கற்பழிப்பு குற்றவாளிகளின் அந்தரங்க உறுப்பை வெட்டவேண்டும்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் அஜித் பவார் Ajit Pawar stokes row with his remarks on rapists
மும்பை, அக். 29-
மகராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஜல்னா மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களின் அந்தரங்க உறுப்பை வெட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். அவர்கள் மீது கருணை காட்டக்கூடாது, உடனே அவர்கள் தூக்கிலிடப்படவேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார்.
அஜித் பவாரின் இந்த கருத்துக்கு எதிர்க் கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீலம் கோரே கூறியதாவது:-
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் இயலாமையை மறைக்கும் நோக்கில், அஜித் பவார் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். பெண்களின் வாக்குகளை பெறவே அவர் இதுபோன்று கீழ்த்தரமாக அறிக்கைகளை வெளியிடுகிறார்.
முன்னர் மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக அவர் கூறிய கருத்துகளும் விவசாயிகளின் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அஜித் பவாரின் இந்த அறிக்கைகள் வெறும் கண் துடைப்பு வேலை.
இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடுவதை கைவிட்டு ஏழைகளின் உண்மையான பிரச்சினைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக செயல்படுத்தப்படாமல் உள்ள சட்டங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
shared via
No comments:
Post a Comment