Img மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி Malaysia Open Saina Sindhu first round win
கோலாலம்பூர், ஜன. 15-
இந்திய பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியுள்ளனர்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் மலேசிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் 8ம் தரநிலை வீராங்கனையான சாய்னா, இந்தோனேசியாவின் ஹெரா தேசியை 21-10, 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில், இந்தோனேசியாவின் லிண்டாவேனியை எதிர்கொண்ட பி.வி.சிந்து, 21-17, 21-18 என்ற செட்கணக்கில் போராடி வென்றார்.
சாய்னா அடுத்த சுற்றில் சீனாவின் யாவோ சூயியையும், 11-ம் தரநிலை வீராங்கனையான சிந்து 6-ம் தரநிலையில் இருக்கும் யியோன் ஜு பீயையும் (கொரியா) சந்திக்க உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆனந்த் பவார் மற்றும் குருசாய்தத் ஆகியோர் தங்கள் முதல் சுற்றுகளில் தோல்வியடைந்தனர்.
...
No comments:
Post a Comment