மத்திய அரசு வழக்கறிஞரிடம் தொலைபேசியில், சோனியாவின் குரலில் பேசிய பெண் யார்? central govt lawyer phone speaking in the voice of like Sonia
Tamil NewsYesterday, 05:30
புதுடெல்லி, செப். 24-
மத்திய அரசு வழக்கறிஞரிடம் (அட்டர்னி ஜெனரல்) சோனியா காந்தி குரலில் தொலைபேசியில் ஒரு பெண் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2-ந்தேதி அமெரிக்கா சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, 11-ந்தேதி டெல்லி திரும்பினார். அவர் அமெரிக்காவில் இருந்த போது அட்டர்னி ஜெனரல் வாகன்வதிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் சோனியா காந்தியை போன்ற குரலில் பேசிய ஒரு பெண், 'தான் நியூயார்க்கில் இருந்து பேசுவதாகவும், நிலக்கரி சுரங்க முறைகேடு உள்ளிட்ட மத்திய அரசின் ஊழல் தொடர்பான வழக்குகளில் தங்களின் (அட்டர்னி ஜெனரல்) செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும், எனவே அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்து விலகும்படியும்' கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையை நேற்று தொடங்கினர். இதை உறுதிப்படுத்திய டெல்லி போலீசார், 'இந்த சம்பவம் தொடர்பாக அட்டர்னி ஜெனரல் புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளோம்' என்று கூறினர். டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருவதை உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவும் உறுதிப்படுத்தினார். விசாரணையில் அப்பெண் பொதுத்துறை நிறுவன அதிகாரி என்று தெரியவந்தது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், 'மத்திய அரசின் ஊழல் வழக்குகள் சம்பந்தமாக அட்டர்னி ஜெனரலிடம் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி விவாதித்து வரும் சம்பவங்கள் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக எத்தனை பேருடன் அட்டர்னி ஜெனரல் விவாதித்தார் என்பதை அவர் தெரியப்படுத்த வேண்டும்' என்றார்.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment