தினசரி செய்திகள்

Friday, September 27, 2013

சினிமா விழாவில் மிரட்டி ஆட வைக்கப்பட்ட நடிகைகள்? Tamil cinema dance program

சினிமா விழாவில் மிரட்டி ஆட வைக்கப்பட்ட நடிகைகள்?

by abtamil

சென்னையில் நடந்த சினிமா விழாவில் நடனமாட மாட்டேன் என்று கூறிய சில நடிகைகள் மிரட்டி ஆட வைக்கப்பட்டார்களாம். சென்னையில் சினிமா விழா ஒன்று கோலாகலமாக நடந்தது.

விழாவில் எனக்கு அழைப்பு வரவில்லை, உனக்கு அழைப்பு வரவில்லை என்று பலர் அலுத்துக் கொண்டனர். இந்நிலையில் விழாவில் நடனமாட சில முன்னணி நடிகைகள் மறுத்துவிட்டார்களாம். வழக்கமாக மேடை நிகழ்ச்சிகளில் ஆட நடிகைகளுக்கு பெரும் தொகை அளிக்கப்படும்.

ஆனால் இந்த விழாவில் ஆட பெரிய தொகை எல்லாம் கொடுக்கவில்லையாம். இதனால் பல நடிகைகளை நடனமாட மறுத்தார்களாம். அவ்வாறு மறுத்த நடிகைகளை மிரட்டி ஆட வைத்தார்களாம்.

அதிலும் ஆட மாட்டேன் என்று அடம்பிடித்த மங்கலகரமான ராய் நடிகையை மிரட்டி ஆட வைத்தார்களாம். மேலும் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து சொல்லும் நாட்டாமையின் மகளையும் கூட மிரட்டி ஆட வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

Show commentsOpen link

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts