மகாராஷ்டிராவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி Chopper crash lands in Thane 5 dead
Tamil NewsToday,
மும்பை, செப். 29-
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று அவுரங்கபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் 5 பேர் பயணம் செய்தனர். அப்போது ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தானே அருகேயுள்ள முர்பாத்டேசில் என்ற இடத்தில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடிவு செய்யப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. உடனே சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. என்ஜீனில் உள்ள உயர் அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்கான காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
...
Show commentsOpen link
No comments:
Post a Comment