ஒரு ஹீரோ நான்கு ஹீரோயின்! சேரன் இயக்கத்தில் சிம்பு!
by admin
TamilSpyYesterday,
சிம்பு தற்போது வேட்டைமன்னன், வாலு ஆகிய இரு படங்களில் நடித்துவருகிறார். கைவசம் இரு படங்கள் இருக்கிறதே தவிர திரைப்படத்தின் வேலைகள் நடப்பதாக தெரியவில்லை. அதிலும் ஹன்ஸிகாவோடு காதல் கைகூடிய பின் சிம்பு திரையுலகம் பக்கம் காணப்படுவதே இல்லை என்கின்றனர் திரையுலகினர்.
ஆனால் தற்போது சேரன் இயக்கத்தில் சிம்புவை நடிக்கவைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருவதாக பேசப்படுகிறது. மஞ்சு மனோஜ் நடித்த பொடுகடு என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யும் முடிவிலிருக்கும் தயாரிப்பாளர் சிரிஷா ஸ்ரீதர் சிம்புவை ஹீரோவாக நடிக்கவைக்க விருப்பப்படுகிறாராம். மேலும் இந்த கதைக்கு தமிழ் இயக்குனர்களில் சேரனைத் தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளதாம்.
ஹீரோவை நான்கு ஹீரோயின்கள் காதலிக்கும் கதை தான் பொடுகடு திரைப்படத்தின் கதையாம். கதையை கேட்டதும் இதற்கு சிம்பு தான் கரெக்ட் சாய்ஸ் என்று ரசிகர்கள் நினைக்கலாம். சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் கதை கிட்டத்தட்ட இதே மாதிரியானது என்பதால் அதே காரணத்திற்காகத்தான் இயக்குனர் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரா? என்கிறது கோடம்பாக்கம்.
Show commentsOpen link
No comments:
Post a Comment