தினசரி செய்திகள்

Saturday, October 26, 2013

பாசனத்துக்காக ஆழியாறு அணை 28–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Aliyaru Dam Opening on 28 for Irrigation Jayalalitha announced

பாசனத்துக்காக ஆழியாறு அணை 28–ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு Aliyaru Dam Opening on 28 for Irrigation Jayalalitha announced

சென்னை, அக்.26–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து ஆழியார் ஐந்து பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு அணையிலிருந்து ஐந்து பழைய வாய்க்கால்கள் மூலமாக இரண்டாம் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும் 28.10.2013 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் நிறைவு செய்யப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

shared via

No comments:

Post a Comment

My Blog List

Popular Posts

Popular Posts