என்னை மிருகத்தனமாக தாக்கிய கற்பழிப்பு குற்றவாளியை அடித்து உதைக்க அனுமதி தாருங்கள்: நீதிபதி முன் பெண் கதறல் Allow me to kick off the torture criminal Judge prior girl Tears
மும்பை, அக். 31–
மும்பை சக்தி மில்ஸ் காம்பவுண்டில் சில மாதங்களுக்கு முன்பு பெண் போட்டோ கிராபர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் போட்டோகிராபரை கொடூரமாக கற்பழித்தது.
டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டது போல் மும்பையில் பெண் போட்டோகிராபர் கற்பழிப்பு சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மும்பை விரைவு கோர்ட்டில் நடந்து வருகிறது.
நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்த போது திடீர் என்று 18 வயது இளம் பெண் வந்து நீதிபதியிடம் தானும் இந்த 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டேன் என்று பரபரப்பு புகார் கூறினார்.
தான் டெலிபோன் ஆப்ரேட்டராக வேலை பார்ப்பதாகவும், கடந்த ஜூலை 31–ந் தேதி சக்தி மில்ஸ் காம்பவுண்டு பகுதிக்கு தனது நண்பருடன் சென்ற போது 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப்போட்டு தன்னை கற்பழித்ததாக கூறினார்.
அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அந்தப் பெண் அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார்.
திடீர் என்று என்னை கற்பழித்த போது நான் அவர்களுடன் போராடினேன். கயவர்கள் என்னை மிருகத்தனமாக தாக்கினார்கள். அவர்களை இப்போது அடித்து உதைக்க அனுமதி தாருங்கள். (இவ்வாறு கூறிய அந்த பெண் நீதிபதியைப் பார்த்து கதறி அழுதார்)
பின்னர் கற்பழிப்பு குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியுமா? என்று நீதிபதி கேட்டார். அதற்கு அந்த பெண் எனக்கு அவர்கள் அருகில் செல்லவே பயமான இருக்கிறது என்றார்.
உடனே நீதிபதி அந்தப் பெண்ணை குற்றவாளிகளிடம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறினார். இதையடுத்து 5 பேரில் 4 பேர்தான் தன்னை கற்பழித்தவர்கள் என்று அடையாளம் காட்டினார். சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் இதர பொருட்களையும் அந்தப் பெண் அடையாளம் காட்டினார்.
இது பற்றி வக்கீல் உஜ்வல் நிகாம் கூறுகையில், ''18 வயது பெண் திடீர் என்று கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் கதறி தனக்கு நேர்ந்த கொடுமையை சொன்னார். அவரது வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளியை அடிக்க அனுமதி கேட்டார். அதற்கு கோர்ட்டு அனுமதிக்க வில்லை'' என்£றர்.
...
shared via
No comments:
Post a Comment