அஞ்சலி – செருப்பால் அடிப்போம்! இயக்குனர் கொதிப்பு!
திடீரென்று காணாமல் போய்விட்டதால் தமிழ்த்திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அஞ்சலி, தற்போது தெலுங்கில் நடித்து வந்த திரைப்படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிம்மதியாக வலம் வருகிறார் . ஆனால் தமிழில் அஞ்சலியை வைத்து 'ஊர் சுற்றி புராணம்' படம் எடுத்த இயக்குனர் களஞ்சியமோ பிரச்சனைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று(30.10.13) நடந்த 'வலியுடன் ஒரு காதல்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய களஞ்சியம் " சிறு பட தயாரிப்பாளர்களுக்கு திரையுலகில் சரியான ஆதரவு இல்லை. தயாரிப்பாளர்களுக்கென சங்கம் இருந்தும் நான் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறேன். சிறு பட தயாரிப்பாளர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையில் முதலீடு செய்து படம் எடுக்கிறோம். ஆனால் அந்த கஷ்டம் தெரியாமல் அஞ்சலி போன்ற நடிகைகள் ஓடி ஒளிந்துகொண்டது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. என் படம் பாதியில் நிற்கிறது. அஞ்சலி ஹைதராபாத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். அஞ்சலி இப்போது எங்கே இருக்கிறார் என்றே எனக்கு தெரியவில்லை" என மிகவும் வருதி பேசினார்.
இயக்குனர் மு.களஞ்சியத்தை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவரான ஜாக்குவார் தங்கம் "ஒரு கலைஞன் இந்த அளவுக்கு வேதனையாக பேசுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. கலைஞர்களின் கஷ்டம் புரியாமல் ஓடி ஒளியும் நடிகைகளை செருப்பால் அடிக்கவேண்டும். அஞ்சலி எங்கு ஓடிப்போய் ஒளிந்திருந்தாலும் பிடித்து வந்து களஞ்சியம் படத்தில் நடிக்கவைக்கவேண்டும். அப்போது தான் இனி வரும் நடிகைகள் ஒழுங்காக இருப்பார்கள். அஞ்சலி இங்கு வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது படத்திற்கு இதுவரை ஆன செலவை கொடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்" என்று கூறினார்.
shared via
No comments:
Post a Comment