தினசரி செய்திகள்

Thursday, September 26, 2013

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி: உலகக் கோப்பை கனவு தகர்ந்தது Asia Cup hockey Indian women lose to Korea in semis

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா தோல்வி: உலகக் கோப்பை கனவு தகர்ந்தது Asia Cup hockey Indian women lose to Korea in semis
Tamil NewsToday, 05:30

கோலாலம்பூர், செப். 26-

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான 8-வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் கோப்பை வென்றால் மட்டுமே, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க முடியும் என்பதால் இந்திய அணி, தீவிர பயிற்சியுடன் களமிறங்கியது.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி 2ம் இடத்தைப் பிடித்ததால் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கொரிய அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கொரிய அணி 2-வது நிமிடத்தில் முதல் கோலையும், 9-வது நிமிடத்தில் 2-வது கோலையும் அடித்து முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பதிலடி கொடுத்த இந்திய வீராங்கனைகள் கோல்கள் அடிக்க கடுமையாக போராடினர். அப்போது 41-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ரிது ராணி கோலாக்கினார். அதன்பின்னர் கோல் அடிக்க முடியவில்லை. எனவே இறுதியில் 1-2 என்ற கோல்கணக்கில் இந்தியா பரிதாபமாக தோற்றது. இதனால் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் கனவும் தகர்ந்தது.
...
Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts