தினசரி செய்திகள்

Thursday, October 24, 2013

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது: மத்திய அரசு டெண்டர் விட்டது world country from onion come Central Government Tender

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வருகிறது: மத்திய அரசு டெண்டர் விட்டது world country from onion come Central Government Tender

புதுடெல்லி, அக். 24–

நாடெங்கும் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. தலைநகர் டெல்லியில் நேற்று ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சில இடங்களில் ரூ. 120 ஆக விலை உயர்ந்தது.

சென்னையிலும் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்று மத்திய மந்திரி சரத்பவார் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிக அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும். அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வெங்காய அளவு கணிசமாக குறைந்து வருகிறது.

எனவே வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

மேலும் வெங்காய ஏற்று மதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வந்ததும் தட்டுப்பாடு நீங்கும். உடனடி தேவைக்காக ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காயம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு பாகிஸ்தான், ஈரான், எகிப்து, சீனா ஆகிய 4 நாடுகளில் இருந்து வெங்காயத்தை பெற திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த 4 நாடுகளிலும் ஒருகிலோ வெங்காயம் ரூ. 5 முதல் ரூ. 20–க்குள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை எடுக்கப்பட்ட கணக்கெடுப்புப்படி இந்தியாவில் முக்கியமான 57 நகரங்களில் வெங்காயம் விலை சராசரியாக ஒரு கிலோ ரூ. 70–க்கு விற்பனை ஆனது. டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் வெங்காயத்துக்கு உச்சக்கட்ட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த 3 நகரங்களிலும் இன்று ஒரு கிலோ வெங்காயம் ரூ. 100–க்கும் அதிகமாக விற்கப்பட்டது.

ஜெய்ப்பூர், சண்டிகாரில் வெங்காய விலை ரூ. 90 ஆக உள்ளது. மும்பை, போபால், லக்னோ, சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80–க்கு விற்பனை ஆகிறது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts