கொடைக்கானலில் ஆடிப்பாடும் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா
by abtamil Tamil newsToday,
'எதிர்நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகிய தொடர் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'மான் கராத்தே'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். மேலும், நாசர், வித்யூத் ஜம்வால் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் உடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பதோடு, கதை மற்றும் திரைக்கதையையும் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது.
தற்போது இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நாளை முதல் கொடைக்கானலில் தொடங்க இருக்கின்றனர். இங்கு சிவகார்த்திகேயனும், ஹன்சிகாவும் இணைந்து நடனமாடும் ஒரு பாடலும், சில காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து 45 நாட்கள் தொடர்ச்சியாக பெங்களூரில் படப்பிடிப்பை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
Show commentsOpen link
No comments:
Post a Comment