Img கர்நாடகாவில் மந்திரிபதவி வேண்டி மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி Unhappy Cong MLAs put pressure for ministerial berths
பெங்களூர், ஜன. 6-
கர்நாடகாவில் கடந்த மே மாதம் முதல் முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செலுத்திவருகிறது. இந்த அரசின் மந்திரி சபை சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் கரைபடிந்த எம்.எல்.ஏ.க்களான டி.கே. சிவக்குமார் மற்றும் ரோஷன் பெய்க் ஆகியோரை சித்தராமையா தனது கேபினட் மந்திரிசபையில் சேர்த்துகொண்டார்.
இதையடுத்து ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் ராணிபென்னூர் கே.பி. கோலிவாட் மற்றும் அப்சல்பூர் மல்லிகையா குட்டேதார் ஆகியோர் தங்களுக்கும் மந்திரி பதவி வேண்டும் என்று முதல் அமைச்சர் சித்தராமையாவிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான திக்விஜய் சிங்கை அந்த எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தங்களது வருத்தங்களை பகிர்ந்துகொண்டனர். திக்விஜய் சிங்கும் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
...
No comments:
Post a Comment