என் நண்பன் விடுவதாக இல்லை, உனக்கு ரெண்டே ரெண்டு 'ப்ராப்ளம்' சொல்லித்தாரேன் அத மட்டும் நல்லா பாரு கடைசி அஞ்சு வருஷ கொஸ்டின் பேப்பர்ல அந்த ப்ராப்ளம் தான் வந்துக்கிட்டே இருக்கு என்று சொல்லி எனக்கு அந்த இரண்டே இரண்டு கணக்கை மட்டும் எப்படி 'சால்வ்' செய்வது என்று பத்தே நிமிடத்தில் சொல்லி குடுத்தான், அவனின் நிர்பந்தத்தால் பரீட்சைக்கு சென்றேன்,

கேள்வி தாளை வாங்கி பார்த்தால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை, அவன் சொல்லி தந்த இரண்டு ப்ராப்ளம்ஸ் நான்கு பெரிய கேள்விகளாக மொத்தம் அறுபது மதிப்பென்களுக்கு வந்திருந்தது இன்னொரு பெரிய கேள்வி +2 கெமிஸ்ட்ரியில் படித்தது, ஒரு மணி நேரத்தில் மிகச்சரியாக ஐந்து கேள்விகளையும் நொறுக்கி எடுத்து விட்டேன், நான் எதுவும் படிக்காததால் எனக்கு எந்த குழப்பமும் இல்லை, தெளிவாக அவன் சொல்லி தந்தது தான் நினைவில் இருந்தது, தேர்வு முடிந்த வெளியே வந்த எனக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை, சொல்லி குடுத்த நண்பனோ சரியாக செய்யவில்லை, எந்த கணக்கிற்கும் விடை சரியாக வரவில்லை என்று வருத்தமாகவே இருந்தான், என் சந்தோசம் அவனக்கு அப்போது மிகுந்த துக்கத்தை கொடுத்தது, ரிசல்ட் வந்தது, அவன் 'எக்ச்டர்ணலில்' ஜஸ்ட் பாஸ் ஆகி இண்டர்ணலில் போதிய மதிப்பெண் இல்லாமல் பெயிலாகி இருந்தான், நான் எக்ச்டர்ணலில் மட்டும் 60 மதிப்பெண்கள் எடுத்து கோலாகலமாக பாஸ் ஆகி இருந்தேன், "தூங்கிக்கிட்டு இருந்த உன்ன தட்டி எழுப்பி சொல்லி குடுத்தேன் பார்த்தியா அது என் தப்பு" என்று நொந்து கொள்வதை தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை,,

அவ்ளோ தான் நம்ம கல்வி திட்டம்,, இது ஒரு சுயநல கல்வி திட்டம் என்று தான் சொல்ல வேண்டும், இங்கு எதுவும் புரியாவிடிலும் மிக மிக ஈசியாக பாஸ் ஆகி விடலாம்,,,, புரிதல் ஏற்படுத்தும் கல்வி முறை நம்மிடம் இல்லை,, எப்படி மதிப்பெண்கள் வாங்கி நல்ல வேலையை வாங்குவது என்ற பயிற்சி முறை தான் நமது கல்வி முறை, இங்கு புகட்டப்படுவது கல்வி அல்ல,, பயிற்சி,,


@ சகலகலா ஜீன்ஸ்

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts